Home /News /lifestyle /

பெண்களை தீவிரமாக பாதிக்கும் எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன..? முழுமையான தகவல்

பெண்களை தீவிரமாக பாதிக்கும் எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன..? முழுமையான தகவல்

பெண்கள் நலம்

பெண்கள் நலம்

மாதவிடாய் தாமதம் ஆவது முதல், குழந்தையின்மை மற்றும் பெண்கள் ஆரோக்கியத்தையே குலைக்கும்படியான பிரச்சனைகள் ஏற்படும்.

சமீப காலமாக பெண்களை தீவிரமாக பாதிக்கக் கூடிய பல நோய்கள் மற்றும் குறைபாடுகள் காணப்படுகின்றன அதில் முக்கியமானது எண்டோமெட்ரியோசிஸ் இடப்படும் கருப்பையை பாதிக்கக் கூடிய ஒரு குறைபாடாகும். மாதவிடாய் தாமதம் ஆவது முதல், குழந்தையின்மை மற்றும் பெண்கள் ஆரோக்கியத்தையே குலைக்கும்படியான பிரச்சனைகள் ஏற்படும். எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் இந்த நோயைக் கையாள்வது எப்படி என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன

எண்டோமெட்ரியோசிஸ் என்பதை சாக்லேட் கட்டி என்றும் அழைப்பார்கள். எண்டோமெட்ரியம் என்பது கர்பப்பையின் லைனிங் ஆகும். இது கருப்பையின் வெளிப்புறத்தில், அதாவது ஃபாலோபியன் டியூப், வஜைனா, செர்விக்ஸ் அல்லது பிளாடர் உள்ளிட்ட பகுதியில் வளரலாம். இந்த பிரச்சனை இருக்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் அவ்வளவு எளிதாகத் தெரியாது. எனவே, ஒரு பெண் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரியவே பல ஆண்டுகள் ஆகலாம். அதற்குள், பெண்ணின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

எண்டோமெட்ரியோசிஸ் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன

பெரும்பாலான நேரங்களில், இதன் அறிகுறிகள் அவ்வளவாகத் தெரியாது. ஆனால், பொதுவாக ஒரு சில அறிகுறிகள் தென்பட்டால், எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகளாக இருக்கலாம்.

  • பாலியல் உறவுக்கு முன்னும் பின்னும் தீவிரமான வலி

  • அடிவயிறு மற்றும் கீழ் முதுகு வலி

  • மாதவிடாய் காலத்தில் தீவிரமான பாதிப்புகள்

  • ஒழுங்கற்ற மாதவிடாய்

  • அதிகப்படியான ரத்தப்போக்கு

  • மனச்சோர்வு, மன நிலையில் மாற்றங்கள்

  • அதீத சோர்வு




எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்தால் என்ன செய்ய வேண்டும்

எண்டோமெட்ரியோசிஸ் என்பது மருந்துகளால் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் கிடையாது. எனவே இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆகியவை தான் முக்கியமானதாக காணப்படுகிறது. வலி, தொற்று ஆகியவற்றை குறைப்பதற்கு மருத்துவர்கள் மருந்துகளை வழங்கினாலும் உணவு பழக்கம், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் மற்றும் வெல்னஸ் சென்று கூறப்படும் ஒட்டுமொத்தமாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆகிய நான்கு விஷயங்களுமே இந்த குறைபாட்டுக்கு தீர்வு கான உதவும்.

அதிகரிக்கும் டயரியா, வைரஸ் காய்ச்சல்... உஷ்ண நோய்களை தவிர்க்க செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பெரும்பாலான பெண்கள் தங்களின் உணவுப் பழக்கங்களை மாற்றினாலே இந்த பாதிப்பு குறைகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காய்கறி, தானியங்கள், சிறு தானியங்கள் பயிறு வகைகள், விதைகள், முட்டை மற்றும் மீன் ஆகிய உணவுகளை அதிகமாக சாப்பிடலாம். அதே போல பிராசஸ் செய்யப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சி, அதிகமான இனிப்பு, மற்றும் அதிகமான கொழுப்பு உள்ள உணவுகள், செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு பாக்கெட்டில் வரும் உணவுகள் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும்.

உணவுமுறை மாற்றங்களோடு மிதமான உயர் கூட பயிற்சியை சேர்த்தால் உடல் மற்றும் மனம் இரண்டின் ஆரோக்கியமும் மேம்படும். எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு இருக்கும் பெண்கள் தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ள கூடாது. எனவே நீச்சல், ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி ஆகிய மிதமான உடை உடற்பயிற்சிகளை தினமும் செய்து வரலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Women Health

அடுத்த செய்தி