காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் இதை கொஞ்சம் கவனியுங்கள்!

காற்று மாசுபாடு

உடல் செயல்பாடுகள் ஏதுமின்றி இருப்பதுடன் ஒப்பிடும் போது அதிக அளவு வழக்கமான உடற்பயிற்சி பழக்கமானது காற்று மாசுபட்ட பகுதிகளில் கூட நன்மைகளை அளிக்கும் என்பதை இந்த ஆய்வு முடிவு குறிக்கிறது

  • Share this:
காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் கூட தினசரி வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் இயற்கை காரணங்களால் ஏற்படும் மரண அபாயத்தை குறைக்க முடியும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான புதிய ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் 'கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னலில் (Canadian Medical Association Journal) வெளியிடப்பட்டுள்ளது.

உடல் செயல்பாடுகள் ஏதுமின்றி இருப்பதுடன் ஒப்பிடும் போது அதிக அளவு வழக்கமான உடற்பயிற்சி பழக்கமானது காற்று மாசுபட்ட பகுதிகளில் கூட நன்மைகளை அளிக்கும் என்பதை இந்த ஆய்வு முடிவு குறிக்கிறது என்றாலும், சிறந்த பலனுக்கு குறைவான காற்று மாசு பகுதிகள் ஏற்றவை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹாங்காங்கின் சீன பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Xiang Qian Lao கூறுகையில், காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டை பொருட்படுத்தாமல் தினசரி உடற்பயிற்சியானது இறப்பு அபாயத்தைக் குறைக்கிறது, ஆனால் அதே சமயம் தினசரி உடற்பயிற்சியை பழக்கத்தை பொருட்படுத்தாமல் காற்று மாசுபாடானது இறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: தலிபான்கள் ஆட்சியை பிடித்த நாளில் காபுல் வானில் போராடிய இந்திய விமானம் – திக் திக் நிமிடங்கள்!

இதன் காரணமாக ஒப்பீட்டளவில் மாசுபட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூட, தினசரி வழக்கமான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்ய ஊக்குவிக்கப்படுவதை ஒரு சுகாதார மேம்பாட்டு உத்தியாக பயன்படுத்தலாம் என்றும் கூறி இருக்கிறார்.

காற்று மாசுபாடு


இதனிடையே ஆய்வுக்குழு தைவானில் 2001 முதல் 2016 வரையிலான காலத்தில் சுமார் 15 வருடங்கள் ஒரு பெரிய ஆய்வில் ஈடுபட்டது. இதில் 130 பெரியவர்கள் (Adults) சேர்த்து 384 பேர் பங்கேற்றனர். இந்த ஆய்வில் வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் விளைவுகள், இயற்கை காரணங்களால் ஏற்படும் மரண அபாயத்தில் பங்கு வகிக்கும் சிறிய விஷயங்களுக்கான நீண்டகால வெளிப்பாடு உள்ளிட்டவற்றை பற்றி அறிந்து கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

Also Read:   ஒற்றை சீட்டுடன் கச்சிதமான வடிவில் அறிமுகமான Honda U-BE எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த ஆராய்ச்சியின் போது காற்று மாசுபாடு இல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் அதிக உடலுழைப்பு அல்லது தினசரி உடற்பயிற்சி இன்றி இருப்பதை ஒப்பிடும் போது காற்று (குறைவான) மாசுபட்ட பகுதிகளில் வசித்தாலும் கூட தினசரி தவறாமல் அதிக அளவு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவர்களுக்கு நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதிகப்படியான வழக்கமான உடற்பயிற்சிகளும், குறைந்த அளவு காற்று மாசுபடுதலும் இயற்கை காரணங்களால் ஏற்படும் இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது. அதாவது இறப்பு அபாயத்தை இது குறைக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

Also Read:   3 மாத பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 17 வயது சிறுவன் – அதிர்ச்சி சம்பவம்

அதே சமயம் குறைந்த அளவு வழக்கமான உடற்பயிற்சியும், அதிக அளவு காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பும் அதிக இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். மாசுபட்ட பகுதிகளில் கூட வழக்கமான அதிக உடற்பயிற்சி பழக்கம் நன்மை பயக்கும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், "எங்கள் கண்டுபிடிப்புகளின் பொருந்தக்கூடிய தன்மையை ஆய்வு செய்ய அதிக கடுமையான காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்" என்றனர். தங்களது இந்த ஆய்வு பற்றி சுருக்கமாக விளக்கிய ஆராய்ச்சியாளர் ஒருவர், "எங்களின் ஆய்வு காற்று மாசை குறைப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தீங்கு விளைவிக்கும் காற்று மாசின் விளைவுகளை குறைப்பது, வழக்கமான உடற்பயிற்சியின் நன்மைகளை அதிகரிக்க செய்கிறது" என்றார்.
Published by:Arun
First published: