முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் என்ன..? தடுக்கும் வழிகளும்.. பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளும்...

சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் என்ன..? தடுக்கும் வழிகளும்.. பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளும்...

சிறுநீரகம்

சிறுநீரகம்

உங்கள் சிறுநீரகத்தை பராமரிக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதுதான் இதன் முதல் வழியாகும். ஆரோக்கியமான எடையை பராமரித்தல், சீரான உணவை உட்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆகியவையும் இதில் அடங்கும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

சிறுநீரகம் ( Kidney ) பார்ப்பதற்கு சிறிய பாகமாக இருந்தாலும் நம்மை ஆரோக்கியமாக வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பதுதான் அதன் வேலை. நம் உடலின் நச்சுக்களை நீக்கி, இரத்ததில் உள்ள தேவையற்ற திரவங்களை சுத்தீகரிப்பது என அதன் வேலை மகத்தானது. ஆனால் அதன் ஆரோக்கியத்தைப் பற்றி பலரும் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் அறிகுறி நமக்கு உடனே தெரிவதில்லை. அப்படியே காட்டினாலும் அது தீவிரமாக இருப்பதில்லை. அந்த நோய் தீவிரமடைந்தால் மட்டுமே அறிகுறிகளும் கடுமையாக இருக்கும். அதனாலேயே ஆரம்பத்தில் சிறுநீர பிரச்சனைகளைக் கண்டறிய முடியாமல் போகிறது.

அப்படி நீங்கள் அறிகுறிகளை முழுமையாக உணரும்போது 90 சதவீதம் சிறுநீரகம் பாதிக்கப்படிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதனாலே சிறுநீரக பாதிப்பால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அப்படி சிறுநீரக பாதிப்பு அதிகரித்து விட்ட நிலையில் அதிகமான சோர்வு, விவரிக்க முடியாத களைப்பு, கவனமின்மை, பசியின்மை, சிறுநீரகத்தில் இரத்தம் வெளியேறுதல், கணுக்கால் வீக்கம் , சிறுநீரகம் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை அனுபவிப்பீர்கள்.

சிறுநீரக பாதிப்பு யாருக்கெல்லாம் வரலாம்..?

இதுவரையில் சிறுநீரக பாதிப்பு ஏன் உண்டாகிறது என்பதற்கான முழுமையான ஆதாரங்கள், ஆய்வுகள் கண்டறியவில்லை. இதுவரை உள்ள வழக்குகளை வைத்து உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், சிறுநீர பாதிப்பு உள்ள குடும்ப வரலாறு போன்றவர்களே சிறுநீரகத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகை பாதிப்பு உங்களுக்கு இருந்தால் சிறுநீரக பரிசோதனை செய்துகொள்வது நல்லது. மேலே குறிப்பிட்ட காரணங்கள் இல்லை என்றாலும் வாழ்க்கை முறை பழக்கங்கள் காரணமாகவும் நாள்பட்ட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்படலாம்.

சிறுநீரகத்தை பாதுகாக்க செய்ய வேண்டியவை :

உங்கள் சிறுநீரகத்தை பராமரிக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதுதான் இதன் முதல் வழியாகும். ஆரோக்கியமான எடையை பராமரித்தல், சீரான உணவை உட்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆகியவையும் இதில் அடங்கும். உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் :

1. போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் :

குறைந்தது 1.5 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். நீங்கள் நாள் முழுவதும் இரண்டரை அல்லது மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

2. உங்கள் புரத உட்கொள்ளலை கண்டிப்பாக கண்காணிக்கவும்

நீங்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்படாவிட்டாலும், உங்கள் புரத உட்கொள்ளல் அதிகமாக இருந்தாலும், சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என்று சமீபத்திய ஆய்வுகள் நிறைய காட்டுகின்றன. செயற்கையாக புரதத்தை உட்கொள்பவர்கள் (புரோட்டீன் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் ) மற்றும் தேவையான அளவை விட அதிகமாக உட்கொள்ளும் நபர்கள் இந்த ஆய்வுகளை கருத்தில்கொள்வது மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையிலிருந்து ஒரு கிலோவிற்கு 1 கிராம் புரதத்தை எடுத்துக் கொள்ளலாம்.

3. வலி நிவாரணிகள் மற்றும் மிட்டாய்கள் போன்ற OTC மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்

நமது பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணமாக, தலைவலி, முதுகுவலி மற்றும் சுளுக்கு மிகவும் பொதுவான நிகழ்வாகிவிட்டது. இதன் விளைவாக, மக்கள் இதற்கான வலிநிவாரணி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை தங்கள் சிறுநீரகங்களுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலைப் பற்றி ஒரு நொடியும் சிந்திப்பதில்லை. இந்த "உடனடி நிவாரணம்" தேடுதல், இந்த வலிநிவாரணிகள் மற்றும் OTC மருந்துகளை அதிக அளவில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்பட்டால் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். (நீங்கள் 2-3 வருடங்களில் 2-3 கிலோவை உட்கொண்டால், உங்கள் சிறுநீரகத்தை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகம்.)

கிட்சனில் இந்த 7 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் யாருக்கும் நோயே வராதாம்..!

4. உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று உங்கள் இரத்த அழுத்தத்தை கண்டிப்பாக கண்காணிப்பதாகும். கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள தமனிகள் குறுகிய, பலவீனமடைய அல்லது காலப்போக்கில் கடினமாவதற்கு வழிவகுக்கும் என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

5. உங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கவும்

நீங்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தொடர்ச்சியான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், மீண்டும் மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாதல் அல்லது சிறுநீரக நோய்க்கான குடும்ப வரலாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இந்த நோய்கள் எதிர்காலத்தில் சிறுநீரக நோய்களை உருவாக்கும் அபாயத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம். அதனால்தான் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். சிறுநீரக நோயைக் கண்டறிய இந்தப் பரிசோதனைகளைச் செய்யுங்கள்

சிறுநீரக நோயைக் கண்காணிக்க இரண்டு எளிய சோதனைகள் உள்ளன:

1.இரத்த பரிசோதனை

ஒரு எளிய இரத்தப் பரிசோதனை உங்கள் இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவைக் கண்காணிக்க உதவும். உங்கள் சிறுநீரகம் வழக்கமாக வடிகட்டக்கூடிய பொருட்களில் இதுவும் ஒன்று. அதாவது இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவு அதிகமாக இருந்தால் உங்கள் சிறுநீரகங்கள் செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படவில்லை என்பதைக் குறிக்கலாம்.

2. சிறுநீர் பரிசோதனை

top videos

    உங்கள் சிறுநீரில் அல்புமின் என்ற புரதம் உள்ளதா இல்லையா என்பதை அறிய இந்த சோதனை செய்யப்படுகிறது. புரதம் உங்கள் இரத்தத்தில் இருக்க வேண்டும் மற்றும் சிறுநீரில் இருக்கக்கூடாது என்பதால், சிறுநீரில் உள்ள அல்புமினின் தடயங்கள் உங்கள் சிறுநீரகத்தால் இரத்தத்தை சரியாக வடிகட்ட முடியாது என்பதைக் குறிக்கலாம்.

    First published:

    Tags: Kidney, Kidney Disease, Kidney Failure