Home /News /lifestyle /

என்னது... சைக்கிள் ஓட்டுவது ஆண்மையை பாதிக்குமா..? இதற்கு என்னதான் வழி..?

என்னது... சைக்கிள் ஓட்டுவது ஆண்மையை பாதிக்குமா..? இதற்கு என்னதான் வழி..?

சைக்கிள் ஓட்டுவது ஆண்மையை பாதிக்குமா..?

சைக்கிள் ஓட்டுவது ஆண்மையை பாதிக்குமா..?

இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது, தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை, எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் உடலில் கொழுப்பைக் குறைப்பது என இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மை தரக் கூடியது.

சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் சைக்கிள் ஓட்டுவது சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு வேடிக்கையான விளையாட்டு. எப்போது என்றால், மெதுவாக அல்லது மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டும் போது அல்லது உங்களுடன் சைக்கிள் ஓட்டும் பார்ட்னரின் சவாலை ஏற்றுக்கொள்ளும் போது (ட்ராஃபிக் இல்லாத பூங்கா போன்ற சூழலில் சைக்கிள் ஓட்டுவதை உறுதிசெய்து கொண்டால் மட்டும்).

­இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது, தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை, எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் உடலில் கொழுப்பைக் குறைப்பது என இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மை தரக் கூடியது.

எப்போதும் உட்கார்ந்த நிலையில் இருப்பது விறைப்புச் செயலிழப்புடன் தொடர்புடையது. எனவே சைக்கிள் ஓட்டுவது ஒரு வகையில் அந்த ஆபத்தைக் குறைக்கும். அதே நேரத்தில், சைக்கிள் ஓட்டுவதும் உங்கள் விறைப்புத்தன்மைக்கு ஆபத்தாக அமையக் கூடிய ஒன்று.

விறைப்பு செயலிழப்பால் என்ன நடக்கும்?

பொதுவாக ஆண்மை குறைவு என்று அழைக்கப்படும் இந்த விறைப்புத்தன்மை செயலிழப்பு, உடலுறவுக்கு போதுமான விறைப்புத்தன்மையைப் பெறுவதற்கும் அதை உறுதியாக வைத்திருப்பதற்கும் இயலாத தன்மையே ஆகும். எப்போதேனும் ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனை குறித்து நாம் கவலைப்பட தேவை இல்லை. இருப்பினும், விறைப்புத்தன்மை ஒரு தொடர்ச்சியான பிரச்சனையாக இருந்தால், அது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.



உங்கள் நம்பிக்கையை பாதிக்கும் மற்றும் உறவுச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது உங்கள் பாலியல் குறித்த ஆசையிலும் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

சைக்கிள் ஓட்டுதல் மற்றும் விறைப்புத்தன்மை சைக்கிள் ஓட்டுவது விறைப்புத்தன்மைக்கு வழிவகுக்கலாம், தொடர்ந்து சீட்டின் நுனியில் அமர்ந்திருப்பது, உங்கள் அந்தரங்க உறுப்புகளை நசுக்கக்கூடும், இதனால் அந்தரங்க உறுப்புகளின் நரம்புகளில் அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக, குழந்தைப் பெறுவதை பாதிக்கும்.

திருமண வாழ்க்கையில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்..?

சைக்கிள் ஓட்டும் போது, ​​இருக்கையானது, பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் நிலையான அழுத்தத்தை அளிக்கிறது. இந்த அழுத்தம் நரம்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக மெதுவாக்கும். இது ஆணுறுப்பில் கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மையை ஏற்படுத்தலாம் மேலும் இது இறுதியில் விறைப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும்.



ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

போலந்தில் உள்ள வ்ரோக்லா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவு, சைக்கிள் ஓட்டும் ஆண்கள் இது போன்ற ஆபத்தை தடுக்க, சைக்கிள் ஓட்டும்போது, பத்து நிமிடத்திற்கு ஒருமுறையேனும், (பெடல்களின் உதவியுடன்) தவறாமல் சில நொடிகள் எழுந்து நிற்க வேண்டும் என்று கூறுகிறது. ஹார்வர்ட் சிறப்பு சுகாதார அறிக்கையின்படி, வாரத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சைக்கிள் ஓட்டும் ஆண்களுக்கே ஆபத்து அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்போ இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்...

சைக்கிள் ஓட்டுவதை நிறுத்த வேண்டுமா?

இந்த தகவல் சைக்கிள் ஓட்டுவது குறித்த அவநம்பிக்கையை உருவாக்குவதற்காக அல்ல, நீங்கள் விறைப்புத்தன்மை பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டுவதை உறுதிசெய்யவே.

சில உடல் அசைவுகளைப் பெறுவதற்காகத் தொடர்ந்து எழுந்து நிற்பது, அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் அழுத்தத்தைப் போக்க உதவும். உங்கள் சைக்கிள் பயணத்தை இனிதாக்கக்கூடிய கச்சிதமான சீட்களை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.



அகலமான சீட், அல்லது ஜெல் நிரப்பப்பட்ட சீட் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஐரோப்பிய சிறுநீரகத்துறையின் ஆய்வில், குறுகிய இருக்கைகள் ஆண்குறிக்கு செல்லும் ஆக்ஸிஜனை 82.4% குறைக்கின்றன. V-வடிவத்துடன் கூடிய குறுகிய இருக்கைகள் 72.4% வரை ஆக்சிஜன் அளவைக் குறைப்பது தெரிய வந்துள்ளது.

ஹேண்டில்பாரின் உயரம் இந்த ஆபத்துகளை தடுக்க உதவும். ஹேண்டில்பாரின் உயரம் சீட்டுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பது நல்லது. சீட்டின் உயரத்தை விடக் குறைவான உயரத்தில் இருக்கும் ஹேண்டில்பார்கள் விறைப்புத்தன்மையை பாதிக்கும்.

விஜய் தேவரகொண்டா கொஞ்சமும் இளமை குறையாமல் இருக்க என்ன காரணம்..? இதுதான் அந்த ஃபிட்னஸ் ரகசியம்

விறைப்புத்தன்மையை பாதிக்கும் பிற காரணிகள் :

சைக்கிள் ஓட்டுவதை தவிர, விறைப்புச் செயலிழப்புக்கு வழிவகுக்கும் பல ஆபத்து காரணிகளும் உள்ளன.

நீரிழிவு நோய் அல்லது இதய நோய் போன்ற மருத்துவ காரணிகள் இதில் அடங்கும். புகையிலை நுகர்வு; உடல் பருமன்; புராஸ்டேட் அறுவை சிகிச்சை அல்லது புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை போன்ற மருத்துவ சிகிச்சைகள்; antidepressants போன்ற மருந்துகள்; மற்றும் மதுபானங்களை மற்றும் போதை பொருட்களை உட்கொள்வது போன்றவை விறைப்புத்தன்மையை பாதிக்கும்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cycling, Erectile Dysfunction

அடுத்த செய்தி