நீங்கள் குளிர் காலத்தில் மிகவும் சோர்வுடனும் சோம்பலாகவும் இருப்பது போல உணர்கிறீர்களா? ஆமெனில் நீங்கள் மட்டும் இப்படி இல்லை. குளிர் காலங்களில் இவ்வாறு சோம்பலாக இருப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை வல்லுனர்கள் விளக்கியுள்ளனர்.
பொதுவாக இப்படி குளிர் காலங்களில் சோர்வாக உணர்வது என்பதை பருவ கால சோர்வு என்று அழைப்பார்கள். பொதுவாகவே குளிர்காலங்களில் சூரிய வெளிச்சம் மிகவும் குறைவாக இருப்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். குளிர்காலத்தில் சோம்பல் அதிகம் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வல்லுனர்கள் நம்புகின்றனர்
குளிர்காலம் துவங்குவதில் இருந்து நம்முடைய உறங்கும் நேரத்தில் பல விதமான மாற்றங்கள் உண்டாகின்றன. முக்கியமாக சூரிய வெளிச்சம் குறைந்துள்ளதும், வெப்பநிலை குறைந்துள்ளதும் அதற்கு ஒரு காரணமாகும். மேலும் குளிர் காலங்களில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும். இது போன்ற காரணங்களினால் காலை நேரங்களில் தூங்கி எழும்போது உடல் அசாதாரண சோர்வுடன் காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும், உடல் சோர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. குளிர் காலங்களில் உடலில் இயற்கையாகவே ஊட்டச்சத்து குறைபாடுகளும், ஹார்மோன் மாற்றங்களும் உண்டாகின்றன. இதனை சீசனல் அஃபெக்டிவ் டிஸாடர்(SAD) என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடுகின்றனர். அதாவது பருவ காலங்களில் உண்டாகும் நோய்கள் என்று பொருள். அதிகமான உடல் களைப்பு, மயக்கம், உடல் சக்தியற்று இருத்தல் மனநிலையில் மாற்றம் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
Also Read : காரணமே இல்லாமல் மனச்சோர்வு அடைகிறீர்களா..? இந்த ஊட்டச்சத்து குறைப்பாடு இருக்கலாம்..!
ஆனால் இந்த பருவநிலை நோய்களுக்கான சரியான காரணம் இதுதான் என உறுதியாக எதையும் கூற முடியவில்லை. சூரிய ஒளி குறைவாக இருப்பது பல்வேறு காரணங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. சூரிய ஒளி குறைவாக இருக்கும் போது அது மூளையில் உள்ள ஹைப்போதாளமஸ் என்ற பகுதி வேலை செய்வதை பாதிக்கிறது. இதன் காரணமாக மெலட்டோனின் சுரப்பதில் பாதிப்பு ஏற்பட்டு, ஹார்மோன் சுரப்பதில் மாற்றம் உண்டாகிறது. இந்த மெலடோனின் தான் நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இந்த SAD குறைபாடு உள்ள நபர்கள் சாதாரண நபர்களை விட அதிக அளவு மெலட்டோனினை சுரப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையும் வல்லுனர்கள் வழங்கியுள்ளனர். உடல் சோர்வை குறைப்பதற்கு முடிந்த அளவு பகல் நேரங்களில் சூரிய வெளிச்சம் நம் மீது படுமாறு இருக்க வேண்டும். காலை எழுந்தவுடன் சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் நிற்பது நல்லது என கூறியுள்ளனர். சூரிய வெளிச்சம் இல்லை என்றாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட வெளிச்சத்திலாவது சிறிது நேரம் இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fatigue syndrome, Winter