முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காற்று மாசுவால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே நுரையீரல் பாதிப்பு அதிகம் - ஆய்வு

காற்று மாசுவால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே நுரையீரல் பாதிப்பு அதிகம் - ஆய்வு

காற்று மாசு

காற்று மாசு

  • Last Updated :
  • Tamil Nadu, India

காற்று மாசுவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா..? அப்படி இந்திய மக்கள் தொகையில் 63 சதவீதம் பேர் காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆண்களைக் காட்டிலும் காற்று மாசுவால் பெண்களுக்கே பாதிப்பு அதிகம் என சமீபத்தில் வெளியான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள ஐரோப்பிய சுவாசக் கழக சர்வதேச காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில் வாகனங்களிலிருந்து வெளியேறும் டீசல் புகையை சுவாசிப்பதால் பெண்களின் இரத்த செல்களில் மாற்றங்கள் உண்டாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் நடுத்தர வயதுடைய 5 ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களை ஆய்வு செய்ததில் ஆண் ,பெண் இருவருக்கும் காற்று புகையால் நோய் அழற்சி தொற்று, இதய நோய் போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். ஆனால் இவற்றை தவிற இன்னும் பல நோய்கள் பெண்களுக்கு ஏற்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

கனடாவின் வின்னிபெக்கில் உள்ள மனிடோபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹேம்ஷேகர் மகாதேவப்பா இந்த ஆராய்ச்சியை சமர்ப்பித்துள்ளார். மேலும் மானிடோபா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நீலோஃபர் முகர்ஜி மற்றும் கனடாவின் வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கிறிஸ் கார்ல்ஸ்டன் தலைமையிலான இரண்டு ஆய்வுக் குழுக்கள் இணைந்து இந்த ஆய்வை செய்துள்ளர்.

மகாதேவப்பா காங்கிரஸுக்கு கொடுத்த விளக்கத்தில் “ நாங்கள் ஆய்வு செய்ததில் பாலின அடிப்படையில் நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமாவில் வேறுபாடுகள் இருப்பதை அறிந்தோம். எங்களுடைய கடந்த ஆய்விலும் டீசல் வெளியேற்றும் புகையை சுவாசிப்பதால் நுரையீரலில் அழற்சி பாதிப்பு ஏற்படுவதும் , அதனால் உடல் எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாகிறது, மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது என வெளியிட்டோம். இந்த ஆய்வில் ஆண் , பெண் என தனித்தனியே அவர்களின் இரத்த செல்களை எப்படி பாதிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Also Read : சளி , இருமல் பிரச்சனைகளிலிருந்து நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்..!

பின் இந்த ஆய்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் 4 மணி நேரம் சுத்தமான வடிகட்டப்பட்ட காற்றை சுவாசித்தனர். பின் அதே நான்கு மணி நேரம் டீசல் புகை கலந்த காற்றை சுவாசித்தனர். பின் 24 மணி நேரத்திற்கு பின் அவர்களுடைய இரத்த மாதிரிகளை எடுத்து அவர்களின் இரத்த பிளாஸ்மாவை ஆய்வு செய்துள்ளது.

பிளாஸ்மா என்பது இரத்தத்தின் திரவ கூறு ஆகும். இது இரத்த அணுக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான புரதங்கள் மற்றும் பிற மூலக்கூறுகளை உள்ளடக்கியதாகும். லிக்விட் குரோமடோகிராபி-மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி எனப்படும் நன்கு பகுப்பாய்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டீசல் வெளியேற்றத்திற்கு பின் புரதங்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் பார்த்தனர். அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்றட்டிருந்த மாற்றங்களை கண்டறிந்துள்ளனர்.

அப்படி ஆண்கள் மற்றும் பெண்களின் பிளாஸ்மா மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்ததில் 90 புரதங்களின் அளவுகளின் கனிசமான வித்தியாசங்களை கண்டறிந்துள்ளனர். அந்த புரதங்களில் சில நோய் அழற்சி, சேதங்களை பழுது பார்த்தல், இரத்தம் உறைதல், இதய நோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகிவற்றை கட்டுப்படுத்தும் புரதங்களாகும்.

டீசல் வெளியேற்றத்தின் வெளிப்பாடு ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் உடலில் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் ஆண்களை விட பெண்களுக்கு காற்று மாசுபாடு மிகவும் ஆபத்தானது என்பதைக் காட்டுகின்றன.

"ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் பெண்களையும் ஆண்களையும் வித்தியாசமாக பாதிக்கும். இந்த டீசல் புகை சுவாசத்தால் சிகிச்சைகளுக்கு கூட பலன் அளிக்காத கடுமையான ஆஸ்துமாவால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். காற்று மாசுபாடு மற்றும் அவர்களின் சுவாச நோயைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும் மற்றும் சிகிச்சை செய்வதற்கும் சரியான தீர்வை கண்டறிவது அவசியம்.

Also Read :  பெண்கள் மெனோபாஸை நெருங்கும்போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்..?

மேலும் புரதங்களின் செயல்பாடுகளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோரானா ஆண்டர்சன் இந்த ஆய்வு பற்றி பேசிய போது ”காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு, குறிப்பாக டீசல் வெளியேற்றம், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் போன்ற நோய்களுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணி என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். அசுத்தமான காற்றை சுவாசிப்பதைத் தவிர்ப்பதற்கு தனிநபர்களாகிய நாம் செய்யக்கூடிய மாற்றங்கள் பெரும் பங்களிப்பாக மாறும். எனவே காற்று மாசுபாட்டின் மீது சில வரம்புகளை நிர்ணயித்து செயல்படுத்துவதற்கு அரசாங்கங்கள் சில கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.

top videos

    ஜோரானா மேலும் கூறினார், "காற்று மாசுபாடு மோசமான ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவுகிறது. டீசல் வெளியேற்றத்திற்கு உடல் எவ்வாறு பிரதிபலிக்கிறது மற்றும் அது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதற்கான சில முக்கியமான நுண்ணறிவை இந்த ஆய்வு வழங்கியுள்ளது."

    First published:

    Tags: Air pollution, Lungs health, Women Health