ஆண்கள் மட்டுமல்ல, பெரும்பாலான பெண்களும் கூட பைல்ஸ் எனப்படும் 'ஹேமராய்ட்ஸ்' (Hemorrhoids) பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். "பெரும்பாலான பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மூல நோய் அல்லது பைல்ஸ் என்பது ஆசனவாய் மற்றும் மலக்குடலின் கீழ் பகுதியில் இருக்கும் வீங்கிய நரம்புகள் ஆகும்" என்கின்றனர் நிபுணர்கள்.
பைல்ஸ் ஏற்பட காரணங்கள்:
'ஜன்க் ஃபுட்' மற்றும் காரமான உணவு, மலச்சிக்கல், அதிக எடை தூக்குதல், கர்ப்பம், உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணிகள் இந்த பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
அறிகுறிகள்:
பைல்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்க முடியாத வலி, ஆசனவாயில் இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை சந்திப்பார்கள். "இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டறிந்ததும், தாமதமின்றி சரியான சிகிச்சையைப் பெறுவது முக்கியம்" என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சிகிச்சை முறைகள்:
- மருந்து, அறுவை சிகிச்சை மற்றும் சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் பைல்ஸ் நோயில் இருந்து மீள பயனுள்ளதாக இருக்கும்.
- ஸ்டூல் சாஃப்ட்னர்ஸ் மற்றும் லக்ஸாடிவ்ஸ் ஒருவருக்கு மலம் கழிப்பதில் உள்ள சிக்கலை சீர் செய்யும், மேலும் பைல்ஸ் வலியைக் குறைக்கும்.
- கார்டிகோஸ்டீராய்டு கிரீம்ஸ் மற்றும் ஆயின்மென்ட்ஸ், வீக்கம், வலி மற்றும் அரிப்பு ஆகியவற்றைக் குறைக்க உதவுகின்றன. ஆனால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே இவைகளை பயன்படுத்தவும்.
இரத்த அழுத்தம் அளவுக்கு மீறி சென்றுவிட்டதா..? இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்..!
- லேசர் ஹெமோர்ஹாய்டோபிளாஸ்டி (எல்எச்பி) என்பது பைல்ஸ் நோயாளிகளுக்கு உதவும் ஒரு குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய, பாதுகாப்பான, குறைவான வலி தரும், துல்லியமான மற்றும் பயனுள்ள ஒரு மருத்துவ செயல்முறையாகும்.
-பைல்ஸ் பாதிப்பு உள்ள பெண்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது குஷன் பயன்படுத்த வேண்டும். இந்த சிக்கலைத் தவிர்க்க அவ்வப்போது உடற்பயிற்சி செய்ய அல்லது ஸ்ட்ரெச் செய்ய முயற்சிக்கவும்.
- குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள். பீன்ஸ், ப்ரோக்கோலி, அவகேடோ, முழு தானியங்கள், ஸ்ட்ராபெரி, பாதாம், வாழைப்பழங்கள், ஓட்ஸ், ஆரஞ்சு, சோளம், குயினோவா, கொண்டைக்கடலை, ஆப்பிள் மற்றும் கீரை ஆகியவற்றை மறக்க வேண்டாம்.
- போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். பைல்ஸ் அறிகுறிகளை தூண்டக்கூடிய ஜன்க் மற்றும் ஸ்பைஸி, ஆய்லி ஃபுட்களை தவிர்க்கவும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது என்று சொல்வதற்கு பின் இருக்கும் உண்மை என்ன..?
- பைல்ஸ் ஏற்பட மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். எனவே, யோகா மற்றும் தியானம் போன்றவைகளை முயற்சி செய்து மன அழுத்தத்தை குறைக்கவும்.
- உங்கள் குதப் பகுதியை வெதுவெதுப்பான நீரில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை ஊற வைத்து சிட்ஸ் பாத் அல்லது ஹிப் பாத் எடுத்துக் கொள்ளுங்கள். இது பைல்ஸ் காரணமாக ஏற்படும் வலியைப் போக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Constipation, Piles