ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இளம் தம்பதிகள் குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம்..? மருத்துவர் விளக்கம்

இளம் தம்பதிகள் குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம்..? மருத்துவர் விளக்கம்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

Infertility | 30 - 35 வயதைக் கடந்தாலே குழந்தையின்மை பிரச்சனையை அனுபவிக்கின்றனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூற்றுப்படி 10 சதவீதம் பெண்கள் கருத்தரிப்பதற்கான சிகிச்சைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குழந்தையின்மை ( Infertility ) என்னும் சொல் இன்று சாதாரணமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கருத்தரிப்பு மையங்களும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக 30 - 35 வயதைக் கடந்தாலே குழந்தையின்மை பிரச்சனையை அனுபவிக்கின்றனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூற்றுப்படி 10 சதவீதம் பெண்கள் கருத்தரிப்பதற்கான சிகிச்சைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், வேலை முறை இப்படி பல காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையில் சரியான காரணம்தான் என்ன..?

கருவுறாமைக்கான காரணங்கள் :

பெண்கள் 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால்தான் பிரச்சனைகள் இருக்காது என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டது. இதற்கு அண்டவிடுப்பின் செயலிழப்பு , பிசிஓஎஸ், பிசிஓடி, கர்ப்பப்பை குழாய் நோய் போன்றவை பெண்களுக்கான பிரச்சனைகளாகக் கூறப்படுகிறது. ஆண்களுக்கு விந்தணு குறைபாடு, , விந்து எண்ணிக்கை குறைதல், போன்றவை காரணங்களாக அடுக்கப்படுகின்றன. மேலும் காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOS/PCOD) :

இது பெண்ணின் ஹார்மோன் அளவை பாதிக்கும் ஒரு நிலை. சீரற்ற அல்லது அதிகப்படியான மாதவிடாய் நாட்களை அனுபவிக்க நேரிடும். அதே போல் அதிக அளவு ஆண் ஹார்மோன் (ஆன்ட்ரோஜன்) சுரப்பும் நிகழும். உடல் பருமன் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ளுதல், ப்ரோஜெஸ்டின் சிகிச்சை அல்லது க்ளோமிட் போன்ற கருவுறுதல் மருந்துகள் போன்றவை இதற்கான காரணிகளாக அமைகின்றன.

செயலிழக்கும் கருப்பைகள் :

இந்த நிலை, ஒவ்வொரு மாதமும் சரியாக அண்டவிடுப்பு செயலானது நடைபெறாது அல்லது சீரற்றதாக இருக்கும். இந்த அண்டவிடுப்பு சீராக நடைபெற்றால்தான் கரு நிற்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும். அது முற்றிலும் நிகழாத போது முட்டைகள் வெளியேறாது. இதை சிகிச்சை அளித்து சரி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயங்கள்.. எது உண்மையானது..? எது தேவையற்றது..? தெரிந்து கொள்ளுங்கள்!

ஆண்களுக்கான காரணங்கள் :

விந்தணு குறைபாடு :

குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது குறைந்த தரம், விந்தணு உற்பத்தி இல்லாமை, டெஸ்டிகுலர் சீரற்று இருத்தல் மற்றும் உச்சநிலையை அடைவதில் சிரமம் ஆகியவை ஆண்களுக்கான கருவுறாமைக்கான காரணங்களாகும். கருவுறுதல் பிரச்சனைகளில் மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் காரணமாக இருக்கின்றனர்.

கடந்தகால நோய்கள், நோய்த்தொற்றுகள், முதுமை, மரபியல் கோளாறுகள், ஹார்மோன் மாற்றங்கள், வெரிகோசெல்ஸ் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளான புகைபிடித்தல் , மது மற்றும் நச்சுகள் போன்றவை அடிப்படை காரணங்களாகும். இந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய, வாழ்க்கை முறையை சரிசெய்தல், அத்துடன் கருப்பையக கருவூட்டல் intrauterine insemination (IUI) அல்லது கருவிழி கருத்தரித்தல் vitro fertilization (IVF) ஆகியவை செய்யப்படுகிறது .

IVF சிகிச்சை எளிமையான முறையாகவும், அதிக செலவில்லாத சிகிச்சையாகவும் கருதப்படுகிறது. அதாவது இந்த சிகிச்சையில் மீட்டெடுக்கப்பட்ட முட்டை மற்றும் விந்தணுக்களை ஒன்றினைத்து அதை கருப்பைக்குள் மருத்துவர்கள் உட்செலுத்துகின்றனர் . அதாவது அந்த பெண்ணிற்கு மருந்துகள் மூலம் அண்டவிடுப்பு செயலை தூண்டி ஒரு முட்டையை உருவாக்க முயற்சிக்கின்றனர். பின்பு விந்தணுக்களை நேரடியாக கருப்பைக்கு அனுப்புகின்றனர். பின்பு இது கரு நிற்பதை தூண்டி கருவை நிற்கச்செய்கின்றனர்.

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவது ஏன்? தவிர்க்க கைட்லைன்!

விவரிக்க முடியாத காரணங்கள் :

அனைத்து சிகிச்சை முறைகளையும் செய்த பின்பும் குழந்தை நிற்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனில் அது மலட்டுத்தன்மையாக கருதப்படுகிறது. இவ்வாறான வழக்குகள் மூன்றி ஒரு பங்கு நிகழ்கிறது. எதுவாயினும் இன்றைய நவீன மருத்துவத்தின் மூலம் மருத்துவர்கள் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை தரவே முயற்சிக்கின்றனர். எதுவும் சாத்தியம் என்பதே இன்றைய மருத்துவமாக இருக்கிறது. எனவே தம்பதிகள் குழந்தையின்மையை நினைத்து கவலைக்கொள்வதில் பிரயோஜனமில்லை.

Published by:Sivaranjani E
First published:

Tags: Fertility possibilities, Fertility treatment, Infertility, Male infertility, Women Fertility