Home /News /lifestyle /

காரணமே இன்றி திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டால் இந்த பிரச்சனை இருக்கலாம் : நிபுணர்கள் விளக்கம்

காரணமே இன்றி திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டால் இந்த பிரச்சனை இருக்கலாம் : நிபுணர்கள் விளக்கம்

காலில் வீக்கம்

காலில் வீக்கம்

பொதுவாக உடலில் நீர் கோர்த்துக்கொண்டால் மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நீங்கள் உட்கொள்ளும் திரவங்களை விட குறைவான அளவிலேயே சிறுநீர் வெளியேறுவதாகும்.

உடலில் நீர் கோர்த்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். அதே போல அதிகமாக உப்பு இருந்தாலும் உடலில் ஒரு சில இடங்களில் வீக்கமாக காணப்படும். குறிப்பாக மூட்டுக்கள் மற்றும் பாதங்கள் வீங்கினால் உடலில் ஏதேனும் கோளாறு என்று அறியப்படுகிறது.

திடீரென்று தீவிரமான உடற்பயிற்சி செய்தாலோ, நீண்ட நேரம் அமர்ந்த படியே பயணம் செய்தாலோ அல்லது உடலில் இருக்கும் ஹார்மோன்கள் அல்லது திரவங்களில் இருக்கும் பேலன்ஸ் பாதிக்கப்பட்டாலோ இவ்வகையான மாற்றம் ஏற்படும். தங்கள் மற்றும் மூட்டுகள் வீக்கமடையும் பொழுது அது சாதாரணமானதா அல்லது ஏதாவது தீவிரமான நோயின் அறிகுறியா என்பதை தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம். அதை பற்றி நிபுணர்கள் கூறும் விளக்கம் இங்கே.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆய்வு நிலையத்தின் மருத்துவ ஆலோசகரான டாக்டர் ஆல்வின் ஜேம்ஸ் இதைப்பற்றி விளக்கினார். “மருத்துவ ரீதியாக இவ்வகையான வீக்கம் என்பது எடிமா என்று கூறப்படுகிறது. இந்த வீக்கம் குறைவாக இருந்தால் தானாகவே சரியாகிவிடும். இதயத்திற்கு மேல் கால்களை தூக்கி உயர்த்தியவாறு சிறிது நேரம் இருந்தாலே இந்த வீக்கம் உடனடியாக குறைந்துவிடும்.

அதே போல சிறுநீர் சரியாக கழிக்கவில்லை என்றாலும் காலில் வீக்கம் ஏற்படும். எனவே டைரியூட்டிக்ஸ் எனப்படும் மருந்துகள் மூலமாக சிறுநீர் வெளியேறி உடலில் இருக்கும் கூடுதல் திரவத்தை வெளியேற்றினால் இந்த வீக்கம் முழுவதுமாக வடிந்துவிடும். அதேபோல இயற்கையாகவே உடலில் இருக்கும் அதிகமான தண்ணீரை வெளியேற்றக்கூடிய உணவுகளும் உள்ளன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் Furosemide என்பது மிகவும் எளிதாக கிடைக்கிறது. இருந்தாலும் உங்களுடைய மருத்துவ வரலாறு, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள், அலர்ஜி மருந்துகள் என்பவற்றைப் பற்றி முழுமையான தகவல்கள் இல்லாமல் மருந்துகளை சாப்பிடக்கூடாது.



பெரும்பாலான நேரங்களில் பாதங்கள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் தானாகவே சரியாகிவிடும் அல்லது பெரிய ஆபத்து இல்லை என்றாலும், அடிக்கடி இவ்வாறு வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது வீக்கம் குறையாமல் இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். பாதங்கள் மற்றும் மூட்டுகள் வீங்குவது தீவிரமான நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

நீர் கோர்த்துக் கொள்வதால் பாதங்களில் ஏற்படும் வீக்கம் :

பொதுவாக உடலில் நீர் கோர்த்துக்கொண்டால் மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நீங்கள் உட்கொள்ளும் திரவங்களை விட குறைவான அளவிலேயே சிறுநீர் வெளியேறுவதாகும். உங்களுக்கு தேவையான அளவை விட அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், அல்லது திரவ உணவாக சாப்பிடுவதும் கிட்னியின் செயல்திறனை குறைக்கிறது. இதனால் உடலில் நீர் கோர்த்து மூட்டுகள் வீங்கும். அது மட்டுமின்றி உணவில் நீங்கள் உப்பு சேர்க்காமல் சாப்பிடும் பொழுதும் உடலில் நீர் சேர்ந்து கொள்ளும். இதுவும் கால்கள் வீங்குவதற்குக் காரணமாக இருக்கும்.

உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்த்தாலே இதய பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் - ஆய்வு

முக்கிய உறுப்புகளின் பாதிப்பால் பாதம் மற்றும் கணுக்கால் வீக்கம் :

இரண்டு கால்களுமே வீக்கமாக காணப்படுவது, இதயம், கல்லீரல் அல்லது கிட்னியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைக் குறைக்கிறது. ஏற்கனவே இதய பாதிப்பு அல்லது நெஞ்சு வலி ஏற்பட்டவர்களுக்கு கார்டியாக் அரஸ்ட் உண்டாகும் போது இரண்டு கால்களுமே பெரிதாக வீங்கும். இதய பாதிப்பு ஏற்படும் போது, ரத்தம் மற்றும் ஆக்சிஜன் சர்குலேஷன் சீராக இருக்காது. இதனால், கால்களுக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, வீங்கும்.



இதய பாதிப்புக்கு அடுத்ததாக, கிட்னியின் செயல்பாடு குறைந்தாலோ அல்லது செயலிழந்தாலோ கால்கள் வீங்கத் துவங்கும். கிட்னி பாதிப்பால் கணுக்கால் வீக்கம் அதிகமாக காணப்படும். மேலும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைவான அளவு சிறுநீர் வெளியேற்றம் ஆகியவையும் உண்டாகும்.

கல்லீரல் பாதிப்பு இருக்கும் போதும் கால்கள் வீங்கும். அதே நேரத்தில், கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் மாறும். அதன் அடிப்படையில், கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் வீக்கத்தை உடனடியாக கண்டறிய முடியும்.

பெண்களுக்கு ஓவரியன் கேன்சர் வருவதற்கான ஆபத்து காரணிகள் மற்றும் அறிகுறிகள்..!

மருத்துவ பரிசோதனைகள் மூலம் நோய்க்காரணம் கண்டுபிடிப்பு :

எடிமா காணப்பட்டால், உறுப்புக்கள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம். முழு ரத்த பரிசோதனையில், ரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் கிரியாடினின் என்ற சீரத்தின் அளவை கண்டறிவது மூலம், வீக்கத்திற்கான காரணம் கண்டறியலாம். ஈசிஜி, எக்கோ ஆகிய பரிசோதனைகள் மூலம், இதய பாதிப்பை கண்டறியலாம். கல்லீரல் நோயால் வீக்கம் உண்டாவதை லிவர் ஃபன்க்ஷன் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதைத்தவிர்த்து, ஹைப்போ தைராய்டிசம் என்று கூறப்படும் தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் கூட இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்படுத்தும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Joint pain, Leg Pain

அடுத்த செய்தி