சரியாக தூங்காமல் இருப்பது, கடுமையான வேலை அல்லது நீண்ட நேரமாக வேலை செய்வது, போதிய அளவு சாப்பிடாமல் இருப்பது, நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை காரணமாக மயக்கம் விடலாம். இவற்றைத் தவிர்த்து, குறைவான ரத்த அழுத்தமும் ஒருவருக்கு அடிக்கடி மயக்கம் வருவதற்கு காரணமாக அமைகிறது. சின்கோப் என்று மருத்துவ ரீதியாக கூறப்படும் மயக்கம் உங்கள் சில நேரங்களில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்களுக்கு அடிக்கடி மயக்கம் வருவது போல தோன்றினால் அல்லது மயங்கினால், அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
முறையற்ற உணவுப் பழக்கம், தூக்கமின்மை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவை உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாக அமைகிறது. இவை அர்ரிதமியா மற்றும் கரோனரி இதய நோய்கள் ஆகியவற்றிக்கும் முக்கியமான காரணங்களாக இருக்கிறது.இளம் ஆண்களில் 3 சதவிகிதம் மற்றும் இளம்பெண்களில் 3.5 சதவிகிதத்தினரும் ஏதோ ஒரு கட்டத்தில் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சின்கோப் என்னும் மயக்கத்தால் எதிர்பாராத நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரியும் அபாயம் உள்ளது. சின்கோப் ஏற்படுவதற்கு முன்பு, தலை சுற்றுவது, குமட்டல், உடல் சோர்வு மற்றும் இதயத் துடிப்பு வேகமாகவோ அல்லது குறைவாக இருப்பது ஆகிய அறிகுறிகள் தோன்றும்.
அடிக்கடி மயக்கம் வருவதால் ஏற்படக்கூடிய இதய நோய் பாதிப்புகள்
அர்ரிதமியா என்பது சீரற்ற இதயத்துடிப்பு ஆகும். இதயம் அதிவேகமாக இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு வேகமாக துடித்து, ரத்தத்தை மற்றும் ஆக்சிஜனை வெளியேற்ற முயற்சி செய்யும். இதயம் வேகவேகமாக குடிப்பதால் தசைகள் மற்றும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது.
உயிரைக் குடிக்கும் கார்டியோவாஸ்குலர் நோய்கள்
உங்களுக்கு உடலில் நீர்சத்து குறைபாடு இல்லை என்னும் போது, அடிக்கடி மயங்கி விழுவது போல அடிக்கடி மயக்கம் வருவது போன்ற அறிகுறிகள் அல்லது மயங்கி விடுகிறீர்கள் என்றால் உங்கள் இதயத்தை பரிசோதித்துப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். உடலுக்கு போதுமான அளவு ரத்த சப்ளை இதயத்திலிருந்து செல்லவில்லை அலது இதயம் பழுது அடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் இவை.
போஸ்ச்சுரல் ஆர்த்தோஸ்டாட்டிக் டேக்கிகார்டிக் சிண்ட்ரோம்
சிலருக்கு, அவர்கள் இருக்கும் ஒவ்வொரு நிலையிலும் இதயத்துடிப்பு அதிகரிக்கும் அல்லது குறையும். நீங்கள் அமர்ந்திருக்கும் பொழுது சாதாரணமாக துடிக்கும் இதயம், நின்று கொண்டிருக்கும்போது வேக வேகமாக துடிக்கும். இது மிகவும் அரிதாக குழந்தைகளையும் பாதிக்கும் ஒரு இதய நோயாகும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் குளிர்கால உணவுகளின் பட்டியல்..!
அடிக்கடி மயக்கம் வருவது இதய பாதிப்புகள் உடன் தொடர்பு கொண்டுள்ளதால், நீங்கள் சரியான காரணத்தை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் உடனே மருத்துவரை அணுகி சரியான டயக்னோஸ் செய்து கொள்ளுங்கள்.
மயக்கம் வருவது போன்ற உணர்வு தோன்றும் போது கை கால்களை நன்றாக நீட்டி படுத்துக் கொள்ளுங்கள். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி மயக்கம் ஏற்படாது.
இதயத்துடிப்பு சீரற்று இருந்தால், மருத்துவர் உங்களுக்கு ஒரு பேஸ்மேக்கரை பொருத்தும் வாய்ப்பு உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heart disease