ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஓரெழுத்து மாறியதால் விபரீதம்...! மருத்துவரால் பார்வைக்கோளாறு அடைந்த பெண்!

ஓரெழுத்து மாறியதால் விபரீதம்...! மருத்துவரால் பார்வைக்கோளாறு அடைந்த பெண்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மருத்துவர்களும் முடிந்த வரை மருந்துகளை எழுதும் போது கேப்பிடல் எழுத்துக்களை பயன்படுத்துங்கள் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஆண்குறி விறைப்புச் செயலிழப்பிற்குத் பயன்படுத்தப்படும் க்ரீமை கண்களில் பயன்படுத்தியதால் பெண் ஒருவர் பார்வைக் கோளாறு அடைந்த  சம்பவம் ஸ்கார்லாண்டில் உள்ள கிளாஸ்கோவ் சிட்டியில் நடந்துள்ளது.

ஸ்காட்லாந்திக் உள்ள கிளாஸ்கோவ் நகரில் வசிக்கும் பெயர் குறிப்பிடப்படாத அப்பெண் கடந்த வாரம் கண்களில் அதிக வறட்சிக் காரணமாக  மருத்துவரை அணுகியுள்ளார்.

சிகிச்சைக்குப் பின் மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கியுள்ளார்.  அந்தப் பெண்ணும்  மெடிக்கலில் வாங்கிய மருந்தை மருத்துவரின் அறிவுரைப்படி கண்களில் தடவியுள்ளார்.

இதனால் கண்கள் சிவந்து எரிச்சல் ஏற்பட்டுள்ளது. கூடவே கண்மணிகள் வீங்கி பார்வை மங்களாக தெரிந்துள்ளது. பயந்து போன அப்பெண்மணி உடனே மருத்துவர் அளித்த சீட்டை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அப்போதுதான் அதில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது கண் வறட்சிக்கு அளிக்கப்படும் மருந்தானது vitapos (vitA-POS) என எழுதியிருக்க வேண்டும். ஆனால் அது தவறுதலாக விறைப்புச் செயலிழப்பிற்கு எழுதப்படும் vitaros  என தவறுதலாக எழுதியுள்ளார்.

மருத்துவர்கள் மக்டலினா எடிங்டன், ஜுலி கோன்னலி, டேவிட் லாக்கிங்டன் என மூன்று பேர்  இணைந்த மருத்துவக் குழு இச்சம்பவம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வை முழுமையாக எந்தவித மறைவுகளின்றி வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது. காரணம், இதுபோன்ற சம்பவம் இனி நிகழக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கைக்காக வெளியிடுவதாக அந்தக் குழு கூறியுள்ளது.

மேலும், இனி மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் கேப்பிடல் எழுத்துக்களைப் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளது.

கண் வறட்சிக்கு பதிலாக மருத்துவரின் தவறுதலால்  ஆண் குறியின் விறைட்சி செயலிழப்பிற்குப் பயன்படுத்தப்படும் கிரீமைப் பயன்படுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு கண்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருத்துவர், மருந்து அளித்தவர், நோயாளி என அனைவரின் தவறும் அடங்கியிருக்கிறது.

விழியின் கோளாற்றுக்கு இந்த க்ரீம் ஏன் தடவ வேண்டும்? என்கிற சந்தேகம் மூவருக்கும் எழுந்திருக்க வேண்டும். அதேபோல்  ஒத்த எழுத்துக்களைக் கொண்ட மருந்துகளை தயாரிப்பதை மாற்றி அமைக்க வேண்டும்.

இதனால் ஒரு எழுத்து மாறினாலும் இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடும். மேலும் மருத்துவர்களும் முடிந்த வரை கேப்பிடல் எழுத்துக்களை பயன்படுத்துங்கள் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அந்தப் பெண்ணிற்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுப் பாதுகாப்பாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Also See...

Published by:Sivaranjani E
First published:

Tags: Scotland