Home /News /lifestyle /

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஏன் வாசனை உணர்வை இழக்கிறார்கள்.?

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஏன் வாசனை உணர்வை இழக்கிறார்கள்.?

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தொற்றால் பாதிக்கப்படும் பலர் வாசனை இழப்பு சிக்கலை எதிர் கொண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்புகள் பெருமளவு குறைந்திருந்தாலும் கூட பலர் இன்னும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பை போலவே தொற்றால் பாதிக்கப்படும் பலர் வாசனை இழப்பு சிக்கலை எதிர் கொண்டுள்ளனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த வாசனை இழப்பு தற்காலிகமானது . இந்த தற்காலிக வாசனையிழப்பு ஹைப்போஸ்மியா என்று அழைக்கப்படுகிறது. இந்த சிக்கலால் பாதிப்படும் நோயாளி சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு இதிலிருந்து குணமடைகிறார்கள்.

கோவிட் வாசனை இழப்பு எவ்வாறு கண்டறியப்படுகிறது.?

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் முதலில் வாசனை உணர்வை இழந்துவிட்ட பிறகே சோதனை செய்து கொள்கிறார்கள். சோதனையில் தொற்று உறுதியாகிறது. மனிதனின் முக்கியமான உணர்வுகளில் வாசனை முக்கியமான ஒன்று என்பதால் திடீரென வாசனை உணர்வு இல்லாமல் போகும் போது நோயாளிகள் அதிர்ச்சியடைகிறார்கள். சிலருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு கூட இந்த அறிகுறி தோன்றுகிறது.

பாதிப்புகள்..

வாசனை இழப்பு அறிகுறிகளை எதிர்கொண்ட கோவிட் நோயாளிகள் அவர்களின் டயட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள். ஏனென்றால் வாசனை இழப்புடன் தாங்கள் சுவை உணர்வையும் இழந்ததாக கூறுகிறார்கள். ஒரே நேரத்தில் இந்த 2 அறிகுறிகளையும் அனுபவித்தது நன்றாக சாப்பிடும் தங்களை சரியாக சாப்பிடவிடாமல் செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இது உடல்ரீதியாக மேலும் சில ஆபத்துகளுக்கு காரணமாகிறது. ஏனென்றால் வாசனை மற்றும் சுவை உணர்வு இல்லாமல் போவதால் கெட்டுப்போன உணவு என்று தெரியாமல் அவற்றை சாப்பிடுவது விரும்பத்தகாத மற்றும் ஆபத்தான உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும்.



கோவிட் ஏன் வாசனை இழப்பை ஏற்படுத்துகிறது..?

ரத்தத்தில் இன்டர்லூகின் 6 (Interleukin 6) ஸ்பைக் இருக்கும் போது ஒருவரது உடலில் சுவை மற்றும் வாசனை இழப்பு ஒரே நேரத்தில் ஏற்படுவதாக இத்தாலி ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சி ஆய்வுகளின்படி இன்டர்லூகின் 6 என்பது ஒரு அழற்சி சமிக்ஞை மூலக்கூறாகும். கோவிட்-19-பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே நோய் முன்னேற்றத்தை கண்டறிவதில் ரத்தத்தில் சுற்றும் இன்டர்லூகின் 6-ன் அளவை அளவிடுவது முக்கியமானதாக இருக்கலாம். மனித உடலில் கொரோனா வைரஸ் நுழைவதற்கு முக்கியமான ACE2 மற்றும் TMPRSS2 ஆகிய இரண்டு மரபணுக்களும் ஆல்ஃபாக்டரி எபிட்டிலியத்தில் உள்ள செல்களால் வெளிப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. தொற்று பாதிப்பால் ஆல்ஃபாக்டரி எபிட்டிலியத்தில் உள்ள துணை செல்கள் செயல்படாமல் போவதால் தற்காலிக வாசனை இழப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

கொளுத்தும் வெயிலில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா..? இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!

இழந்த வாசனை உணர்வு எப்போது திரும்பும்.?

இது நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு சில நாட்களுக்குள் வாசனை உணர்வு திரும்பினாலும், பலருக்கு சில வாரங்கள் அல்லது ஒன்றிரண்டு மாதங்கள் ஆகலாம். வயதானவர்களில் ஒரு சிலர் தங்களது இழந்த வாசனை உணர்வை ஒரு வருடத்திற்குள் திரும்ப பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சில நிபுணர்கள் வைரஸுக்குப் பிந்தைய வாசனை இழப்பு கொண்ட நோயாளிகள் ஒரு வருடத்திற்குள் தங்கள் வாசனை செயல்பாட்டை மீண்டும் பெற 60% முதல் 80% வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் வயது காரணமாக வாசனை உணர்வு பொதுவாக குறைவதால், மீட்புக்கு அதிக நேரம் எடுப்பதாக ஹார்வர்ட் அறிக்கை கூறுகிறது.



ஏதேனும் சோதனை.?

இழந்த வாசனை உணர்வு முழுமையாக திரும்ப வந்து விட்டதா என்பதை கண்டறிய குறிப்பிட்ட சோதனை எதுவும் இல்லை. எனினும் வாசனை உணர்வு திரும்பியிருக்கிறதா என்பதைச் சரிபார்க்க ஒருவர் வாசனை பயிற்சியை முயற்சி செய்யலாம். வாசனை உணர்வு இயல்பாகிவிட்டதா என்பதை கண்டறிய, அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனை திரவிய பாட்டில்களை அடிக்கடி முகர்ந்து பார்க்கலாம்.

நிரந்தரமாக பாதிக்குமா.?

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் அறிக்கை, ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் நரம்பியல் நிபுணர்கள் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு இது ஒரு தற்காலிக பாதிப்பாக இருக்கவே அதிக வாய்ப்பு என்று கூறி இருக்கிறது. தவிர உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள், கோவிட் காரணமாக ஏற்படும் வாசனை இழப்பு தற்காலிகமானது என்றும், அது மீண்டும் திரும்பி விடும் என்றாலும் இதன் விகிதம் நபருக்கு நபர் மாறுபடும் என்று கூறி இருக்கிறார்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Symptoms, CoronaVirus, Post Corona Symptoms

அடுத்த செய்தி