ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தை பெற்றெடுத்த பிறகு சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா? - உங்களுக்கான டிப்ஸ்..!

குழந்தை பெற்றெடுத்த பிறகு சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா? - உங்களுக்கான டிப்ஸ்..!

குழந்தை பிறந்த பின் தூக்கமின்மை

குழந்தை பிறந்த பின் தூக்கமின்மை

குழந்தை நினைத்த நேரத்தில் தூங்கும், நினைத்த நேரத்தில் விழித்துக் கொண்டிருக்கும். தூங்குவதற்கான குறிப்பிட்ட நேரம் இதுதான் என்று குழந்தைகளுக்கு கிடையாது. அதே சமயம், கணவன், மனைவி இருவருமே குழந்தை பராமரிப்பு பணியை சரி சமமாக பிரித்து செய்தால், தாய்மார்களுக்கான சுமை குறையும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அண்மையில் குழந்தையை பெற்றெடுத்த புதிய தாய்மாரா நீங்கள்? அல்லது வெகு விரைவில் குழந்தையை பெற்றெடுக்க உள்ள நிறைமாத கர்ப்பிணியா நீங்கள்? உங்கள் வீட்டின் புதிய ராஜகுமாரன் அல்லது ராஜகுமாரியை வரவேற்பது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். அவர்களின் வரவு உங்களுக்கு புது நம்பிக்கையையும், பிரகாசத்தையும் கொடுக்கக் கூடும்.

இருப்பினும், ஒரு குழந்தையை கண்ணும், கருத்துமாக வளர்த்தெடுப்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் கண் இமை அசைக்காமல் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அவ்வபோது பாலூட்டவதுடன், இயற்கை உபாதைகளை சுத்தம் செய்வதும் அவசியம்.

இது எல்லாவற்றையும் விட குழந்தை நினைத்த நேரத்தில் தூங்கும், நினைத்த நேரத்தில் விழித்துக் கொண்டிருக்கும். தூங்குவதற்கான குறிப்பிட்ட நேரம் இதுதான் என்று குழந்தைகளுக்கு கிடையாது. அதே சமயம், கணவன், மனைவி இருவருமே குழந்தை பராமரிப்பு பணியை சரி சமமாக பிரித்து செய்தால், தாய்மார்களுக்கான சுமை குறையும்.

பங்கிட்டு வேலை செய்யுங்கள் :

குழந்தையை வளர்த்தெடுக்கும் கடமை பெற்றோரில் இருவருக்குமே உண்டு. குழந்தைக்கு கவனம் எடுத்து, பாலூட்டுவது தாய்மார்களின் கடமை என்றாலும், மற்ற பணிகளில் கணவர் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு பாலூட்டும் பணி தாய் செய்தால், குழந்தையை தாளாட்டும் வேலையை தந்தை செய்யலாம். தாய் தூங்கும் சமயத்தில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை தந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குழந்தை தூங்கும் நேரத்தில் தூங்கலாம் :

குழந்தை தூங்கும் சமயம் பார்த்து தாயும் தூங்கினால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். குழந்தை தூங்குகின்ற சமயத்தில் பிற பணிகளை செய்ய திட்டுமிடுவதைக் காட்டிலும் நன்றாக தூங்கி ஓய்வெடுப்பது சிறப்பாக அமையும்.

ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் :

எப்போது தூங்க வேண்டும், எப்போது பால் குடிக்க வேண்டும் என்பதை குழந்தை தானே தீர்மானித்து கொள்ளும். இருப்பினும், வழக்கமாக ஒரு கால அளவை நீங்கள் பின்பற்றினால், ஒருசில நாட்களில் அதற்கு ஏற்றாற்போல குழந்தையும் மாறிவிடும். பின்னர் அதை கவனித்து கொள்வது எளிதாகிவிடும்.

ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் தானா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

உதவி கேளுங்கள் :

குழந்தையை பராமரிப்பது தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும் தயங்காமல் உதவி கேளுங்கள். உங்கள் கணவர் வேலைக்கு சென்றிருக்கும் பட்சத்தில், குடும்பத்தில் உள்ள ஒருவர் குழந்தையை பார்த்துக் கொண்டால், நீங்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

விருந்தினர்களை தவிர்க்கவும் :

குழந்தையை பார்ப்பதற்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரும் படையெடுத்து வருவார்கள். எனினும், உங்களுக்கு சௌகரியமாக இல்லை என்றால், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு வர வேண்டாம் என்று கனிவோடு தகவல் சொல்லி விடவும். குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள இது உதவிகரமாக இருப்பதுடன், நோய் தொற்றுகளில் இருந்தும் காக்க முடியும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Post Pregnancy Depression, Sleep deprivation