ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Fasted Cardio : வெறும் வயிற்றில் கார்டியோ பயிற்சி செய்வது நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

Fasted Cardio : வெறும் வயிற்றில் கார்டியோ பயிற்சி செய்வது நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

வெறும் வயிற்றில் கார்டியோ பயிற்சி

வெறும் வயிற்றில் கார்டியோ பயிற்சி

பொதுவாக நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கும் பொழுது, உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் அதிக கலோரிகள் எனர்ஜியாக மாறி உங்களை நாள் முழுவதும் இயல்பாக செயல்பட வைக்கும். இதே போல தான் நீங்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் போதும் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைந்து உங்களுக்கு ஆற்றலை கொடுக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

உடல் எடை குறைப்பு, உடல் தசைகளை வலுப்படுத்தல் என்று பலவிதமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன. நீங்கள் எந்த விதமான உடற்பயிற்சி செய்தாலும் அதற்கு ஏற்றார் போல உணவுகளை சாப்பிடுவதும் அவசியம். உதாரணமாக தசையை வலுப்படுத்துவதற்கு அதிகமான புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். எடை குறைப்பதற்கு கார்டியோ மட்டுமே இன்டர்சிட்டி உடற்பயிற்சிகள் செய்வது அதிக பலன் அளிக்கும், அதே நேரத்தில் குறைவான கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் முன்பும் பின்பும் உங்களுக்கு பிடித்த உணவுகள் அல்லது பானங்கள் அல்லது எனர்ஜி ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பீர்கள். ஒரு சிலர் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு மிகவும் லைட்டாக சாப்பிடுவார்கள். வெகு சிலர் மட்டுமே உணவை தவிர்ப்பார்கள். சமீபத்தில் ஃபாஸ்டட் கார்டியோ என்று வெறும் வயிற்றில் செய்யக்கூடிய கார்டியோ உடற்பயிற்சிகள் அதிகமாக பலன் அளிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

கார்டியோ பயிற்சிகள் மற்றும் fasted கார்டியோ :

கார்டியோ உடற்பயிற்சிகள் தலை முதல் கால் வரை உங்கள் உடலை சுறுசுறுப்பாக்கி உடலில் சேர்ந்திருக்கும் கலோரிகள் எரியவும் கொழுப்பு குறையவும் உதவுகிறது. பொதுவாக கார்டியோ உடற்பயிற்சி செய்யும் பொழுது அன்று கொஞ்சம் சோர்வாக இருக்கும. இந்த நிலையில் வெறும் வயிற்றில் காலையில் எந்த உணவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்யமுடியுமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் fasted கார்டியோ என்பது வழக்கமாக செய்யும் கார்டியோ உடற்பயிற்சிகளை விட அதிகமாக பலன் அளிக்கிறது. நீங்கள் செய்யக்கூடிய பல வகையான கார்டியோ உடற்பயிற்சியை காலையில் எழுந்தவுடன் எந்த உணவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் சாப்பிடுவதுதான் ஃபாஸ்டட் கார்டியோ பயிற்சியாகும்.

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றுதான் மருத்துவர்கள் முதல் நிபுணர்கள் வரை பெரும்பாலும் பரிந்துரைக்கின்றனர். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது எண்டார்ஃபின்ஸ் உள்ளிட்ட உடலுக்கு தேவையான ஹாப்பி ஹார்மோன்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் ஆற்றலை அதிகரித்து, உடலையும் மனதையும் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

அதாவது உடற்பயிற்சி செய்வது உங்களை சோர்வாகச் செய்யாது, அதற்கு மாற்றாக நீங்கள் அதிக எனர்ஜியுடன், புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். எனவே காலை நேரத்தில் ஃபாஸ்டட் உடற்பயிற்சி செய்வது கூடுதலாக எடை குறைக்க முடிவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் நாள் முழுவதும் பல மணிநேரங்களுக்கு சோர்வாகாமல் பணியில் ஈடுபடவும் உதவும்.

தொங்கும் சதையை குறைத்து ஸ்லிம்மான கைகளைப் பெற உதவும் டயட் டிப்ஸ்..!

ஃபாஸ்டட் கார்டியோ உடற்பயிற்சி எவ்வாறு வேலை செய்யும்?

பொதுவாக நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கும் பொழுது, உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் அதிக கலோரிகள் எனர்ஜியாக மாறி உங்களை நாள் முழுவதும் இயல்பாக செயல்பட வைக்கும். இதே போல தான் நீங்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் போதும் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைந்து உங்களுக்கு ஆற்றலை கொடுக்கும். இதனால் அதிக கொழுப்பு கரைவதோடு கலோரிகள் குறைந்து விரைவில் எடை குறைக்க முடியும்.

யாரெல்லாம் ஃபாஸ்டட் கார்டியோ உடற்பயிற்சிகளை செய்யலாம்?

நீங்கள் எடை குறைக்க முயற்சி செய்து வந்தால், வெறும் வயிற்றில் தினமும் கார்டியோ பயிற்சிகளை செய்ய தொடங்கலாம். ஆனால் இந்த உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகிறது, இதை இயல்பாக எதிர்கொள்ள முடிகிறதா என்பதை கவனித்து நீங்கள் தொடரலாம்.

Late Night Dinner : இரவில் லேட்டாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்...

யாரெல்லாம் ஃபாஸ்டட் கார்டியோ பயிற்சியை தவிர்க்க வேண்டும்?

நீங்கள் தசையை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் உங்களுக்கு வெறும் வயிற்றில் கார்டியோ பயிற்சி செய்வது பலன் தராது. அது மட்டுமன்றி உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறு இருந்தால் உங்கள் மருத்துவரை ஆலோசிக்காமல் கார்டியோ பயிற்சியை செய்யக் கூடாது.

நீங்கள் ஏற்கனவே அதிகப்படியான வேலைப்பளுவில் இருந்தால் வெறும் வயிற்றில் கார்டியோ பயிற்சி செய்யும் போது எதிர்மறையான மாற்றங்களை கவனித்து அதற்கு ஏற்றாற்போல பயிற்சிகளை திட்டமிட வேண்டும்.

* அதிகபட்சம் 60 நிமிடங்களுக்கு மேல் ஃபாஸ்டட் கார்டியோ பயிற்சியை செய்ய வேண்டாம்

* வெறும் வயிற்றில் ஹை இன்ட்டன்சிட்டி உடற்பயிற்சிகளை செய்ய கூடாது

* உணவுதான் சாப்பிடக்கூடாது தவிர நீங்கள் உடலை ஹைட்ரேட்டடாக வைத்துக்கொள்வது அவசியம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cardio Exercise, Workout