முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆல்கஹால் அதிகம் உட்கொள்வதால் உடலில் எலக்ட்ரோலைட் குறைபாடு உண்டாகுமா..?

ஆல்கஹால் அதிகம் உட்கொள்வதால் உடலில் எலக்ட்ரோலைட் குறைபாடு உண்டாகுமா..?

மது

மது

சந்தையில் பல்வேறு வித எலக்ட்ரோலைட் பானங்கள் கிடைத்தாலும் அவற்றில் அதிக அளவு சர்க்கரை கலந்து உள்ளதால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நமது உடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு தேவைப்படும் முக்கிய தாதுக்களில் எலக்ட்ரோலைட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தசை சுருக்கங்களை சரி செய்வது, உடலில் பிஎச் அளவீட்டை சமநிலையில் வைப்பது, நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்களை செய்வதற்கு எலக்ட்ரோ லைட்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பிட்ட அளவு எலக்ட்ரோலைட்டுகளில் கால்சியம், குளோரைடு, மெக்னீசியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவை அடங்கியுள்ளன.

ஆனால் நாம் அதிக அளவு ஆல்கஹாலை உட்கொள்ளும் போது இந்த செயல்பாடுகள் அனைத்திலும் பாதிப்பு உண்டாகிறது. முக்கியமாக உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தி பல்வேறு விதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையற்ற தன்மையால் என்ன வித பாதிப்புகள் உண்டாகும்?

நமது உடலில் சோடியம், மெக்னீஷியம் ஆகியவற்றின் அளவீடுகளில் குறைபாடுகள் உண்டாகும் போதோ அல்லது அளவுக்கு அதிகமாக அவை உட்கொள்ளும் போதும் சில நரம்பியல் சம்பந்தமான பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. அதேசமயம் அதிக அளவிலான பொட்டாசியம் இருப்பதோ அல்லது அளவுக்கு குறைவாகவோ இருக்கும்போது அவை அரித்மியா எனப்படும் சீரற்ற இதய துடிப்பு பாதிப்பை உண்டாக்குகின்றன.

ரத்தத்தில் குறைவான அளவு கால்சியம் இருந்தாலும் அரித்மியா நோய் உண்டாகக்கூடும். பைகார்பனேட் குறைபாடு ஏற்படும் போது உடலில் அதிக அளவு அமிலங்கள் சுரப்பதற்கு வித்திடுகிறது. இவை மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தி முடிவில் மரணத்தை கூட உண்டாக்க கூடும்.

தலைவலி, இரத்த அழுத்தத்தில் மாறுபாடு, மயக்கம், உடல் சோர்வு, தசைப்பிடிப்புகள் ஆகியவை உடலில் எலக்ட்ரோலைட் குறைபாடு உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்

ஆல்கஹால் உட்கொள்வதால் என்ன பாதிப்பு?

அதிகமான வியர்வை, சிறுநீர் கழித்தல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றின் மூலம் அதிக அளவிலான எலக்ட்ரோலைட்டுகள் நம் உடல் இருந்து வெளியேற்றபடுகிறது . அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த காரணங்களினால் இயற்கையாகவே உடலில் எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையற்ற தன்மை ஏற்படும். இதை தவிர உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் குறைபாடும் உண்டாகும்.

இவற்றைத் தவிர அதிக அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் போது அவை அதிக அளவில் சிறுநீர் கழிப்பதற்கு வழிவகை செய்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் மாறுதல்கள் உண்டாக்கி ஆண்டிடையூறிடிக் என்ற ஹார்மோன் சுரப்பதை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் மூளைக்கு சிக்னல்களை அனுப்பி சிறுநீரகத்தில் இருந்து நீர் வெளியேறுவதை குறைக்க செய்கிறது. இதன் காரணமாக சிறுநீர் கழிப்பதில் பாதிப்புகள் உண்டாகும்.

எப்படி சரி செய்வது,?

தினசரி மது அருந்துவது அல்லது அடிக்கடி மது அருந்தும் பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்தி உடலின் எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையை சரியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

Also Read : பால் குடிக்கும்போது இந்த 4 உணவுகளை தவறி கூட சாப்பிடாதீங்க : ஆபத்தில் முடியலாம்..!

இளநீர் மற்றும் பழச்சாறுகள் ஆகியவை உடலின் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் வைப்பதற்கு அதிகம் உதவுகின்றன. இவற்றைத் தவிர சந்தையில் பல்வேறு வித எலக்ட்ரோலைட் பானங்கள் கிடைத்தாலும் அவற்றில் அதிக அளவு சர்க்கரை கலந்து உள்ளதால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடும். எனவே முடிந்த அளவு இயற்கையான முறையில் வீட்டிலே தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களையும் பானங்களையும் உட்கொள்வதை சிறந்தது.

First published:

Tags: Alcohol, Alcohol consumption