Home /News /lifestyle /

Contact Lens அணிபவர்கள் கவனத்திற்கு - கண் மருத்துவர் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! 

Contact Lens அணிபவர்கள் கவனத்திற்கு - கண் மருத்துவர் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! 

contact lenses

contact lenses

Contact Lens | கண் மருத்துவர் ராதிகா டாண்டன் கருத்து படி, கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் போது மக்கள் செய்யும் சில பொதுவான தவறுகள் கண்புரை ஏற்பட காரணமாக அமைகிறது என தெரிவித்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் கண்ணாடி அணியாதவர்களை பார்க்கவே முடியாது. நமது தாத்தா, பாட்டி காலத்தில் 60 வயதில் ஆரம்பித்த கண் பிரச்சனைகள் எல்லாம், இப்போது ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளுக்கு வந்துவிடுகிறது. கிட்ட பார்வை, தூரப்பார்வை என சின்னச்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டியுள்ளது. அதற்குக் காரணம் கண்ணுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளாமல், பாஸ்ட் ஃபுட் உணவிற்கு அடிமையாகி கிடைத்ததை சாப்பிடுவது தான்.

நவீனமயமாக மாறிவரும் இக்காலத்தில் யாரும் கண்ணாடி அணிய விரும்புவது கிடையாது. கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, அவை ஃபேஷனின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சி மற்றும் சந்தை நிலவரப்படி வெளியான அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது உலக அளவில் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களின் எண்ணிக்கை 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் அபார வளர்ச்சியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே காண்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் காஸ்மெடிக் காண்டாக்ட் லென்ஸ்கள் எவ்வாறு அதிகளவில் விரும்பப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

கண் மருத்துவப் பேராசிரியை ஆன மருத்துவர் ராதிகா டாண்டன் கூறுகையில், “கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அதனை பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் கையாளாவிட்டால், பல பிரச்சனைகள் உண்டாகும் என எச்சரிக்கிறார். கான்டாக்ட் லென்ஸ் மாசு அடைவது அல்லது பாதிக்கப்படுவது கண்கள் மற்றும் பார்வைக்கு தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்.



கான்டாக்ட் லென்ஸ்களை சரியாகப் பராமரிக்காவிட்டால் கண் தொற்று வருவதோடு விழிப்படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பார்வை இழப்பும் நேரிடலாம். எனவே கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு தூங்குவது, கண்ணில் அணிந்திருக்கும் போது அடிக்கடி கைவைத்து அட்ஜெஸ்ட் செய்வது, நீண்ட நேரத்திற்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது.

Also Read : கடுமையான பாதிப்பை உண்டாக்கும் கண் நோய்கள்

கண் மருத்துவர் ராதிகா டாண்டன் கருத்து படி, கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் போது மக்கள் செய்யும் சில பொதுவான தவறுகள் கண்புரை ஏற்பட காரணமாக அமைகிறது என தெரிவித்துள்ளார். மேலும் 24 மணி நேரமும் கான்டாக்ட் லென்ஸ் அணிவது கண் சம்பந்தப்பட்ட தொற்று நோய்களை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.



யாராவது கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு உறங்கினால், அது கண்களுக்கு ஹைபோக்ஸியா பாதிப்பை கொண்டு வரும் என தெரிவிக்கிறார். உடலில் உள்ள திசுக்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பாதிக்கப்படும் நிலை ஹைபோக்ஸியா என அழைக்கப்படுகிறது.

Also Read : Diabetic Retinopathy முழுமையான பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் 4 பிரச்சனைகள்

இந்தக் குறைபாட்டின் காரணமாக, கார்னியாவின் எபிடெலியல் திசுக்கள் பலவீனமடைந்து கண்களில் குறைபாடுகள் ஏற்படும் என எச்சரிக்கும் கண் மருத்துவர் ராதிகா, லென்ஸை சரியாக பராமரிக்காவிடில், கெராடிடிஸ், கார்னியல் இன்ஃபெக்ஷன் மற்றும் கார்னியல் அல்சர் போன்ற பிரச்சனைகளால் கண்கள் பாதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் கண் விழிக்கு ஏற்படும் பாதிப்பு குருட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும் என்றும், கான்டாக்ட் லென்ஸ்களை ஒருநாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை அணிவது மட்டுமே பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Eye care, Health

அடுத்த செய்தி