• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்..!

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்..!

நீரழிவு நோயாளிகளுக்கான உடற்பயிற்சிகள்

நீரழிவு நோயாளிகளுக்கான உடற்பயிற்சிகள்

உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு நீரிழிவு நோய் வருகிறது. இதன் காரணமாகவோ என்னவோ நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா விளங்குகிறது.

  • Share this:
நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம். நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம்.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அடுத்த காரணி, உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது. இதன் காரணமாகவோ என்னவோ நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா விளங்குகிறது. நம் நாட்டில் சுமார் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், நீரிழிவு நோய் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சனையாக மாறிவிடும். அதேசமயம் சரியான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை உள்ளிட்ட சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை கடைபிடிப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துதல் என்றால் உடலில் ரத்த சர்க்கரை அளவு கூடாமலும் குறையாலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நீரிழிவு நோயாளிகள் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமானால் கீழ்காணும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.



1. நடைபயிற்சி : நீரிழிவு நோயாளிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்தால் போதுமானது. இது நீரிழிவு நோயைக் குறைக்க உதவும்.

2. பளு தூக்குதல் : பளு தூக்குதல் தசையை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் நீங்கள் உங்கள் உடலில் அதிகரித்து காணப்படும் கலோரிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். இந்த பயிற்சி இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தலாம்.

3. சைக்கிள் ஓட்டுதல் : நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேருக்கு மூட்டுவலி உள்ளது. சைக்கிள் ஓட்டுதல் போன்ற குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சி மூட்டுகளில் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை அடைய உதவலாம்.

4. நீச்சல் : நீச்சல் ஒரு நட்பு பயிற்சியாகும். இது இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நிலம் சார்ந்த உடற்பயிற்சியைப் போலவே இது லேசான உடற்பயிற்சியாக இருக்கும்.

கண்களை பாதுகாக்க தினமும் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சிகள்..!

5. கலிஸ்தெனிக்ஸ் (Calisthenics) : பொதுவான கலிஸ்தெனிக்ஸ் பயிற்சிகளில் புல்அப்கள், புஷ்அப்கள், லுன்ஸ்கள் மற்றும் அடிவயிற்று க்ரஞ்ச்கள் ஆகியவை தசை குழுக்களுக்கு அதிக வேலையை கொடுக்கும். இவை உடலில் கலோரிகளை எரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

6. பைலேட்ஸ் (Pilates) : பைலேட்ஸ் முக்கிய வலிமையை மேம்படுத்தவும் சமநிலையை மேம்படுத்தவும் உதவும். பைலேட்ஸ் இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்தவும் உதவும்.

7. யோகா : யோகா தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம். உங்கள் மனநிலை, சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: