காய்கறி மற்றும் பழங்களில் பூச்சி, புழுக்கள் இருப்பது இயற்கையானது. குறிப்பாக காலிஃப்ளவர் முட்டைகோஸ் போன்ற காய்கறி வகைகளில் புழுக்கள் காணப்படும். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வீடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று முட்டைகோஸ். இதை விதவிதமாக சமைக்கலாம், சமைப்பதற்கும் எளிதானது மற்றும் ஆரோக்கியமானது. முட்டைகோஸ் கிருஸிஃபெராஸ் (cruciferous) என்ற வகை காய்கறியாகும்.
இந்த வகை காய்கறிகளில் நாடாப்புழு என்று கூறப்படும் ஒரு வகையான நீளமான புழுக்கள் இருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்த காய்கறிகளில் இருக்கும் இந்த டேப்வார்ம் உடலில் புகுந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய்களை உண்டாக்ககூடும் அபாயம் இருக்கிறது. முட்டைகோஸ் ஆரோக்கியமானதா?, இதை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பானதா? என்ற பல கேள்விகளுக்கான பதிலை இங்கே பார்க்கலாம்.
முட்டைகோஸை பச்சையாக சாப்பிடலாமா?
முட்டைக்கோஸில் புழு இருக்கிறதா இல்லையா என்பதை விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் பொதுவாகவே முட்டைகோஸை பச்சையாக சாப்பிட்டால் வயிற்றுக்குள் நாடாப்புழு உருவாகும் என்று கட்டுக்கதை பல ஆண்டாண்டு காலமாக நிலவி வருகிறது. இந்த புழுக்கள் நியூரோசிஸ்டர்கோசிஸ் என்ற நரம்பு மண்டலம் மற்றும் மூளையை பாதிக்கக் கூடிய தீவிரமான ஒரு நோயை ஏற்படுத்தும்.
மூளைக்குள் இந்த புழு ஊடுருவி பல ஆபத்தான நோய்யை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பொதுவாக, சுகாதாரமில்லாத, திறந்த வெளியில் மலம் கழிக்கும் இடங்களில் இருக்கும் தோட்டங்கள் மற்றும் வளரும் பயிர்களால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படலாம்.
நியூரோசிஸ்டர்கோசைசிஸ் ( Neurocysticercosis ) என்பது என்ன?
புழுக்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படக்கூடிய தொற்று பாரசிட்டிக் இன்ஃபெக்ஷன் என்று கூறப்படுகிறது. டானியா செல்லியம் என்ற ஒரு வகை நாடாப் புழு உடலில் இருக்கும் நரம்பு மண்டலத்தில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். காய்கறிகளை சில நேரம் சரியாக சமைக்காத பொழுது அல்லது பச்சையாக சாப்பிடும் பொழுது, காய்கறிகளில் இருக்கும் நாடாப்புழு நமக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதே போல, மோசமான, சுகாதாரமற்ற இடங்களில் விளையும் காய்கறிகளை சரியாக சுத்தம் செய்யாமல் சாப்பிடும்போதும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
Also Read : காலிஃபிளவர் இலைகளில் கூட இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இனி தூக்கி போடாதீங்க..!
காய்கறிகளை நன்றாக சமைத்தாலே அதில் இருக்கும் புழுக்கள் இறந்து விடும். ஆனால், சுகாதாரம் இல்லாத சூழ்நிலையில் விளைந்த காய்கறிகளை சாப்பிடும் போதும், அரைகுறையாக சமைத்து சாப்பிடப்படும் காய்கறிகளில் இருக்கும் புழுக்கள் உடலுக்குள் புகுந்து நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் வலிப்பு நோய் ஏற்படலாம். சரியான சிகிச்சை இல்லாத நிலையில், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறும்.
இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ‘சுகாதாரம் இல்லாதது, போதிய எண்ணிக்கையில் கழிவறை இல்லாத நிலை மற்றும் பன்றி இறைச்சி சரியான முறையில் கவனிக்கப்படாமல் இருக்கும் காரணத்தால் தான் உணவுகளில் நாடாப்புழு காணப்படுகிறது. நாடாப்புழு உடலில் ஊடுருவி ஏற்படக்கூடிய வலிப்பு நோய்க்கு நீண்டகால சிகிச்சை தேவைப்படும்.
இவற்றை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒரு சிலருக்கு பாதிப்பு தீவிரமாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் தான் சரி செய்ய முடியும். தற்போது, அரசு எடுத்து வரும் தூய்மை மற்றும் சுகாதார நடவடிக்கையால், இதைப் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது" என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேற்கூறிய தகவலின் படி, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படக்கூடிய சுற்றுப்புற பாதிப்புதான் அதனருகில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பயிர்களில் நாடாப்புழு உருவாவதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றது.
எனவே, சுகாதாரத்தை பேணுவது ஒரு தீர்வாக இருக்கிறது. எந்த காய்கறி அல்லது பழமாக இருந்தாலுமே அதை சமைப்பதற்கு முன்பு அதை முழுமையாக சுத்தம் செய்து, சமைக்க வேண்டும். எனவே, புழு இருக்கும் பயத்தால் முட்டைக்கோஸை தவிர்க்க வேண்டாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cabbage, Health tips, Side effects