• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • லைட்டாதான் ஆல்கஹால் குடிப்பேன் என்றாலும் புற்றுநோய் வருதற்கான அறிகுறி உண்டு : ஆய்வு..!

லைட்டாதான் ஆல்கஹால் குடிப்பேன் என்றாலும் புற்றுநோய் வருதற்கான அறிகுறி உண்டு : ஆய்வு..!

மதுப் பழக்கம் கேடு

மதுப் பழக்கம் கேடு

ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஆல்கஹாலை 10 வருடங்கள் குடிக்கிறார் அல்லது இரண்டு கிளாஸ் ஐந்து வருடங்கள் குடிக்கிறார் எனில் புற்றுநோய் பாதிப்பு ஐந்து சதவீதம் உருவாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் இரண்டு கிளாஸ் ஆல்கஹால் குடிப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்.

    ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒருவர் ஒரு கிளாஸ் ஆல்கஹாலை தினமும் குடித்தாலும் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதை புற்றுநோய் இதழில் வெளியிட்டுள்ளது.

    பொதுவாக ஆல்கஹால் குடிப்பதால் வயிறு, மார்பகம், உணவுக் குழாய் ஆகிய உறுப்புகளில் உருவாகும் புற்றுநோய் குறைவாகக் குடிப்பவர்களையும் அதேபோல் தாக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

    ஜப்பானில் அதிகப்படியான இறப்புகள் புற்றுநோயால் நிகழ்ந்துள்ளன என்பதால் என்ன காரணம் என்று ஆய்வு செய்துள்ளனர். அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 63,232 பேரிடம் ஆய்வு நடத்தியதில் அதில் பலருக்கும் தினமும் குறைவான ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

    மேலும் அந்த ஆய்வில் ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஆல்கஹாலை 10 வருடங்கள் குடிக்கிறார் அல்லது இரண்டு கிளாஸ் ஐந்து வருடங்கள் குடிக்கிறார் எனில் புற்றுநோய் பாதிப்பு ஐந்து சதவீதம் உருவாகும் என்று கண்டறிந்துள்ளது. இதோடு தகாத உறவுகள், புகைப்பழக்கம், தவறான வாழ்க்கை முறையை பின்பற்றும் நபருக்கு விரைவில் புற்றுநோய் உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளது.




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: