ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைகளுக்கு கோவிட் தொற்று பரவுவதை தடுக்கும் நஞ்சுக்கொடி : ஆய்வில் தகவல்

கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைகளுக்கு கோவிட் தொற்று பரவுவதை தடுக்கும் நஞ்சுக்கொடி : ஆய்வில் தகவல்

 கோவிட் தொற்று பரவுவதை தடுக்கும் நஞ்சுக்கொடி

கோவிட் தொற்று பரவுவதை தடுக்கும் நஞ்சுக்கொடி

புதிய ஆய்வு ஒன்றில் கோவிட்-19 தொற்று பல கர்ப்பிணிப் பெண்களை கணிசமாக பாதிக்கும் அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு கோவிட்-19 தொற்று பரவும் விகிதம் மிக குறைவு என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்பம் என்பது கடும் ஆபத்து காரணி என்று சான்றுகள் காட்டுகின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்று 15 - 44 வயதுடைய சுமார் 400,000 பெண்களின் கோவிட்-19 அறிகுறிகளை கொண்ட பாதிப்பு அறிக்கைகளை மதிப்பாய்வு செய்தது. இதில் கர்ப்பமாக இருந்தவர்கள் ICU-வில் அட்மிஷன், வென்ட்டிலேஷன் மற்றும் 70% அதிக இறப்புக்கான சாத்திய கூறுகள் தோராயமாக மூன்று மடங்கு இருப்பது உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

இதனிடையே மற்றொரு புதிய ஆய்வு ஒன்றில் கோவிட்-19 தொற்று பல கர்ப்பிணிப் பெண்களை கணிசமாக பாதிக்கும் அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு கோவிட்-19 தொற்று பரவும் விகிதம் மிக குறைவு என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

பாஸ்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் (BUSM - Boston University School of Medicine) நடத்திய புதிய ஆய்வில், சாதாரண (கோவிட் நெகட்டிவ்) கர்ப்பம் உள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது. SARS-CoV-2-வை உயிரணுக்களுக்குள் நுழைய அனுமதிக்கும் receptor அதாவது ஏற்பியான ACE-2, கர்ப்ப காலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் நஞ்சுக்கொடிகளில் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பேத்தாலஜியின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.

BUSM-ன் குழந்தை மருத்துவ உதவிப் பேராசிரியர் எலிசபெத் எஸ். டாக்லாயர் இந்த ஆய்வு பறி கூறுகையில், "கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு இருந்தால், அந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவுக்கு SARS-CoV-2 கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான ஒரு வழியாக நஞ்சுக்கொடி ACE-2-ஐ வெளியேற்றுவதாக நாங்கள் நினைக்கிறோம்" என்றார். இந்த ஆய்விற்காக ஜூலை 2020 முதல் ஏப்ரல் 2021 வரை BMC-யில் பிரசவம் நிகழ்ந்த பெண்களின் 2 குழுக்களிடமிருந்து நஞ்சு கொடிகளை ஆய்வு குழு சேகரிப்பதில் ஈடுபட்டது.

முதல் பெண்கள் குழு என்பதில் SARS-CoV-2 தொற்று பாதிப்பற்ற சாதாரணமாக கருவுற்றிருக்கும் பெண்கள், இரண்டாவது பெண்கள் குழு என்பதில் SARS-CoV-2 பாசிட்டிவ் மற்றும் கர்ப்ப காலத்தில் ஆக்ட்டிவில் உள்ள கோவிட்-19 நோயை கொண்டிருந்த பெண்கள் ஆகியோர் அடங்குவர். இந்த இரு வகை குழு பெண்களிடமிருந்து பிரசவத்திற்கு பிறகு நஞ்சு கொடிகளை ஆய்வு குழுவினர் சேகரித்து சோதனை செய்தனர். பின் நடத்திய சோதனையின் போது ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் சேகரித்த நஞ்சு கொடிகளில் ACE-2 ஏற்பியின் வெளிப்பாட்டை கவனித்து, மரபணு மற்றும் புரத பகுப்பாய்வு நுட்பங்களைப் பயன்படுத்தி நஞ்சுக்கொடியில் ACE-2 வெளிப்பாட்டை ஒப்பிட்டனர்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு கொடி சுற்றிக்கொண்டால் சுகப்பிரசவம் நடக்குமா..? மருத்துவரின் பதில்...

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நுரையீரலுடன் பல ஒற்றுமைகளைக் நஞ்சுக்கொடி கொண்டுள்ளது. எனவே இந்த ஆய்வு பல்வேறு நுரையீரல் நோய்களை புரிந்து கொள்வதற்கு அதை ஆராய்வதன் முக்கியத்துவத்தை எடுத்து காட்டுகிறது மற்றும் SARS-CoV-2 தொற்றுகளை தடுப்பதற்கான ஒரு வழியாக ACE-2-ஐ கட்டுப்படுத்துவதில் இருக்கும் முக்கிய பங்கையும் இந்த ஆய்வு எடுத்துகாட்டி இருக்கிறது.

நஞ்சுக்கொடி இயற்கையாகவே கோவிட்-19 தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டால், மற்ற SARS-CoV-2 நோய் தொற்றுகள் தொடர்ந்து பரவுவதைத் தடுக்க உதவும் சிகிச்சைகள் மற்றும் உத்திகளுக்கான முக்கியமான தகவலை இது வழங்கலாம் என்று எலிசபெத் எஸ். டாக்லாயர் கூறி இருக்கிறார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Baby Care, CoronaVirus, Pregnancy care