Home /News /lifestyle /

‘மங்கி பாக்ஸ்’ தொற்றால் யாருக்கெல்லாம் ஆபத்து..? இவங்க எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..!

‘மங்கி பாக்ஸ்’ தொற்றால் யாருக்கெல்லாம் ஆபத்து..? இவங்க எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..!

குரங்கு அம்மை

குரங்கு அம்மை

இரண்டாம் நிலை தோல் நோய்த்தொற்றுகள், நிமோனியா, குழப்பம் மற்றும் கண் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படக்கூடும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், மங்கி பாக்ஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 1% முதல் 10% பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...

மங்கி பாக்ஸ் என்பது ஒரு அரிய வகை வைரஸ் தொற்று ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், அதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவக்கூடியது. கொரோனா தொற்றின் கோரதாண்டவத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் மங்கி பாக்ஸ் நோய் தீவிரமாக பரவிவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மங்கி பாக்ஸ் ஃஓயின் அறிகுறிகள் தானாகவே ஒரு சில வாரங்களில் மறைந்துவிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தாலும், இந்நோயால் தீவிர சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை தோல் நோய்த்தொற்றுகள், நிமோனியா, குழப்பம் மற்றும் கண் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படக்கூடும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், மங்கி பாக்ஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 1% முதல் 10% பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் மங்கி பாக்ஸ் பாதிப்பு:இந்தியாவில் முதன்முறையாக மங்கி பாக்ஸ் காய்ச்சலால் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு மங்கி பாக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் ஏஎன்ஐ கூறுகையில், "இதுபற்றி கவலைப்படவோ, அச்சப்படவோ ஒன்றுமில்லை. அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் முதன்மை தொடர்பு அடையாளம் காணப்பட்டுள்ளது, அதில் அவரது தந்தை, தாய், ஒரு டாக்சி டிரைவர், ஒரு ஆட்டோ டிரைவர் மற்றும் விமானத்தில் பயணித்த 11 சக பயணிகள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் இதுவரை மங்கி பாக்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது சற்றே ஆறுதல் அளிக்க கூடிய விஷயமாக இருந்து வருகிறது. யாருக்கெல்லாம் அதிக ஆபத்து? மங்கி பாக்ஸ் உள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட) வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூடுதலாக, எலி, அணில், குரங்குகள் போன்ற விலங்குகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் அதிகமுள்ளது. எனவே இவர்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் மங்கி பாக்ஸ் தொற்று உறுதி... அறிகுறிகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகள்.!


சுகாதார பணியாளர்கள் : மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் ஏற்படும் தொடர்பு மூலமாக இந்த வைரஸ் பிற மனிதனுக்குப் பரவுகிறது. இதில் நேருக்கு நேர், தோலிலிருந்து தோல், வாயிலிருந்து வாய் அல்லது வாயிலிருந்து தோல் தொடர்பு, பாலியல் தொடர்பு உட்பட பல வகைகள் தொற்று பரவ வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மங்கி பாக்ஸ் நோயாள் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் சுகாதாரப் பணியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ஏனெனில் இவர்களுக்கு தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அடிப்படை நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் : WHO இன் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகள், இளம் குழந்தைகள் மற்றும் அடிப்படை நோயெதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்கள் மிகவும் தீவிரமான அறிகுறிகள் ஏற்படலாம், மேலும் அவர்கள் அரிதான சந்தர்ப்பங்களில், மங்கி பாக்ஸால் இறக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோயெதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்படாதபோது அல்லது எதிர்பார்த்தபடி செயல்படாதபோது நோயெதிர்ப்பு குறைபாடு நோய் அல்லது கோளாறு ஏற்படுகிறது. மரபணு காரணத்தினால் குறைபாட்டுடன் பிறந்தவர்கள் முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 200 க்கும் மேற்பட்ட முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.


அதிகரித்து வரும் கொரோனா... நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 யோகாசனங்கள்...


மங்கி பாக்ஸ் அறிகுறிகள்: மங்கி பாக்ஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக 6-13 நாட்களில் தோன்றும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் இதன் அறிகுறிகள் வெளிப்பட மூன்று வாரங்கள் வரை ஆகலாம் மற்றும் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் (NHS) முதல் அறிகுறிகள் தோன்றுவதற்கு 5 முதல் 21 நாட்கள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளது. - அதிக வெப்பநிலை- ஒற்றை தலைவலி- தசை வலிகள்- முதுகு வலி- வீங்கிய சுரப்பிகள்- நடுக்கம் (குளிர்)- சோர்வு ஆகியவை சில பிரதான அறிகுறிகள் ஆகும்.


Published by:Sivaranjani E
First published:

Tags: Monkeypox

அடுத்த செய்தி