சில அடி தூரம் நடந்து சென்றவுடன் உங்களுக்கு மூச்சு வாங்குவது அல்லது இரைப்பது குறித்து எத்தனை முறை நீங்கள் அச்சம் அடைந்திருக்கிறீர்கள்? லேசாக மூச்சு வாங்கினாலே நாம் உடனே அதை இதயம் அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை என நினைத்துக் கொள்கிறோம். மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல் வீட்டு முறை சிகிச்சைகளை நாமே எடுத்துக் கொள்கிறோம்.
மூச்சு இரைப்பு ஏற்படும் சில நபர்கள், அடுத்த சில நாட்களில் இதயத்தை நன்றாக வேலை செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், இது தவறானது.
மூச்சு இரைப்பது என்பது எண்ணற்ற காரணங்களாக நிகழும் பிரச்சினையாகும். இதன் பின்னணியில் உள்ள சரியான காரணத்தை நீங்கள் கண்டறிய வேண்டும் என்றால், மூச்சு இரைப்பு எதனால் ஏற்படுகிறது என்பதையும், எதை செய்யும்போது இது தூண்டப்படுகிறது என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
மூச்சு இரைப்பு என்றால் என்ன?
நம் உடல் சுவாசிக்க போதுமான காற்று கிடைக்காத போது மூச்சு இரைப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற சமயங்களில், நாம் வேகமாகவும், ஆழமாகவும் மூச்சு இழுத்து விடுகிறோம். சாதாரணமான உடற்பயிற்சியை செய்யும் சமயங்களில், படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது சமமான தரையில் நடக்கும்போது கூட உங்களுக்கு மூச்சு இரைப்பு ஏற்படலாம். இதனால், ஒருவரது இயல்பான நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.
காரணங்கள் என்ன?
மூச்சு இரைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும், மருத்துவம் சாராமலும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மிக உயரமான பகுதிகளுக்குச் செல்லும்போது அல்லது காற்றின் தரம் சீராக இல்லாத சூழலில் ஒருவருக்கு மூச்சு இரைப்பு பிரச்சினை ஏற்படக் கூடும். அதிக வெயில் அல்லது மிகுதியான உடல் இயக்கம் ஆகியவை காரணமாகவும் இது ஏற்படலாம்.
Also Read : உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் ஏபிசி ஜூஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
இதேபோன்று மருத்துவ ரீதியாக ஆஸ்துமா, அலர்ஜி, இதயநோய்கள், நிமோனியா, உடல் பருமன், டிபி போன்ற காரணங்களாலும் மூச்சு இரைப்பு ஏற்படும். சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாகவும் மூச்சு இரைப்பு பிரச்சினை ஏற்பட்டது.
எது இயல்பானது, எது அபாயகரமானது
இரவு முழுவதும் உறங்காமல் இருப்பது அல்லது அதிக வெயில் போன்ற காரணங்களால் மூச்சு இரைப்பு ஏற்பட்டால் அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. அதே சமயம், சாதாரண சமயத்திலும் மூச்சு இரைப்பு ஏற்பட்டால், அது இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் காரணமாக இருக்கலாம். உரிய பரிசோதனைகளை செய்யாவிட்டால் பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
Also Read : நீரிழிவு நோயாளிகள் என்ன உணவுகள் சாப்பிடலாம்
இதுபோன்ற சமயங்களில் பல்மோனரி என்னும் நுரையீரல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இதில் இயல்பாக இருந்தால், தொடர்புடைய நபரை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து, அவ்வபோது இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.