ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க பிரபலங்கள் பின்பற்றும் உடற்பயிற்சிகள் : உங்களுக்கும் உதவலாம்..!

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க பிரபலங்கள் பின்பற்றும் உடற்பயிற்சிகள் : உங்களுக்கும் உதவலாம்..!

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

எப்போதுமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. ஃபிட்னஸ் இலக்குகளை அடைய நாம் ஆரோக்கியமான டயட்டை பராமரிப்பது, ஜிம்மிற்கு தவறாமல் செல்வது என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எப்போதுமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. ஃபிட்னஸ் இலக்குகளை அடைய நாம் ஆரோக்கியமான டயட்டை பராமரிப்பது, ஜிம்மிற்கு தவறாமல் செல்வது என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில் பிரபலங்கள் எவ்வளவு பிஸியாக இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். வேலை பளுவிற்கு இடையிலும் அவர்கள் ஒருபோதும் சமரசம் செய்யாத ஒன்று அவர்களின் ஃபிட்னஸிற்கு முக்கியத்துவம் கொடுப்பது.

ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள் எடை அதிகரிப்பதை தடுப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மன நலனையும் பராமரிக்கிறது. இங்கே திரை பிரபலங்கள் தங்களை சிறந்த ஷேப்பில் வைத்திருக்க தொடர்ந்து செய்து வரும் சில வகை உடற்பயிற்சிகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

வெயிட் ட்ரெயினிங்:

சல்மான் கான் முதல் ஹிருத்திக் ரோஷன் வரை பல பாலிவுட் பிரபலங்கள் வெயிட் மற்றும் ஸ்ட்ரென்த் ட்ரெயினிங்கை தங்கள் வொர்க்அவுட் முறையில் உள்ளடக்கி உள்ளனர். வெயிட் ட்ரெயினிங் என்பது வலிமையை உருவாக்கவும், கலோரிகளை எரிக்கவும், தசையை அதிகரிக்க, உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த மற்றும் கீழ் முதுகு வலியை குறைக்க பெரிதும் உதவும் ஒரு சிறந்த வழியாகும்.

கார்டியோ பயிற்சிகள்:

நீங்கள் உடல் எடையை குறைக்க மற்றும் உங்கள் ஃபிட்னஸ் லெவலை அதிகரிக்க விரும்பினால் கார்டியோ பயிற்சிகள் ஏற்றதாக இருக்கும். கார்டியோ ட்ரெயினிங்கில் ரன்னிங், ஜாகிங், ஸ்கிப்பிங் முதல் படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் டிரெட்மில்லில் ஓடுவது வரை நீங்கள் தேர்வு செய்ய கூடிய பல பயிற்சிகள் உள்ளன.

கொரியம் பியூட்டி டிப்ஸை பின்பற்றும் சமந்தா : அவர் பின்பற்றும் டிப்ஸ் மற்றும் ஸ்கின்கேர் பொருட்கள்..!

பாடிவெயிட் பயிற்சிகள்:

பாடிவெயிட் பயிற்சிகள் என்பது உடலை ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைக்க உங்கள் சொந்த உடல் எடையை பயன்படுத்தும் பயிற்சிகளை உள்ளடக்கியது. இந்த பயிற்சிகளில் எந்த உபகரணமும் பயன்படுத்த தேவை இல்லை. ஆனால் உங்கள் வலிமை, சகிப்புத்தன்மை, செயல்திறன், ஒருங்கிணைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜூம்பா:

ஜூம்பா டான்ஸ் பற்றி பலரும் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இது டான்ஸை உள்ளடக்கிய ஒரு வேடிக்கையான பயிற்சியாகும். கலோரிகளை எரிக்கவும், உங்கள் இதயத்தை சரியாக வேலை செய்ய வைக்கவும், உங்கள் முழு உடலை டோன் செய்யவும் ஜூம்பாவை தேர்வு செய்வது சிறந்த வழியாகும். மேலும் இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

யோகா:

மன அழுத்தத்தை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணுவும் நீங்கள் விரும்பினால் யோகா சிறந்த தேர்வாக இருக்கும். கரீனா கபூர், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்கள் உடலின் ஷேப்பை மெயின்டெயின் செய்ய யோகா செய்து வருகின்றனர்.

ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ளாமல் உடல் எடையை குறைக்க உதவும் 5 அறிவியல் பூர்வமான சாத்தியங்கள்..!

நீச்சல்:

இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு அதிசயங்களை செய்ய கூடியது. உடல் எடையை குறைக்கவும் வலிமையை மேம்படுத்தவும் நீச்சல் உதவுகிறது. சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா போன்ற பிரபலங்கள் தங்கள் உடலமைப்பை பராமரிக்க நீச்சல் பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஃப்ரீ-ஹேண்ட் பயிற்சிகள்:

சிறப்பு உபகரணங்களின் உதவியின்றி செய்யப்படும் பயிற்சிகள் இவை. ப்ளாங்ஸ், புஷ்அப்ஸ், ஸ்குவாட்ஸ் மற்றும் க்ரன்ச்சஸ் உள்ளிட்ட பல பயிற்சிகள் இதில் அடக்கம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Exercise, Fitness