இன்றைக்கு என்ன தான் மருத்துவ ரீதியாக நாம் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டிருந்தாலும் அதற்கேற்றால் போல் தான் பல புதிய புதிய நோய்களினாலும் மக்கள் பாதிப்படைகின்றனர். குறிப்பாக மாறி வரும் கலாச்சாரம், உணவு பழக்க வழக்கங்களால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிந்து மாரடைப்பு ஏற்படும் சூழலும் நிலவுகிறது. இது மட்டுமின்றி கொழுப்பு கல்லீரல் நோயும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
பொதுவாக கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புகள் படியும் ஒருவகை நிலையைத்தான் கொழுப்பு கல்லீரல் என்கிறோம். மது அருந்துவதால்தான் கல்லீரல் பாதிக்கக்கூடும் என்பார்கள். ஆனால் நம்முடைய நவீன வாழ்க்கை முறையால் ஆல்கஹாலிக் ஃபாட்டி லிவர்( Non- alcoholic fatty liver disease (NAFLD)) பாதிப்பும் நமக்கு ஏற்படுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
கல்லீரல் கொழுப்பு நோய் குறித்த ஆய்வு..
இந்த சூழலில் தான் சமீபத்தில் லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் லொசேன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ரோஜர் வில்லியம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெபடாலஜி விஞ்ஞானிகள் குழு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டால் என்னென்ன? உடல் நலப்பிரச்சனைகளையெல்லாம் நாம் சந்திக்க நேரிடும் என்பது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினர். இதற்கான எலிகள் மீது சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு உட்படுத்திய எலிகளுக்கு அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் தரப்பட்டது.
அதிக கொழுப்பு உட்கொள்ளும் அனைத்து எலிகளும் பருமனாக மாறியது மற்றும் நான் ஆல்கஹாலிக் ஃபாட்டி லிவர் (NAFLD) மற்றும் மூளை செயலிழப்பு உருவானது கண்டறியப்பட்டது. இது மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைப்பதோடு மூளை திசுக்களின் வீக்கத்தை ஏற்படுத்தியது. இதோடு அதிக கொழுப்பு உட்கொள்ளும் எலிகள் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளையும் உருவாக்கியதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும் ரோஜர் வில்லியம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெபடாலஜியின் கல்லீரல்-மூளை அச்சு குழுவின் துணைக்குழு தலைவராக இருக்கும் ஹட்ஜிஹம்பி கூறுகையில், புதிய கண்டுபிடிப்பு உடல் பருமனைச் சமாளிப்பது மட்டுமல்லாமல் பாதுகாக்கும் கொழுப்புகள் மற்றும் சர்க்கரையின் எண்ணிக்கையைக் குறைப்பதை வலியுறுத்துகிறது. இதோடு இந்த புதிய கண்டுபிடிப்பு உடல் பருமனைச் சமாளிப்பது மட்டுமல்லாமல், பாதுகாக்கும் கொழுப்புகள் மற்றும் சர்க்கரையின் எண்ணிக்கையை குறைப்பதை வலியுறுத்துகிறது. NAFLD மக்கள்தொகையில் சுமார் 25% பேரை பாதிக்கிறது மற்றும் நோயுற்ற பருமனான மக்களில் இந்த எண்ணிக்கை 80% வரை ஆபத்தான நிலையைக் கொண்டிருப்பது தெரியவந்தது.
Also Read : வாய் வறட்சி... குமட்டல்... காலையில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்க வாய்ப்பு..!
எனவே ஆரோக்கியமான உணவு மற்றும் உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை நீங்கள் மேற்கொண்டாலே எதிர்காலத்தில் கல்லீரல் மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், வயதானக் காலத்தில் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் டிமென்ஷியா போன்ற நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். இனிமேலாவது தேவையற்ற உணவுமுறைகளை நீங்கள் பின்பற்றாமல் ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தினமும் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தேவையற்ற உடல் நலப் பாதிப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brain Health, Liver Disease