முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Benefits of Oil Pulling | ”சின்ன வேலதான்… ஆனா அதிக பலன்…” - ’ஆயில் புல்லிங்’-ன் மலைக்க வைக்கும் நன்மைகள்!

Benefits of Oil Pulling | ”சின்ன வேலதான்… ஆனா அதிக பலன்…” - ’ஆயில் புல்லிங்’-ன் மலைக்க வைக்கும் நன்மைகள்!

ஆயில் புல்லிங் செய்வதனால் இயற்கையாகவே பல் மற்று ஈறுகளின் வீக்கம் குறைந்தும், பாக்டீரியாக்கள் அழிந்தும் வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

ஆயில் புல்லிங் செய்வதனால் இயற்கையாகவே பல் மற்று ஈறுகளின் வீக்கம் குறைந்தும், பாக்டீரியாக்கள் அழிந்தும் வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

ஆயில் புல்லிங் செய்வதனால் இயற்கையாகவே பல் மற்று ஈறுகளின் வீக்கம் குறைந்தும், பாக்டீரியாக்கள் அழிந்தும் வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

நம் பண்டைய நடைமுறைகளுள் ஒன்று ஆயில் புல்லிங் (Oil Pulling) ஆகும். நம் உடம்பை டீடாக்ஸ் (Detox) செய்ய இது பெரிதும் உதவுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. டீடாக்ஸிஃபிகேஷன் என்பது நம் உடம்பை சுத்திகரிக்கும் முறையாகும். ஆயில் புல்லிங் என்பது நம் வாயில் உள்ள பாக்டீரியாவை அகற்றி பற்கள் மற்றும் வேர்களில் சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஆயில் புல்லிங், பெரும்பாலும் நம் நாட்டில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்துடன் தொடர்புடையது ஆகும். ஆயில் புல்லிங் தினமும் செய்து வந்தால் வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் கொன்று பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் உறுதிபட தெரிவிக்கின்றன. நம் வாயை ஆரோக்கியமாக வைப்பது பல நோய்களிலிருந்து நம்மை காக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு ஒரு வழி, ஆயில் புல்லிங். இது நம் ஈறுகளை ஈரப்பதமாக்குவதால், வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் பாக்டீரியா அழிகிறது. இதனால் இயற்கையாகவே பல் மற்று ஈறுகளின் வீக்கம் குறைந்தும், பாக்டீரியாக்கள் அழிந்தும் வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

ஆயில் புல்லிங் செய்வது ஈறுகளில் வீக்கத்தைக் குறைத்து அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு சிறந்த தீர்வாக விளங்குகிறது. வாயில் ஈறு நோய்களை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சியை குறைக்க இது முழுவதுமாக உதவுகிறது.

ஆயில் புல்லிங் செய்வதால் இடைக்கும் நன்மைகள் ஏராளம். பற்கள் மற்றும் ஈறுகளுக்கு அவை நன்மைகள் சேர்ப்பது மட்டுமல்லாமல், நம் உடம்பை சுத்தம் செய்வதிலும் நன்மை பயக்குகின்றது.

வாயில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படும்:

நம்மில் பலரின் பிரச்சனைகளுள் ஒன்று வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவது. இது பேசுபவருக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் பெரும் பிரச்சனை. வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது ஈறுகளில் ஏற்படும் நோய். இதனால்தான் நாக்கில் பாக்டீரியாக்கள் தங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆயில் புல்லிங் முறை இதுபோன்ற பாக்டீரியாக்கள் உருவாக்கத்தை கட்டுப்படுத்தி துர்நாற்றத்தை ஒழிக்கிறது.

வாயில் உள்ள பாக்டீரியாக்களை ஒழிக்கும்:

ஒருவரது வாயில் சராசரியாக 700 வகையான பாக்டீரியாக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் உள்ள சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பற்சிதைவு, ஈறுகளில் நோய்களுக்கு வழிவகுத்து, வாயில் இருந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் வெளியான ஆய்வில், சராசரியாக 100 பேர் வீதம் கலந்துகொண்டதில் 50 சதவீதம் பேர் சாதாரண தண்ணீரில் வாயை சுத்தம் செய்தும், 50 சதவீதம் பேர் ஆயில் புல்லிங் முறையில் வாயை சுத்தம் செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் இதனை தொடர்ந்து 2 வாரங்கள் செய்தனர். அதில் ஆயில் புல்லிங் செய்வதனால் வாயில் எச்சில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

பல் சொத்தையை தடுக்கிறது:

பற்கள் சொத்தையாவது பற்சிதைவிலிருந்து உருவாகும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். முறையற்ற வாய் சுகாதாரம், அதிக சர்க்கரை சாப்பிடுவது போன்றவை அனைத்தும் பற்சிதைவுக்கு வழிவகுக்கும். இது பற்களில் துளைகள் ஏற்படுவது போல் உருவாகும் ஒன்றுதான் பற் சொத்தை எனப்படும்.

எனவே, ஆயில் புல்லிங் செய்வது வாயில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும், பற்கள் சிதைவதைத் தடுத்து பல் சொத்தை ஏற்படுவதையும் தடுக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சரி, ஆயில் புல்லிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்:

ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய்யை (நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்) வாயில் ஊற்றிக்கொள்ளவும்

பின், சுமார் 20 நிமிடங்கள் வாயில் அதனை கொப்பளிக்கவும் (குறிப்பு: எண்ணெய்யை கவனமாக கொப்பளிக்க வேண்டும், அதனை விழுங்கி விடாமல் கவனமாக செய்ய வேண்டும்)

பிறகு அந்த எண்ணெய்யை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும். உங்கள் வாஸ்பேசனிலோ அல்லது டாய்லெட்டிலோ துப்பினால் விரைவில் அசுத்தமாக எண்ணெய் படிந்துவிடும். எனவே, அதனை எங்கு அப்புறப்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை

துப்பியபின், மிதமான சுடுதண்ணீரில் வாயை சுத்தம் செய்ய வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில மாதங்கள் இதனை தினமும் செய்துவந்தால், மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை பலன்களும் நம் உடம்பிற்கு கிடைக்கும். முதலில் செய்பவர்கள் தொடர்ந்து 20 நிமிடங்கள் தாக்குபிடிக்க முடியவில்லை என்றால், முதல் சில நாட்கள் 5 முதல் 10 நிமிடங்கள் வரை செய்து பழகிக்கொள்ளலாம். உங்கள் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆயில் புல்லிங் பாதுகாப்பான மற்றும் சிறந்த இயற்கை தீர்வு முறை. ஆனால், உங்களுக்கு பற்களில் பெரிய பிரச்சனைகள் ஏற்படும் போது பல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

First published:

Tags: Detox, Healthy Life, Oral care