ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

13 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்த எலான் மஸ்க்.! அவரே சொன்ன ரகசியம்..

13 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்த எலான் மஸ்க்.! அவரே சொன்ன ரகசியம்..

பகிரப்பட்ட எலான் மஸ்கின் புகைப்படம்

பகிரப்பட்ட எலான் மஸ்கின் புகைப்படம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாறுமாறான உடல் ஷேப் மற்றும் தொப்பையுடன் பேர் பாடியில் காட்சியளிக்கும் எலான் மஸ்க் தற்போது ஃபிட்டான லுக்கில் இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமல்ல, நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலனானவரும் கூட. சமீப மாதங்களாக பல காரணங்களுக்காக உலகின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். ஆனால் இப்போது எலான் மஸ்க் தனது எடை குறைப்பு முயற்சிக்காக செய்திகள் இடம்பிடித்து உள்ளார்.

சமீபத்தில் ட்விட்டரை கையகப்படுத்திய எலான் மஸ்க், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 44 பில்லியன் டாலர் ட்விட்டர் ஒப்பந்தத்தை முடித்தார். அப்போது கிரீஸ் நாட்டில் இருந்த எலான் மஸ்க்கின் அப்போதைய ஃபோட்டோவும், தற்போது அவரது தோற்றத்தின் ஃபோட்டோவும் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாறுமாறான உடல் ஷேப் மற்றும் தொப்பையுடன் பேர் பாடியில் காட்சியளிக்கும் இவர் தற்போது ஃபிட்டான லுக்கில் இருக்கிறார்.

Read More : பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனஸுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருக்கா..? அறிகுறிகளை பகிர்ந்துகொண்ட இஸ்டா பதிவு..!

இந்த 2 ஃபோட்டோக்களும் ஒப்பிடப்பட்டு வைரலாகி வரும் நிலையில். தனது எடை குறைப்பிற்கான ரகசியத்தை எலான் மஸ்க்கே வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சில மாதங்களில் செய்யப்பட்டுள்ள மஸ்கின் வெற்றிகரமான எடை இழப்பை ட்விட்டர் யூஸர்கள் பாராட்டி இருக்கிறார்கள். மேலும் பல யூஸர்கள் எப்படி இவ்வளவு எடையைக் குறைக்க முடிந்தது மிவும் ஆச்சர்யத்துடன் கேட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தான் எவ்வாறு எடையை குறைத்தேன் என்பதற்கான சிம்பிள் ரகசியத்தை ஷேர் செய்து கொண்டுள்ளார். மேலும் வைராலகி வரும் போஸ்ட் உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சில மாதங்களில் சுமார் 30 பவுண்டுகள் அதாவது 13 கிலோவுக்கு மேல் எடையை குறைந்துள்ளதாக கூறி இருக்கிறார்.

தனது எடை குறைப்பிற்கான ரகசியம் இந்த மூன்று தான் என கூறி " உண்ணாவிரதம் + Ozempic / Wegovy (வெயிட் லாஸிற்கான மருந்து) + எந்த சுவையான உணவுகளையும் கைக்கெட்டாத தூரத்தில் வைத்திருப்பது" என்பதை எலான் மஸ்க் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் குறிப்பிட்ட மூன்றினை பற்றிய தகவல்கள்:

எலான் மஸ்க் பயன்படுத்துவதாக கூறும் Wegovy குறிப்பாக அதிக எடை மற்றும் உடல் பருமன் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அது நேரம் Ozempic டைப் 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுகிறது.
Ozempic மற்றும் Wegovy ஆகிய 2 மருந்துகளும் குடல் ஹார்மோன்களாக பயன்படுகின்றன என கூறப்படுகிறது. இந்த மருந்துகளின் அடிப்படை செயல்பாடு நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை சரியாக வைப்பதாகும்.
எடை இழப்பைப் பொறுத்தவரை இந்த மருந்துகள் இரைப்பை காலியாவதை தாமதப்படுத்துகின்றன, அதாவது உண்ணும் உணவு குடல் வழியாக மெதுவாக நகர்கிறது. இதனால் ஒருவர் நீண்ட நேரம் பசியின்றி நிறைவாக உணர்வார். பசியை குறைக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. 
இவற்றின் பக்க விளைவுகள் : மருந்து குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி, தலைவலி, சோர்வு, அஜீரணம், தலைச்சுற்றல், இரைப்பை குடல் அழற்சி போன்ற பல பக்க விளைவுகளை கொண்டுள்ளது FDA குறிப்பிட்டுள்ளது.
இதர வழிமுறைகள் :  மேற்காணும் மருந்துகளைத் தவிர மஸ்க்கின் எடை இழப்பு பயணத்தில் அவ்வப்போது இருக்கும் விரதமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் தான் அவ்வப்போது விரதம் இருந்து வருவதாகவும், உடல் எடையை நிர்வகிப்பதில் இந்த பழக்கம் பெரிதும் உதவுவதாகவும் மஸ்க் சில மாதங்கள் முன் சோஷியல் மீடியாவில் கூறியிருந்தார்.
கலோரி அதிகமுள்ள ஸ்னாக்ஸ்கள் மற்றும் ஜங்க் ஃபுட்ஸ்கள் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது அல்லது அவற்றின் மீதான ஆசை எடையை குறைக்க முயற்சிப்பவர்களின் மனஉறுதியை எளிதில் உடைக்கிறது. எனினும் மஸ்கின் கூற்றுப்படி இவற்றை உங்கள் உணவு பழக்கத்தில் இருந்து விலக்கி வைப்பது விரும்பிய எடையை பெற சரியான வழியாக இருக்கும்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Elon Musk, Weight loss