முக அழகு, தோற்றம், சருமப் பொலிவு என்று பல வகையான காஸ்மெட்டிக் சிகிச்சைகள் வந்துவிட்டன. ஸ்கின் கேர் தயாரிப்புகள் என்று எவ்வளவு பயன்படுத்தினாலும், இளமையான தோற்றத்தை தக்கவைக்கவும், முகத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அறுவை சிகிச்சை மூலம் மூக்கு, உதடு, தாடை என்று மாற்றிக் கொள்ளும் தோற்றத்தை அழகு படுத்தும் சிகிச்சைகள் உள்ளன.
ஆனால், தற்போது மைக்ரோ ஃபேட் கிராஃப்டிங் என்ற அறுவை சிகிச்சை இல்லாமல், உடலில் வேறு இடத்தில் உள்ள கொழுப்பை எடுத்து தேவைப்படும் இடங்களில் ரீப்ளேஸ் செய்யலாம். ஒரு நபரின் உடலில் இருக்கும் செல்களே சிகிச்சையில் பயன்படுத்தப்படுவதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இந்த சிகிச்சைப் பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம்.
கொழுப்பு இடமாற்ற சிகிச்சை:
இந்த சிகிச்சை லோக்கல் அனஸ்தீஸியா பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சை ஆகும். அதாவது கொழுப்பு நீக்கப்படும் மற்றும் செலுத்தப்படும் இடங்களில் மட்டும் அனஸ்தீசியா கொடுத்து மரத்துப் போகச் செய்து சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக தொப்புளைச் சுற்றி இருக்கும் பகுதிகள், இடுப்பு மற்றும் தொடை ஆகிய பகுதிகளில் அதிக கொழுப்பு இருக்கும்.
முகத்தில் எந்த இடத்தில் கொழுப்பை நிரப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்தவுடன், சிறிய அளவில், லேயர் லேயராக கொழுப்பு முகத்தில் சேர்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் இடத்தில் கொழுப்பு ஊசி வழியாக செலுத்தப்படும்.
இந்த சிகிச்சை மூலம் ஒரு நபரின் இயற்கையான தோற்றம் அல்லது வடிவம் மாறாது. இளமையான தோற்றம் மற்றும் நெகிழ்வான சருமம் மற்றும் பொலிவு ஆகியவை மீண்டும் பெறுவதற்கு உதவும்.
பல் தேய்ப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரொம்ப நல்லதா..? இதை படிச்சா நீங்களே ஆசரியப்படுவீங்க...
பொதுவாக தாடை, கண்களை சுற்றி மற்றும் நெற்றி ஆகிய இடங்களில் கிராஃப்ட் செய்யப்பட்ட கொழுப்பு சேர்க்கப்படுகிறது.
மற்ற காஸ்மெட்டிக் சிகிச்சைகளை விட மைக்ரோ கிராப்டிங் சிகிச்சை மிகவும் எளிமையானது மற்றும் சுலபமானது. உடலின் செல்களில் இருக்கும் கொழுப்பு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றப்படுகிறது என்பதால் இதனால் எந்தவிதமான எதிர்மறையான விளைவுகள் மற்றும் அலர்ஜி ரியாக்ஷன்கள் ஏற்படாது. அழகு சிகிச்சையாக மட்டும் அல்லாமல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பிரெஸ்ட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் சிகிச்சைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சை செய்து கொண்டவர்களின் ஃபேசியல் சிமட்ரி முன்பு இருந்ததை விட நேர்த்தியாகவும் அழகாகவும் மாறியுள்ளதாக சிகிச்சை மேற்கொண்டவர்கள் கூறியுள்ளனர். நோய் அல்லது வேறு ஏதேனும் குறைபாடு காரணமாக அல்லாமல், அழகு மற்றும் தோற்றம் மேம்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக காஸ்மெட்டிக் சிகிச்சை விரும்புவர்கள், மைக்ரோ கிராப்ட்டிங்கை தேர்வு செய்யலாம்.
கெமிக்கல் பீல்ஸ் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 நன்மைகள்...
அறுவை சிகிச்சை அல்லாமல் சருமத்தில் துளைகள் மூலமாகவே கொழுப்பு நீக்கப்பட்டு மற்றும் கொழுப்பு சேர்க்கப்படும் சிகிச்சையாக இருப்பதால், இந்த சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் காலம் குறைவுதான். சிகிச்சை செய்யப்பட்ட இடங்களில் சில நாட்களுக்கு வீக்கம், சருமம் சிவந்து போதல் மற்றும் லேசான வலி ஆகியவை ஏற்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Skin Care