தற்போது மருத்துவ துறையின் அபார வளர்ச்சி உடல் அல்லது கருவுறுதல் பிரச்சனைகளால் பெற்றோர் ஆக முடியாமல் தவிக்கும் தம்பதிகளைக் கூட ஒரு குழந்தைக்கு தாய், தந்தையாக மாற்றி காட்டுகிறது. இதற்கு மருத்துவதுறையின் IVF தொழில்நுட்பம் நல்வாய்ப்பாக அமைகிறது.
IVF சிகிச்சை என்றால் என்ன?
பல்வேறு காரணங்களால் இயற்கையாக கருத்தரிக்க முடியாமல் இருக்கும் பெண்களுக்கு IVF சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஐவிஎஃப் சிகிச்சை என்பது, கருமுட்டையை தனியாக பிரித்து, ஆய்வகத்தில் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுற வைக்கப்படுகிறது.
10-12 நாட்களுக்கு, பல முட்டைகளை உற்பத்தி செய்ய கருப்பைகளை தூண்டுவதற்கு கருவுறுதல் மருந்துகளை மருத்துவரால் வழங்கப்படுகிறது. அந்த நேரத்தில், இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். கரு முட்டை உற்பத்தி முடிந்ததும், கருப்பையிலிருந்து முட்டைகளை வெளியேற்றி அவற்றை ஆய்வகத்தில் உள்ள கணவரின் விந்தணுவுடன் இணைப்பார்கள்.
முட்டை மீட்டெடுக்கப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்கள் உங்கள் கருப்பையில் மீண்டும் வைக்கப்படும். அதன் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து கருப்பபையில் வைக்கப்பட்ட கரு வளர்ச்சி அடையத் தொடங்கிவிட்டதா என்பதை மருத்துவர்கள் ரத்த பரிசோதனை மூலமாக கண்டறிவார்கள்.
பணம் செலவு செய்வது பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள், என்று உடல் ரீதியாக, உணர்ச்சி பூர்வமாக பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில், யாரெல்லாம் IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உயரத்தில் வேறுபாடு கொண்ட கணவன், மனைவி : தாம்பத்திய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?
ஃபாலோபியன் குழாயில் அடைப்பு
பொதுவாக இயற்கையாக கருத்தக்க முடியாமல் போவதற்கு பல்வேறு உடல் ரீதியான கோளாறுகள் காரணங்களாக உள்ளன. அதில் ஒன்று தான் ஃபாலோபியன் குழாயில் இருக்கும் அடைப்பு. இந்த டியூபில் உள்ள அடைப்பு கரு உருவாவதற்குத் தடையாக இருக்கும்.
பாலியல் ரீதியான குறைபாடுகள்
ஆண் பெண் இருவருக்குமே, விந்தணு குறைபாடு, விந்தணு இல்லாமல் போவது, விறைப்புத்தன்மை பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால், IVF சிறந்த தீர்வாக அமையும்.
வயது
30 இன் மத்தி மற்றும் 40 இன் தொடக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு இயற்கையாக கருத்தரிப்பதில் பிரச்சனைகள் காணப்படும்.
தாய்பால் கொடுக்கும் பெண்கள் தியானம் செய்வது இவ்வளவு நன்மைகளை கொடுக்குமா..?
ஃபைப்ராய்டு கட்டிகள்
ஃபைப்ராய்டு கட்டிகள் என்பவை கேன்சர் அல்லாத சாதாரண கட்டிகளாக அறியப்படுகிறது. நடுத்தர வயது பெண்களுக்கு இந்த பிரச்சனை பரவலகாக் காணப்படுகிறது. மாதவிடாய், கரு முட்டை கருத்தரிக்கும் திறனை இழப்பது ஆகிய பிரச்சனைகள் ஃபைப்ராய்டு கட்டிகளால் ஏற்படுவதால், IVF வழியாக கருத்தரிக்க முடியும்.
குறிப்பிட்ட காரணங்கள் எதுவுமில்லை
சில நேரங்களில் கணவன் மனைவி இருவருக்குமே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த காரணமும் இல்லாமல் இருந்தாலும், இயற்கையாக கருத்தரிக்கவில்லை என்றால் இந்த வழியை முயற்சிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IVF Treatment