HOME»NEWS»LIFESTYLE»health fast walking in narrow corridors can increase risk of covid 19 transmissions especially in kids esr ghta

மிகவும் குறுகலான இடத்தில் நடந்தால் கொரோனா வைரஸ் பரவுமா - ஆய்வு கூறுவதென்ன?

விஞ்ஞானிகள் உருவகப்படுத்தப்பட்ட நபரின் வாயிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர்த்துளிகள் காற்றின் திசைவேகம் மாறியதும், எவ்வாறு சிதறி இருக்கும் என்பதை காண்பித்தனர்.

மிகவும் குறுகலான இடத்தில் நடந்தால் கொரோனா வைரஸ் பரவுமா - ஆய்வு கூறுவதென்ன?
மாதிரி படம்
  • Share this:

COVID-19 வைரஸ் பலதரப்பட்ட மக்களை பல்வேறு விதங்களில் பாதிக்கிறது. பெரும்பாலும் பாதிப்பிற்குள்ளானவர்கள் இலேசானது முதல் மிதமானது வரையிலான அறிகுறிகளை எதிர்கொள்வதுடன், மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவையில்லாமலேயே குணமடைவார்கள். பெரியவர்களுக்கு இந்த தொற்று இருந்தால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். ஆனால் ஒன்றும் அறியாத குழந்தைகளுக்கு இந்த தொற்று நோய் ஏற்பட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு குழுவினருக்குப் பின்னால் குறுகிய இடைவெளிகளில் (narrow spaces behind a group of people) வேகமாக நடப்பது COVID-19 பரவும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும் , குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த அபாயம் ஏற்படும், வைரஸ் நிறைந்த சுவாச துளிகளால் (virus-laden respiratory droplets) பாதிக்கப்பட்ட நபர்கள் இத்தகைய தாழ்வாரங்கள் (corridors) வழியாக சென்றால் அபாயம் ஏற்படும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

திரவங்களின் இயற்பியல் (Physics of Fluids) இதழில் வெளியிடப்பட்ட கணினி உருவகப்படுத்துதலின் முடிவுகள், வைரஸ் நிறைந்த நீர்த்துளிகள் (virus-laden droplets) காற்றில் எவ்வாறு நகர்கின்றன என்பதைக் கணிப்பதில் ஒவ்வொருவருக்குமான இடைவெளிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. முந்தைய ஆய்வுகள் கண்ணாடித் தடுப்புகள், ஜன்னல்கள் மற்றும் காற்றுச்சீரமைப்பிகள் (glass barriers, windows, and air conditioners) போன்றவற்றில் காற்றின் வடிவங்கள் மற்றும் வைரஸ் பரவல் போன்றவற்றின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், பெய்ஜிங்கில் உள்ள சைனீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸின் (Chinese Academy of Sciences in Beijing) விஞ்ஞானிகள் இந்த உருவகப்படுத்துதல்கள் பொதுவாக பெரிய, திறந்த உட்புற இடங்களைக் ( large, open indoor spaces) கொண்டுள்ளன என்று கூறினர்.

இருப்பினும், அருகிலுள்ள சுவர்களின் தாக்கம், குறுகிய தாழ்வாரத்தில் இருப்பதைப் போல இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தற்போதைய ஆய்வின்படி, ஒரு நபர் ஒரு தாழ்வாரத்தில் நடந்து சென்றால், அவர்களின் சுவாசம் அவர்களின் உடலைச் சுற்றியும் பின்னால் பயணிக்கும் நீர்த்துளிகளிளும் அவற்றை வெளியேற்றுகிறது, உதாரணாமாக, ஒரு படகில் நாம் பயணம் செய்யும் போது, படகால் தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை போலத்தான் இதுவும் என்றனர் ஆய்வாளர்கள்.

அந்த நபரின் உடற்பகுதிக்கு பின்னால் ஒரு "மறு சுழற்சி குமிழி" ("re-circulation bubble") இருப்பதையும், இடுப்பு உயரத்தில் அவர்களுக்குப் பின்னால் ஒரு நீண்ட நீர்த்துளிகளின் தொடர் இருப்பதையும் ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. ஆய்வின் இணை ஆசிரியர் சியாவோலி யாங், "நாங்கள் கண்டறிந்த ஓட்ட முறைகள் மனித உடலின் வடிவத்துடன் வலுவாக தொடர்புடையவை" என்று கூறினார். "வாய் மற்றும் கால் உயரத்தில் இந்த நீர்த்துளிகள் இருப்பது மிகக் குறைவு, ஆனால் இடுப்பு உயரத்தில் இவை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று யாங் கூறினார்.

கொரோனா பாதித்த பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு சிகிச்சை தேவையா..? காரணம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்

விஞ்ஞானிகள் உருவகப்படுத்தப்பட்ட நபரின் வாயிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர்த்துளிகள் காற்றின் திசைவேகம் மாறியதும், எவ்வாறு சிதறி இருக்கும் என்பதை காண்பித்தனர்.அந்த நகரும் நபரைச் சுற்றியுள்ள இடத்தின் வடிவம் கணக்கீட்டின் இந்த பகுதிக்கு மிகவும் முக்கியமானது என்று அவர்கள் கூறினர். ஒரு முறை சிதறலில், நீர்த்துளிகளின் மேகம் (cloud of droplets) நகரும் நபரிடமிருந்து பிரிந்து அந்த நபருக்குப் பின்னால் மிதந்து, வைரஸ் நிறைந்த நீர்த்துளிகளின் மிதக்கும் குமிழியை உருவாக்குகிறது (floating bubble of virus-laden droplets.) என்று ஆய்வு குறிப்பிட்டது. சில நேரங்களில், அந்த நபரின் முதுகில் நீர்த்துளிகளின் மேகம் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வேறு இடத்திற்கு செல்லும்போது வால் போல அவர்களின் பின்னால் செல்கிறது என்றும் அது கூறியது."பிரிக்கப்பட்ட பயன்முறையைப் பொறுத்தவரை, ஒரு இருமல் வந்த ஐந்து விநாடிகளுக்குப் பிறகு (five seconds after a cough), இணைக்கப்பட்ட பயன்முறையை விட நீர்த்துளி செறிவு மிக அதிகமாக உள்ளது" என்று யாங் கூறினார். "மிகவும் குறுகிய தாழ்வாரம் போன்ற இடங்களில் பாதுகாப்பான சமூக இடைவெளியை (social distance) நிர்ணயிப்பதில் இது ஒரு பெரிய சவாலாக உள்ளது, அந்த இடத்தில் உள்ள ஒரு நபர் வைரஸ் நீர்த்துளிகளை சுவாசத்தின் போது உள்ளிழுக்கக்கூடும்" என்று அவர் மேலும் கூறினார்.

இதுபோன்ற இடங்களில் குழந்தைகளை வைரஸ் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.  தாழ்வாரங்களில் செல்லும் போது மிகுந்த ஜாக்கிரதையுடனும் முடிந்தால் அந்த இடத்தை தவிர்ப்பதும் நல்லது. இல்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர். ஆகவே குழந்தைகளை பள்ளிக்கோ அல்லது வேறு ஏதும் இடங்களுக்கு அழைத்து செல்வதாக இருந்தால் அதிக பாதுகாப்புடன் அழைத்து செல்ல வேண்டும். கூடுமானவரை குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது.
Published by:Sivaranjani E
First published: