உடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா?

நாம் காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தான் உடலுக்கு மிகவும் நல்லது என ஆய்வுகள் கூறுகிறது.

Web Desk | news18
Updated: June 17, 2019, 2:25 PM IST
உடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா?
உடற்பயிற்சி
Web Desk | news18
Updated: June 17, 2019, 2:25 PM IST
நம் அனைவரையும் பொறுத்தவரையில் உடற்பயிற்சி செய்வதற்கு மிக சரியான நேரம் காலை நேரம்தான் என்று எண்ணுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது. உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உடற்பயிற்சி செய்வதில் ஒரு பலன் இருக்கும்.

நாம் காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதுதான் உடலுக்கு மிகவும் நல்லது என ஆய்வுகள் கூறுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்ட ஆய்வில், உடற்பயிற்சி செய்யும் கால நேரத்தைப் பொறுத்து அதன் நன்மைகளும் வேறுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது.


டென்மார்க்கில் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் ஜோனஸ் தியூ ட்ரிபேக் கூறுகையில், “ காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலையில் செய்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அத்துடன் உடலின் சர்காடியன் கடிகாரம் ( உயிரியல் கடிகாரம்) கட்டுப்படுத்தப்படுகின்றன” என்றார்.

இது குறித்து ட்ரிபாக் கூறுகையில், காலையில் உடற்பயிற்சி செய்தால் தசை செல்களைத் தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு ஒரே சீராக இருக்கிறது. மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால் உடலின் முழு எனர்ஜி லெவல்  அதிகரிக்கிறது. அதனால் நீண்ட நேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்றார்.

மேலும் இது குறித்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் எலியை வைத்து பரிசோதித்தனர். அதில் காலையில் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட எலியின் உடலில் உள்ள எலும்பில் அதிக வளர்சிதை மாற்றத்தை காணமுடிந்தது.  மாலை நேர உடற்பயிற்சியின் போது உடலின் ஆற்றல் அதிகரித்ததை உணர முடிந்தது.

Loading...

காலையில் மற்றும் மாலையில் உடற்பயிற்சி தொடர்ந்து செய்வதால், அது நேரடியாக உடலின் சர்காடியன் கடிகாரத்தை (உயிரியல் கடிகாரம்) ஒழுங்குபடுத்தும் HIF 1 ஆல்பா என்ற புரதத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் மாலை நேர உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது.

காலை வேளையை விட மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதற்கு உடல் நன்கு ஒத்துழைப்பு தரும். இதனால் நன்கு உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Also see... இதய நோயை தடுக்க தக்காளி ஜூஸ் குடிக்கலாம்!  

ரெட் ஒயின் குடிப்பதால் பற்களும், ஈறுகளும் வலுப்பெறுகிறதாம்...! ஆய்வில் தகவல்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...