முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டூத் பேஸ்டில் இத்தனை விஷயங்கள் இருக்கா..? பேஸ்டின் நிறம் கூட முக்கியம்தான்..!

டூத் பேஸ்டில் இத்தனை விஷயங்கள் இருக்கா..? பேஸ்டின் நிறம் கூட முக்கியம்தான்..!

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

மனிதர்களின் வாழ்வுக்கு அடிப்படை தேவையான உணவு உண்பதற்கும் பற்கள் தான் அடிப்படையாக அமைகிறது. உண்ணும் உணவை நன்றாக மென்று, சவைத்து சாப்பிட்டால் உணவு எளிதாக ஜீரணம் அடையும் என்பதோடு, பல நோய்களையும் நாம் கட்டுப்படுத்த முடியும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மனித உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் பற்களும் ஒன்றாகும். குறிப்பாக, முகத்தின் அழகை தீர்மானிப்பதில் பற்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. கிராமங்களில் “பல்லு போனா, சொல்லு போச்சு’’ என்ற பழமொழியும் கூட உண்டு. அதாவது நமக்கு பற்கள் இருந்தால் தான், நாம் பேசும் வார்த்தைகள் தெளிவான உச்சரிப்பை கொண்டிருக்கும். பற்கள் இல்லாவிட்டால் பேசும் வார்த்தைகள் தெளிவானதாக இருக்காது.

மனிதர்களின் வாழ்வுக்கு அடிப்படை தேவையான உணவு உண்பதற்கும் பற்கள் தான் அடிப்படையாக அமைகிறது. உண்ணும் உணவை நன்றாக மென்று, சவைத்து சாப்பிட்டால் உணவு எளிதாக ஜீரணம் அடையும் என்பதோடு, பல நோய்களையும் நாம் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த பற்களை நாம் முறையாக சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியமானது.

அதனால் தான் தினசரி காலை பொழுதிலும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் பல் விளக்குவதை நாம் வாடிக்கையாகக் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால், பல் துலக்குவதற்கு நாம் சரியான டூத் பேஸ்ட் தான் பயன்படுத்துகிறோமா என்பதை என்றைக்காவது யோசித்து பார்த்திருக்கிறோமா? அதெல்லாம் இல்லை, ஏதோ மனதிற்கு தோன்றிய பேஸ்ட் ஒன்றை நீங்கள் வாங்கிப் பயன்படுத்துவதாகக் கூறினால் உங்களுக்கான எச்சரிக்கை தகவல்கள் இந்தச் செய்தியில் அடங்கியிருக்கிறது.

விளம்பரங்களில் வரும் தகவல்கள் உண்மையானதா

டூத் பேஸ்ட் குறித்த ஒவ்வொரு நாளும் பல விதமான விளம்பரங்கள் வருகின்றன. “உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா, உங்க பேஸ்ட்ல கரி இருக்கா’’ என்ற கேள்விகள், “இதில் வேம்பின் சக்தி அடங்கியிருக்கிறது, கிருமிகளில் இருந்து 100 சதவீத பாதுகாப்பை தரும்’’ என்ற வாக்குறுதிகள் போன்றவை விளம்பரங்களில் வருகின்றன. ஆனால், இதையெல்லாம் பார்த்து நாம் டூத் பேஸ்ட் வாங்கக் கூடாது.

சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

அப்படியானால், நமக்கான டூத் பேஸ்ட் எதுவென்று தேர்வு செய்வதற்கான அளவுகோல் எது? நீங்கள் வாங்கும் டூத் பேஸ்டின் அடி பாகத்தில் இதற்கான விடை இருக்கிறது. ஆம், பேஸ்ட் இருக்கும் டியூப்பின் அடி பாகத்தில் இருக்கும் கலர் குறியீடு தான் நாம் பயன்படுத்தும் பேஸ்ட் எப்படியானது என்பதற்கான குறியீடு ஆகும். அதன் விவரங்களை பார்க்கலாம்.

கருப்பு

டூத் பேஸ்ட் டியூபில் கருப்பு கலர் குறியீடு இருந்தால், அது உங்கள் பற்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை தெரிந்து கொள்ளலாம். பற்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அதிகப்படியான ரசாயனங்கள் அதில் இருக்கிறது என்பதன் அடையாளம் இந்த கருப்பு குறியீடு ஆகும்.

சிவப்பு

இது கருப்பு கலர் குறியீடு பேஸ்ட் உடன் ஒப்பிடுகையில் அவ்வளவாக ஆபத்து இல்லாத பேஸ்ட் வகை ஆகும். இயற்கையான பொருட்கள் மற்றும் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்டிருப்பதன் குறியீடு இதுவாகும்.

உணவை சூடாக்க மைக்ரோவேவ்-ஐ பயன்படுத்த கூடாது : இந்த 5 பாதிப்புகள்தான் காரணம்..!

ப்ளூ

ப்ளூ கலர் குறியீடு உங்கள் பேஸ்ட் டியூபில் இருந்தால், அது நீங்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பான பொருள் என்று அர்த்தம் ஆகும். இதில், ஆபத்து மிகுந்த ரசாயனங்கள் இருக்காது.

பச்சை

இதுவும் பாதுகாப்பான டூத் பேஸ்ட் தான். இயற்கையான இடு பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தான் பச்சை குறியீடு உணர்த்துகிறது. நம் பற்களின் பாதுகாப்பிற்கு உகந்தது இது.

First published:

Tags: Tooth care, Toothpaste