ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மாதவிடாய் நாட்களில் முதுகுவலி ஏற்படுவது இயல்பானதா..? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

மாதவிடாய் நாட்களில் முதுகுவலி ஏற்படுவது இயல்பானதா..? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

மாதவிடாய் நாட்களில் முதுகுவலி

மாதவிடாய் நாட்களில் முதுகுவலி

இடுப்பு வலியை தவிர்க்க நடவடிக்கை எடுக்கும் அதே சமயத்தில் மாதவிலக்கு காலத்தில் சுகாதார நடவடிக்கை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கு காலம் மிகவும் அசௌகரியமானதாக இருக்கிறது. கடும் வயிற்று வலி, மார்புகள் தளர்வு மற்றும் எண்ண தடுமாற்றங்கள் போன்றவை பொதுவான அறிகுறிகளாக உள்ளன. இதைவிட முக்கியமாக அனைத்து பெண்களுக்கும் ஏற்படக் கூடிய பொதுவான அறிகுறி இடுப்புவலி தான்.

இது பொதுவான அறிகுறி என்றாலும் ஒரு அளவுகோல் வேண்டாமா! எந்த அளவுக்கான வலி இயல்பானது? எது மிக அதிகமானது? மாதவிலக்கு காலத்தில் கர்ப்பப்பையில் சுருக்கங்கள் ஏற்படுவதால், தாங்கக் கூடிய வகையில் வலி ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அதுவே மிகுதியாக இருக்கிறது என்றால் அது எண்டோமெட்ரியோசிஸ் அல்லது இடுப்புப் பகுதி தொற்றின் அறிகுறி ஆகும்.

மிதமான அளவு வலி இருந்தால் என்ன செய்வது?

மாதவிலக்கு கால அசௌகரியம் மிகுந்த சூழலில், கடினமான வேலைகளை செய்யாமல் தவிர்ப்பதும், போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வதும் நல்ல பலனை தரும். வீட்டில் வெந்தய டீ, ஜீரக தண்ணீர் போன்றவை அருந்தலாம். சில சமயம், வலி நிவாரணம் தரக் கூடிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

கடுமையான வலி இருந்தால் என்ன செய்வது?

இயல்பான சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்படாமல் மிகுந்த வலி ஏற்பட்டால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவும். எண்டோமெட்ரியோசிஸ் அல்லது ஃபைப்ராய்ட்ஸ் போன்ற தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த தொற்றும் இல்லை என்றால், பிடிப்புகளை குறைப்பதற்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரை செய்வார்.

Also Read : இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் உடல் எடையை குறைப்பது கடினம் : உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கா..?

மாதவிலக்கு காலத்தில் இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

மாதவிலக்கு காலத்தில் மிதமான அளவில் இடுப்பு வலி ஏற்படுவது இயல்பானது தான். ஏனென்றால், இது ஹார்மோன்களால் தூண்டப்படும் சுருக்கங்கள் காரணமாக நிகழுவது ஆகும். ஆனால், அதுவே வலி மிகுதியாக இருந்தால் தொற்று வாய்ப்புகள் குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எந்த தொற்றும் இல்லை என்றால் வலி நிவாரணிகள் மற்றும் ஹார்மோன்களை சீராக்கும் மருந்துகள் போன்றவற்றை மருத்துவரை ஆலோசித்து எடுத்துக் கொள்ளலாம்.

மாதவிலக்கு கால சுகாதார நடவடிக்கைகள் :

இடுப்பு வலியை தவிர்க்க நடவடிக்கை எடுக்கும் அதே சமயத்தில் மாதவிலக்கு காலத்தில் சுகாதார நடவடிக்கைகள் சிலவற்றை பின்பற்ற வேண்டும். இது தொற்றுகளை தவிர்க்க உதவும். சானிட்டரி நாப்கின் அல்லது மென்ஸ்சுரல் கப் அல்லது டேம்பன் என உங்களுக்கு சௌகரியமான எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், இவற்றை பொருத்துவதற்கு முன்பாகவும், இவற்றை அகற்றும்போதும் உங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மாதவிலக்கு காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப் கொண்டு அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Back pain, Periods