முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாதவிடாய் வலியை சாதாரணமாக நினைத்து அலசியப்படுத்தாதீர்கள் : இந்த தீவிர பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

மாதவிடாய் வலியை சாதாரணமாக நினைத்து அலசியப்படுத்தாதீர்கள் : இந்த தீவிர பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி

எண்டோமெட்ரியோசிஸ் திசுக்களில் காணக்கூடிய திட்டுகளை அகற்ற அறுவை சிகிச்சை உதவக்கூடும், ஆனால் இது கர்ப்பமாவதற்கு உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வலி ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த வலி எதனால் ஏற்படுகிறது, இதை எப்படி குறைப்பது போன்ற பல கேள்விகள் இன்றளவும் பெண்களிடையில் நிலவி வருகிறது.

சில மாதவிடாய் வலிகள் நாம் நினைப்பது போன்று சாதாரணமானது அல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இனி இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம். பெண்களின் கருப்பையின் உள் பகுதி எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படுகிறது. இது மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்பு வழியாக உதிரப்போக்காக வெளியேறும்.

மேலும் எண்டோமெட்ரியோசிஸில், கருப்பையைத் தவிர, கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள், யோனி அல்லது குடல் போன்ற இடங்களில் இந்த புறணியின் துண்டுகள் உருவாக தொடங்குகின்றன. இதனால் சில பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமையை முன்கூட்டியே கண்டறிந்து கொண்டால் இதன் பாதிப்பை குறைக்க முடியும். பலர் மாதவிடாய் கால வலியை சாதாரணமான மாதவிடாய் வலி என்று நினைத்து அலட்சியம் செய்கிறார்கள். இயல்பான மாதவிடாய் வலிக்கும் வலிமிகுந்த எண்டோமெட்ரியோசிஸிற்கும் வேறுபாடுகள் உள்ளது.

எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். மேலும், எண்டோமெட்ரியோசிஸின் வலி அளவு எப்போதும் அசௌகரியத்தின் உச்சமாக இருக்கலாம்.

மாதவிடாய் வலியைத் தவிர, கிளாசிக் எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகளில் உடலுறவின் போது அல்லது அதற்குப் பிறகு வலி ஏற்படவும் கூடும். மேலும், மாதவிடாய் காலத்தில் வலிமிகுந்த குடல் இயக்கங்கள்; கடுமையான மாதவிடாய் அல்லது மாதவிடாய் இடையே இரத்தப்போக்கு, சோர்வு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வீக்கம் அல்லது குமட்டல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். குறிப்பாக உங்கள் மாதவிடாய் காலத்தில் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால் அவசியம் மருத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும்.

திடீரென்று உங்கள் உடல் எடை அதிகரிக்கிறதா..? பொதுவான காரணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்

மாதவிடாய் ஏற்படும் எந்தப் பெண்ணுக்கும் எண்டோமெட்ரியோசிஸ் வரலாம். இது பெரும்பாலும் 25 முதல் 40 வயதிற்குள் உள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் எண்டோமெட்ரியோசிஸ் தொடரலாம். எண்டோமெட்ரியோசிஸின் முக்கிய பிரச்சனை என்னவென்றால் கருவுறுதலில் சிக்கல் ஏற்படுவது தான். எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பெண்களில் 30% முதல் 50% வரை மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்படலாம்.

எண்டோமெட்ரியோசிஸ் திசுக்களில் காணக்கூடிய திட்டுகளை அகற்ற அறுவை சிகிச்சை உதவக்கூடும், ஆனால் இது கர்ப்பமாவதற்கு உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும், எண்டோமெட்ரியோசிஸ் உள்ள அனைத்து பெண்களுக்கும் கருவுறாமை பிரச்சினைகள் இருக்காது.

மேலும் இது சிறுநீர்ப்பையையும் பாதிக்கலாம். மேலும், இந்த அறிகுறிகள் மாதவிடாய் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும் மற்றும் பொதுவாக மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் நாட்களில் இது மோசமாகிவிடும்.

சிறுநீர்ப்பையில் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க கூடிய நிலை, சிறுநீர்ப்பை நிரம்பும்போது வலி, மாதவிடாய் காலங்களில் சிறுநீரில் அவ்வப்போது இரத்த போக்கு மற்றும் சில சமயங்களில் சிறுநீரகத்தின் பகுதியில் இடுப்பு வலி ஆகியவை சிறுநீர்ப்பை எண்டோமெட்ரியோசிஸின் அறிகுறிகளாக உள்ளது. எனவே இது போன்று உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவசியம் மருத்துவரை அணுகுங்கள்.

First published:

Tags: Periods pain