அதிக நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவது குழந்தையின்மைக்கு வழிவகுக்குமா..?

தூங்கும் போது அருகில் வைத்துப் படுப்பதாலும் புற்றுநோய், மூளையின் ஆற்றல் குறைவு மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படும்

news18
Updated: May 9, 2019, 9:32 AM IST
அதிக நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவது குழந்தையின்மைக்கு வழிவகுக்குமா..?
தூங்கும் போது அருகில் வைத்துப் படுப்பதாலும் புற்றுநோய், மூளையின் ஆற்றல் குறைவு மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படும்
news18
Updated: May 9, 2019, 9:32 AM IST
செல்ஃபோனை இரவில் தூங்கும்முன் பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகரித்துவிட்டது. அவ்வாறுப் பயன்படுத்தினால் அதன் கதிர்வீச்சு உடலைப் பல வகைகளில் பாதிக்கும் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

கலிஃபோர்னியாவில் உள்ள சுகாதார அமைச்சகம் முக்கிய ஆதாரத்துடன் செல்ஃபோன் பயன்பாட்டைக் கடந்த 2017 ஆம் ஆண்டே எச்சரித்தது. அதில் அதிகப்படியான செல்ஃபோன் பழக்கம் மற்றும் தூங்கும் போது அருகில் வைத்துப் படுப்பதாலும் புற்றுநோய், மூளையின் ஆற்றல் குறைவு மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படும் என எச்சரித்தது.

இதனால் உறங்கும் போது செல்ஃபோனை தொலைவில் வையுங்கள் என்று அறிவுறுத்தியது. பொதுவாக செல்ஃபோன் கதிர்வீச்சு அதிர்வெண் அலைகளைத் தகவலாக மாற்றக்கூடியது. அது செல்ஃபோனில் நமக்கு நெருக்கமான இடைவெளியில் நிகழ்வதால் அது உடலுக்குப் பல வகையான ஆபத்துகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏராளம்.


ஆப்பிள் போன்ற செல்ஃபோன் நிறுவனங்கள் அதிகமான கதிர்வீச்சு வெளியேறும்போது எச்சரிக்கும் அம்சம் இருக்கிறது. அந்தக் கதிர்வீச்சால் ஏற்படும் ஆபத்தை ஆப்பிள் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. அதனால்தான் வாடிக்கையாளர்களின் நலன் கருதி அந்த அம்சம் வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கதிர்வீச்சுகளைத் தவிர்க்க அமெரிக்க பாதுகாப்புத் துறை மக்களை ஸ்பீக்கர் ஃபோன் பயன்படுத்தலாம் அல்லது ஹெட் செட்டுகளைப் பயன்படுத்தலாம் என யோசனை அளிக்கிறது.
கலிஃபோர்னியா சுகாதார அமைச்சகம் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள் இதனால் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என்கிறது. அதேபோல் இந்தக் கதிர்வீச்சின் பக்கவிளைவுகள் எளிதில் தெரியாது. பொறுமையாகத்தான் அதன் வேலையைக் காடும் என்கிறது.

Loading...

இதற்கு அளித்த பல ஆராய்ச்சிகள் செல்ஃபோன் கதிர்வீச்சு மூளைக்கட்டி , காதுகளில் கட்டியை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றன. மனநல மருத்துவர்களும் செல்ஃபோன் பயன்படுத்துவதால் மனநலம் பாதிக்கப்படுகிறது என்றும், இதனால், இளைஞர்கள்தான் அதிகமாக பாதிக்கின்றனர் என்கிறார்கள்.

முக்கியமாக இந்தக் கதிர்வீச்சு ஆண்களின் விந்து எண்ணிக்கை மற்றும் அதன் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று அந்த ஆராய்ச்சியில் வெளியிட்டுள்ளது. குறைவான செல்ஃபோன் சிக்னல்களினாலும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்கிறது கலிஃபோர்னியா சுகாதார அமைச்சகம்.

கலிஃபோர்னியா சுகாதார அமைச்சகம் இத்தனை பெரும் ஆதாரங்களுடன் நிரூபித்தாலும் டெய்லி மெய்ல் பத்திரிகை செல்ஃபோன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை உறுதி செய்யும் விதமாக இன்னும் போதுமான ஆதாரங்களோ, ஆராய்ச்சிகளோ இல்லை என்கிறது.

இதையும் படிக்க :

உறங்கச் செல்லும் முன் பாதங்களைக் கழுவுவது அவசியம்... ஏன் தெரியுமா..?

ஐஸ் கட்டிகளை அப்படியே உண்பது நல்லதா?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...