உடல் எடை குறைப்புக்காக முன்வைக்கப்படும் என்ற திட்டம் அல்லது உணவுப் பழக்கம் என்பது, பிறர் முயற்சித்து வெற்றி பெற்றதாகக் கூறும் வரையில் வெற்று வார்த்தைகள் தான். அந்த வகையில், ஃபாஸ்ட் 800 என்ற டயட் பிளான் என்ற வெற்றிகரமான உணவுத் திட்டம் ஒன்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக, உங்கள் உடல் எடை மிகுதியாக இருக்கிறது என்றால், நிச்சயமாக உங்களுக்கு நீரிழிவு நோய் வரக் கூடும். இந்த அபாயம் கொண்டவர்களுக்கு இந்த டயட் முறை மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மைக்கேல் மோஸ்லே என்ற மருத்துவருக்கும் உடல் பருமன் காரணமாக நீரிழிவு நோய் வந்தது. அதை அவர் எவ்வாறு எதிர்கொண்டார், அதன் பிறகு உடல் எடையை எப்படி குறைத்தார் என்ற அனுபவங்களை அவரே பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 2014ஆம் ஆண்டில் எனக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டது. எனது உடல் எடை ரொம்பவும் அதிகமில்லை. சுமார் 86 கிலோ இருந்தேன். பார்ப்பதற்கு உடல் பருமன் இருப்பதைப் போல நான் காட்சியளிக்கவில்லை. ஏனென்றால், என் உடலில் உள்பகுதிகளில் தான் மிகு அதிகமான கொழுப்பு சேர்ந்திருந்தது’’ என்று நினைவுகூர்ந்துள்ளார்.
உடல் எடை குறைப்பு மற்றும் நீரிழிவு தடுப்புக்கு செய்தது என்ன
1.மருந்துகளை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் 5:2 என்ற டயட் பிளான் திட்டத்தை அவர் கடைப்பிடிக்கத் தொடங்கினார்.
2.வாரத்தில் 5 நாட்களுக்கு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிடுவது, எவ்வளவு கலோரி என்றாலும் பிரச்சினையின்றி எடுத்துக் கொள்வது.
also read : பெண்குயின் கார்னர் 24 : வெள்ளைப்படுதல் பிரச்சனையை சமாளிப்பது எப்படி? மருத்துவர் ஆலோசனை
3.அதற்கு அடுத்த 2 நாட்களில் சாப்பாட்டை குறைத்துக் கொள்வது. உடலுக்கு தேவையான கலோரிகளில் கால் பங்கு உணவு மட்டும் சாப்பிடுவது.
4.சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு நாளில் 500 கலோரிகள் உடலில் கரைகிறது என்றால், ஆணுக்கு 600 கலோரிகள் கரையும். ஆனால், இந்த டயட் பிளான் மூலமாக மருத்துவர் மைக்கேலுக்கு நாளொன்றுக்கு 800 கலோரிகள் கரைந்து விடுகிறது.
5.இறுதியாக 9 கிலோ எடையை குறைத்து, நீரிழிவு குறைப்பாட்டை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.
Also Read : உடல் எடையை குறைக்க காலை உணவும், இரவு உணவும் எந்த அளவிற்கு முக்கியம் தெரியுமா?
6.இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் மட்டும் விதிவிலக்கு அல்ல. உங்கள் உடல் எடையில் 7 சதவீதத்தை குறைத்து விட்டால், உங்களுக்கு நீரிழிவு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தி விடலாம் என்று ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக, நடுத்தர உடல் எடையும், உடற்பயிற்சியும் இருந்தால் நல்லது’’ என்று தெரிவித்தார்.
800 டயட் பிளான் குறிப்புகள்:
1.நாளொன்றுக்கு 800 கலோரி அளவிலான உணவுகளை சாப்பிட வேண்டும்.
2.மாவுச்சத்து குறைவான, புரதம் அதிகம் உள்ள உணவுகள், நார்ச்சத்து, மற்றும் நல்ல கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளை சாப்பிடலாம்.
3.மருத்துவரின் ஆலோசனையின் பேரில், 8 முதல் 12 வாரங்கள் வரை இந்த டயட் திட்டத்தை நீங்கள் கடைப்பிடிக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.