ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆண்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் விறைப்பு தன்மையில் குறைபாடு ஏற்படுகிறதா..?

ஆண்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் விறைப்பு தன்மையில் குறைபாடு ஏற்படுகிறதா..?

 நீரிழிவு நோயின் விளைவுகள்

நீரிழிவு நோயின் விளைவுகள்

தீவிர உடல்நல கோளாறுகளுடன் கருவுறுதல் பிரச்சனைகளையும் உருவாக்குகிறது நீரிழிவு நோய். இது குறித்து ஃபெர்ட்டிலிட்டி கன்சல்டன்ட்டாக இருக்கும் பிரபல மருத்துவர் சினேகா சாத்தே விளக்கி இருக்கிறார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உணவுக்கு பிறகான ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நமது கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இந்த இன்சுலின் சரியாக சுரக்காமல் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படாமல் அதிகமாகும் போது ஹைப்பர் கிளைசீமியா நிலை ஏற்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து காணப்படும் இந்த நிலை நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. ஹைப்பர் கிளைசீமியா நீடித்தால் ஒரு கட்டத்தில் டைப் 2 நீரிழிவு நோயாக மாறுகிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் இதய நோய், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல கடும் உடல்நல கோளாறுகளை நீரிழிவு நோய் ஏற்படுத்தும்.

எனினும் நீரிழிவு நோயின் விளைவுகள் பற்றி மக்களுக்கு தெரியாத சில காரணிகள் உள்ளன. தீவிர உடல்நல கோளாறுகளுடன் கருவுறுதல் பிரச்சனைகளையும் உருவாக்குகிறது நீரிழிவு நோய். இது குறித்து ஃபெர்ட்டிலிட்டி கன்சல்டன்ட்டாக இருக்கும் பிரபல மருத்துவர் சினேகா சாத்தே விளக்கி இருக்கிறார். நம் உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாத போது பல எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து நிர்வகிக்காவிட்டால் நரம்புகள், இதயம், சிறுநீரகங்கள் போன்ற பல உள்ளுறுப்புக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு கருவுறுதலிலும் சிக்கல்களை ஏற்படுத்துவதாக கூறி இருக்கிறார். மேலும் நாள்பட்ட நீரிழிவு நோயினால் ஆண்களை பாதிக்கும் மலட்டுத்தன்மை சார்ந்த சில பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

விறைப்புத்தன்மையில் குறைபாடு:

நாள்பட்ட நீரிழிவால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு விறைப்பு தன்மையில் குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் கூறுகிறார். துணையுடன் உடலுறவு கொள்ள விரும்பும் போது பிறப்புறுப்பு போதுமான விறைப்பை ஒரு ஆணால் பெற முடியாமல் போக நாள்பட்ட நீரிழிவு வழிவகுக்கிறது. இதனால் ஏற்படும் மனஅழுத்தம் செக்ஸ் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளியின் நரம்பு சேதம் அல்லது ரத்த ஓட்ட பிரச்சினைகளின் விளைவாக இந்த குறைபாடு ஏற்படக்கூடும் என்கிறார் மருத்துவர் சினேகா.

ரெட்ரோகிரேட் எஜாக்குலேஷன் (Retrograde ejaculation):

இந்த பிரச்சனை பிற்போக்கு விந்துதள்ளல் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு ஆண் தன் துணையுடன் உடலுறவில் ஈடுபட்டு உச்சகட்டத்தை அடையும் போது பிறப்புறுப்பில் இருந்து விந்து வெளியேற வேண்டும். இது தான் இயல்பு, ஆனால் விந்து பிறப்புறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு பதிலாக உள்ளியே யு-டர்ன் அடித்து சிறுநீர்ப்பைக்குள் நுழையும் நிலை தான் இது. உச்சகட்டத்தை ஒரு ஆண் அடைந்த பின்பும் கூட விந்து வெளியேறாமல் இருக்கும் இந்த நிலை மலட்டுத்தன்மையை மோசமாக்குகிறது.

Also Read : 30 வயதை தாண்டிவிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம்... அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!

ஹைப்போகோனாடிசம் (Hypogonadism):

கட்டுப்பாடற்ற அல்லது நாட்பட்ட நீரிழிவு நிலையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த நிலை இல்லாத நபரை விட டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை குறைவாக கொண்டிருப்பதற்கான வாய்ப்பு சுமார் 2 மடங்கு அதிகம். பாலியல் சுரப்பிகளால் வெளியிடப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் தான் உடலுறவில் ஆர்வத்தை தூண்ட காரணமாகிறது மற்றும் பாலியல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைவதால் ஒரு ஆணுக்கு உடலுறவு மீதான ஆர்வமும் குறைகிறது.

விந்து வெளியேறுவதில் தாமதம்:

ஆங்கிலத்தில் Delayed ejaculation என்று கூறப்படும் இந்த நிலை விந்துதள்ளல் குறைபாடு என்றும் குறிப்பிடப்படுகிறது. பாலியல் உறவின் போது உச்சகட்டத்தை அடைய மற்றும் ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியேற எதிர்பார்ப்பதை விட மிகநீண்ட நேரம் எடுத்து கொள்ள கூடிய நிலையாகும். ஒருசில நேரங்களில் என்ன தான் முயன்றாலும் ஒரு ஆணால் உச்சகட்டத்தை அடைந்து விந்துவை வெளியேற்ற முடியாது. நீரிழிவால் நரம்புகளில் ஏற்படும் சேதம் இந்நிலைக்கு வழிவகுப்பதாக மருத்துவர் கூறுகிறார்.

Also Read : UTI Infection : வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டுகள் சிறுநீர் பாதை தொற்றை ஏற்படுத்துமா..? தவிர்க்கும் வழிகள்..!

விந்தணுக்களின் தரத்தில் குறை:

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விந்தணு இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுவது குறைவு என்றாலும், அவர்களின் விந்தணுக்களின் தரத்தில் பாதிப்பு ஏற்படும் என்கிறார் மருத்துவர் சினேகா. நீரிழிவு பாதிப்பை தவிர உடல் பருமன் பிரச்சனையும் கூட விந்தணுக்களின் தரத்தை மோசமாக பாதிக்கும் என்கிறார். இயல்பாக ஒரு மில்லிலிட்டர் விந்துவில் 15 மில்லியனுக்கும் அதிகமான விந்தணுக்கள் இருக்க வேண்டும். இதை விட குறைவாக இருந்தால் அந்த நிலை ஒலிகோஸ்பெர்மியா எனப்படுகிறது.

ஸ்பெர்ம் டிஎன்ஏ ஃப்ராக்மென்டேஷன்:

குளுக்கோஸ் மெட்டபாலிசம் என்பது விந்தணுக்களின் வளர்ச்சியில் ஒரு இன்றியமையாத நிகழ்வு. உடலில் காணப்படும் அதிக குளுக்கோஸ் அளவு உடலில் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை அதிகரிக்கிறது. இது டிஎன்ஏ பேக்கேஜ் கேரியராக விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம்.

First published:

Tags: Diabetes, Erectile Dysfunction, Male infertility