Home /News /lifestyle /

விட்டமின் டி அதிகரித்தால் சிறுநீரகம் பழுதடையுமா..? தெரிந்துகொள்ளுங்கள்...

விட்டமின் டி அதிகரித்தால் சிறுநீரகம் பழுதடையுமா..? தெரிந்துகொள்ளுங்கள்...

நம் உடலில் சிறுநீரகத்தின் வேலை என்பது மகத்தானது. அதை கண்டுகொள்ளாமல் விடுவது நமக்கு மிகப்பெரும் பின் விளைவுகளை உண்டாகும். அப்படி கவனிக்காமல் விட்டுதான் இன்று நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சிறுநீரக பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர்.

நம் உடலில் சிறுநீரகத்தின் வேலை என்பது மகத்தானது. அதை கண்டுகொள்ளாமல் விடுவது நமக்கு மிகப்பெரும் பின் விளைவுகளை உண்டாகும். அப்படி கவனிக்காமல் விட்டுதான் இன்று நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சிறுநீரக பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர்.

ஒருவர் ஒரு நாளைக்குச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விட்டமின் டியை 400 - 1000 IU முதல் 800 - 2000 IU வரைதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா பயணம் சென்று வந்த 54 வயது முதியவருக்குச் சிறுநீரகம் பழுதடைந்துள்ளது. அதற்கான காரணத்தைக் கண்டறிந்தபோது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்குச் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டதால் உடனடியாக சிறுநீரக நிபுணரை அணுகியுள்ளார். அப்போது அவர் Naturopath எனும் மருந்து மூலமாக விட்டமின் D யை ஒரு நாளைக்கு 8 ட்ராப் எடுத்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் சுற்றுலாவின் போது பல மணி நேரம் சன் பாத் எடுத்துள்ளார். அதன் விளைவாகவே அவருக்கு அந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அவர் எலும்பு பிரச்னைகள் , மற்றும் விட்டமின் D குறைவு இல்லாதபோதும் மருத்துவரின் அறிவுரையால் இரண்டரை வருடங்களாக விட்டமின் D யை 8 - 12 சொட்டுகள் எடுத்துள்ளார். மொத்தமாக 8,000 - 12,000 IU அளவிற்கு விட்டமின் D எடுத்துள்ளார். இதன் விளைவாக கால்சியம் சத்து அதிகரித்து ரத்தத்தில் கலந்துள்ளது. இதனால் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

விட்டமின் D சத்து அதிகரித்தால் சிறுநீர் பாதிப்படையும் என்று ஏற்கனவே கன்னடியன் மெடிகல் கூட்டமைப்பு ஜர்னல் வெளியிட்டிருந்தது. அது தற்போது உண்மை என இந்த சம்பவம் உறுதி செய்கிறது.



அந்த ஆய்வின் படி, ஒருவர் ஒரு நாளைக்குச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விட்டமின் டியை 400 - 1000 IU முதல் 800 - 2000 IU வரைதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

தினமும் இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிட்டால் இதய நோய் வருமா..? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

”இது போன்ற விட்டமின் D சத்து நஞ்சாக மாறும் அபாயம் அரிதாக இருந்தாலும் இதன் விளைவாகத்தான் ஏற்படுகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் விட்டமின் D என்பது பரவலாகக் கிடைக்கக் கூடிய ஒன்று. இந்த அறிகுறிகள் இருக்கக் கூடிய மக்கள் பரவலாகவும் இருக்கக் கூடும் “ என டொரண்டோ பல்கலைக்கழகத்தின் பவுர்னெ அகஸ்ட் குறிப்பிடுகிறார்.



மக்கள் விட்டமின் D உட்கொள்வதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். விட்டமின் D சத்துக் குறைபாடு இருந்தாலோ , மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

”மருத்துவர்கள், மற்றும் கிளீனிக்குகள் நோயாளிகளுக்கு விட்டமின் D சத்தை அளிக்கும்போது அதன் பக்கவிளைவுகளைக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்” என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Kidney Disease, Kidney Failure

அடுத்த செய்தி