ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பப் பரிசோதனை கிட்டை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரிசல்ட் கிடைக்குமா..?

கர்ப்பப் பரிசோதனை கிட்டை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரிசல்ட் கிடைக்குமா..?

கர்ப்பப் பரிசோதனை கிட்

கர்ப்பப் பரிசோதனை கிட்

உங்கள் மாதவிடாய் காலம் ஏற்படாமல், 30 முதல் 45 நாட்கள் வரை தள்ளிப் போனால், நீங்கள் பரிசோதனை செய்யலாம். பரிசோதனை செய்யும் போது, உடலில் நீர்சத்து வற்றியிருக்கக் கூடாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பதை இப்போதெல்லாம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதற்கென்று பிரத்தியேகமான பிரக்னன்சி டெஸ்ட் கிட என்று மருந்தகங்களில் கிடைக்கிறது. சில காலம் முன்பு வரை மருத்துவமனைக்குச் சென்று சிறுநீர் அல்லது ரத்த பரிசோதனை செய்வதன் மூலம் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். கர்ப்பமாக இருப்பதற்கு என்றே அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவர்கள் உறுதிப்படுத்துவது அவசியம்.

ஆய்வகங்களில் மேற்கொள்ள வேண்டிய டெஸ்ட்டை தற்போது சிறிய பேக் பயன்படுத்தி செய்துவிடலாம். ஆனால் ஒரு சிலருக்கு பிரக்னன்சி கிட் டெஸ்ட்டில் வரும் முடிவுகள் திருப்திகரமானதாக இல்லை. இந்த நிலையில் அவர்கள் என்ன செய்யலாம்? அதுமட்டுமின்றி கர்ப்ப பரிசோதனை கிட்டை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதற்கான விளக்கம் இங்கே.,

வீட்டில் பரிசோதனை ஹோம் பிரக்னன்சி கிட் எப்படி வேலை செய்கிறது :

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்பதை அந்த பெண்ணின் ரத்தம் அல்லது சிறுநீரில் இருக்கும் hCG என்ற ஹ்யூமன் கோரயானிக் கோனாடாட்ரொபின்என்ற ஹார்மோன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த ஹார்மோன் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு அதிகமாக சுரக்கும். கரு முட்டை ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்கு வெளியே அல்லது கர்ப்பப்பையின் சுவற்றில் இணையும் பொழுது இந்த ஹார்மோன் உடலில் ரிலீஸ் ஆகும். விந்தணு முட்டையை ஃபெர்டிலைஸ் செய்வதற்கு 6 – 7 நாட்கள் ஆகும்.

விந்தணு கருமுட்டையை அடைந்து கரு உருவாகத் தொடங்கிய பின்பு உடலில் ஏற்படும் கெமிக்கல் ரியாக்ஷனை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படி கரு உருவாகும் போது, hCG சுரப்பு அதிகமாகும். பிரக்னன்சி ஸ்ட்ரிப்பில் hCG ஆன்டிபாடிகள் இருக்கும். சிறுநீரை பரிசோதிக்கும் பொழுது hCG அதிகப்படியாக இருக்கிறது என்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், அதாவது பாசிட்டிவ் என்ற முடிவை ஸ்ட்ரிப்பில் இரண்டு பிங்க் நிற கோடுகளாகக் காட்டும். ஒரே கோடு என்றால் hCG அளவு சாதாரணமாக இருக்கிறது, கர்ப்பமில்லை என்பது அர்த்தம்.

ஹோம் பிரக்னன்சி கிட்டை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தலாமா?

பெண்களுக்கு சௌகரிய மாக இருக்கும் என்ற காரணத்திற்காக பிரக்னன்சி டெஸ்ட் ஸ்ட்ரிப் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு செல்லத் தேவையில்லை. கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பதை ஒருசில நிமிடங்களில் உறுதிப்படுத்திவிட முடியும். எனவே இந்த கிட்டை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாய் தள்ளிப் போனாலும் கர்ப்பப் பரிசோதனையில் நெகட்டிவ் வர என்ன காரணம்..?

பெரும்பாலான நேரங்களில் துல்லியமான முடிவு,அதாவது கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை சரியாகக் காட்டினாலும் ஒரு சில சமயங்களில் இதன் முடிவு முடிவு சரியானதா இல்லையா என்பது பின்வரும் சூழலில் கேள்விக்குறியாகிறது.

* பிரக்னன்சி டெஸ்ட் ஸ்ட்ரிப் காலாவதியாகியது

* வெளிப்புறத்தில் இருக்கும் இதேனும் ஏதாவது பொருட்களால் பாதிப்படையலாம் (பெர்ஃப்ய்யூம், கெமிக்கல், புகை)

* எவாப்பரேஷன் லைன்களில் பிரச்சனை

* நீங்கள் எந்த நேரத்தில் கர்ப்ப பரிசோதனை செய்தீர்கள்

* இந்த உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு

* சோதிப்பதற்கு முன்பு நீங்கள் எவ்வளவு நேரம் காத்திருந்தார்கள்

நீங்கள் துல்லியமான முடிவுகளை பெற வேண்டுமென்றால் கிட்டில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விதிமுறைகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டும்

குறைப்பிரசவம் என்பது குறைபாடா..? ஆரம்ப கால அறிகுறிகளும்... தடுக்கும் வழிகளும் என்ன...?

எந்த நேரத்தில் பரிசோதனை செய்வது சரியான முடிவுகளைத் தரும்?

உங்கள் மாதவிடாய் காலம் ஏற்படாமல், 30 முதல் 45 நாட்கள் வரை தள்ளிப் போனால், நீங்கள் பரிசோதனை செய்யலாம். பரிசோதனை செய்யும் போது, உடலில் நீர்சத்து வற்றியிருக்கக் கூடாது. கர்ப்பம் உறுதியா இல்லையா என்பது சரியாக தெரிய வேண்டுமென்றால் காலையில் எழுந்தவுடன் வெளியேறும் முதல் சிறுநீரில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதில் hCG அளவு தெளிவாகத் தெரியும்.

பிரக்னன்சி கிட்டைமறுபடி பயன்படுத்தலாமா?

ஒருமுறை பயன்படுத்த கிட்டை மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், முடிவுகள் துல்லியமாகக் காட்டுமா என்பது சந்தேகத்துக்குரியது.

உங்களுக்கு திருப்தி இல்லை என்னும்பட்சத்தில், மகப்பேறு மருத்துவரை அணுகி, பரிசோதனை மேற்கொள்ளலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy kit, Pregnancy test