கொரோனாவில் இருந்து மீண்டவரா நீங்கள்? உங்கள் இருதயத்தை கவனிக்க மறக்காதீர்கள்!

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மார்பு வலி, திடீர் படபடப்பு, அசாதாரண இதய துடிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு உள்ளாவது அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மார்பு வலி, திடீர் படபடப்பு, அசாதாரண இதய துடிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு உள்ளாவது அதிகரித்து காணப்படுகிறது.

  • Share this:
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மக்களை தொடர்ந்து வாட்டிய நிலையில், கொரோனா தொற்றிலிருந்து தைரியமாக போராடி மீண்டு வரும் பலர் லாங் கோவிட் (long covid) எனப்படும், வழக்கத்தை விட நீண்ட காலத்திற்கு சில கொரோனா அறிகுறிகளை தொடர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில் தொற்றிலிருந்து மீண்ட சிலர் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக 30-50 வயதுடைய கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மார்பு வலி, திடீர் படபடப்பு, அசாதாரண இதய துடிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு உள்ளாவது  அதிகரித்து காணப்படுகிறது.

எனவே, கொரோனா தொற்றுக்கு பின் இதய செயல்பாட்டில் ஏதேனும் புதிய அசாதாரண மாற்றங்களை உணர்ந்தால் அதனை விரைவாக கண்டறிய மருத்துவர்கள் அடிக்கடி வழக்கமான இதய பரிசோதனையை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் இதயநோய் நிபுணர் டாக்டர் ராஜ்பால் சிங், நீண்டகால இதய பாதிப்பு ஏற்படும் அபாயங்கள் மற்றும் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின் எவ்வளவு கடும் இதயம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படலாம் என்பதை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், கொரோனா நோய் சுமார் 20-25% என்ற கடுமையான கட்டத்தில் ஒருவரது இதயத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மீட்பு கட்டத்தில் இது இதயத்தில் தொடர்ச்சியான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றுகள் உள்ளன. மேலும், இது பொதுவாக இதய செயலிழப்பு மற்றும் இதய துடிப்பு சிக்கல்கள் மற்றும் திடீர் இதய மரணம் ஆகியவற்றின் வடிவத்தில் வெளிப்படுகின்றன. நோயாளிகள் மூச்சுத் திணறல், படுக்கையில் தட்டையாக படுத்து கொள்ள இயலாதது அல்லது கால்கள் வீக்கம், இதய செயலிழப்பு உள்ளிட்ட பல அறிகுறிகளை வெளிப்படுத்தக்கூடும் என்று டாக்டர் சிங் விளக்கினார்.

எனவே, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் அல்லது மீண்ட நபர்கள் மார்பு வலி, திடீர் படபடப்பு, தலைசுற்றல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் உணர்ந்தால் அறிகுறிகள் குறையும் வரை காத்திருப்பது அல்லது வீட்டிலேயே வைத்தியம் செய்வதற்குப் பதில், உடனடியாக ஒரு மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் பேசிய மருத்துவர், ட்ரோபோனின் அளவுகள் (Troponin levels), ப்ரோபிஎன்பி (ProBNP) மற்றும் டி-டைமர்ஸ் (D-Dimers) போன்ற இருதய பயோமார்க்ஸர்களை கண்காணித்தல், ஈ.சி.ஜி மற்றும் எக்கோ கார்டியோகிராஃபிக் அனலைஸிஸ் (echocardiographic analysis) ஆகியவை கோவிட்டுக்கு பிந்தைய இதய சிக்கல்களை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் காண உதவுகிறது என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் சிலருக்கு ரத்த அளவு குறைவது தொடர்பான அறிகுறியான POTS (postural orthostatic tachycardia syndrome) இருப்பதாகவும்  நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த POTS நோயாளியின் இதயத்தை நேரடியாக பாதிக்காது என்றாலும் இதய துடிப்பை அசாதாரண முறையில் அதிகரிக்க செய்யக்கூடும். இது சீரற்ற மூளை செயல்பாடு மற்றும் லேசான தலைவலிக்கு வழிவகுக்கும்.

இந்த அறிகுறிகளை அனுபவிப்பவர்கள் ஒரு பயிற்சி பெற்ற இதயநோய் நிபுணரை சந்திக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் அவற்றுக்கு உரிய சிகிச்சையளிக்க முடியும் என்றார். தொற்றிலிருந்து மீளும் கட்டத்தில் ஏற்கனவே வீக்கத்தை கொண்டிருக்கும் ஒருவர், மீண்ட பின்னரும் வீக்கம் சரியாக சில நாட்கள் அல்லது சில வாரங்கள் ஆகலாம். எனவே இத்தகைய நோயாளிகள் தங்கள் உடலை சிரமப்படுத்திக்கொள்ள கூடாது. ஓய்வில் இருக்க வேண்டும், அடிக்கடி தண்ணீர் குடித்து உடலை சீராக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
Published by:Archana R
First published: