எலும்புகளின் உறுதிக்கு உதவும் முட்டை ஓடுகள்! அதனை உண்பது எப்படி?

உணவில் போதுமான கால்சியம் எடுத்துக்கொள்ளாத குழந்தைகளுக்கு முட்டை ஓடு சிறந்தது.

Sivaranjani E | news18
Updated: September 12, 2019, 10:50 PM IST
எலும்புகளின் உறுதிக்கு உதவும் முட்டை ஓடுகள்! அதனை உண்பது எப்படி?
முட்டை ஓடு
Sivaranjani E | news18
Updated: September 12, 2019, 10:50 PM IST
பலருக்கும் முட்டை மிகவும் பிடித்த அசைவ உணவு. விருப்பமான உணவு மட்டுமல்லாது ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பதும் கூடுதல் ஆரோக்கியம்.

முட்டை சாப்பிடுவோர் பலரும் முட்டை ஓடை தேவையற்றது என தூக்கி எரிந்துவிடுவார்கள். உண்மையில் முட்டையைக் காட்டிலும் முட்டை ஓட்டில் தான் ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன என்பது தெரியுமா..?

”முட்டை ஓடுகளில் கால்சியம் கார்பனேட் அதிகமாக நிறைந்துள்ளது. அதுவும் இயற்கையான முறையில் கிடைக்கக் கூடியது. மற்ற கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களைக் காட்டிலும் முட்டை ஓட்டில் உள்ள அதிகளவிலான கால்சியம் உள்ளது . அதோடு எளிதில் உடலில் கரையக் கூடிய தன்மைக் கொண்டது. இதனால் எலும்புகள், பற்களுக்கு போதுமான கால்சியம் தாராளமாகக் கிடைக்கும் “ என்கிறார் ஊட்டச்சது நிபுணர் பிரீத்தி.


முட்டை ஓட்டில் கால்சியம் மட்டுமன்றி புரோட்டீன், ப்ளூரைட், மெக்னீசியம்,செலீனியம் போன்ற மைக்ரோ ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

ஒரு கிராம் முட்டை ஓட்டில் தோராயமாக 400 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. அதாவது அரை மூடி முட்டை ஓட்டில் 1000 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு 600 கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. ஆஸ்டியோ போரசஸ், ஆஸ்டியோ பீனியோ, மாதவிடாய் விலக்கு கொண்டோர் 1000 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. இவர்களுக்கு மிகப் பெரிய மூலாதாரம் முட்டை ஓடுதான் என்கிறார் பிரீத்தி.



Loading...

முட்டை ஓடை எப்படி சாப்பிட வேண்டும் ?

”முட்டை ஓட்டில் சால்மொனெல்லா பாக்டீரியா இருக்கும். இந்த பாக்டீரியா பொதுவாகவே இறைச்சிகளில் இருக்கும். எனவே பாக்டீரியாக்களை நீக்க முட்டையை 3 - 11 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பின் ஓடுகளை மட்டும் தனியாக உடைத்து எடுத்துக்கொள்ளவும். ஈரம் நீங்க காய வைத்து பின்னர் மிக்ஸியில் மைய அரைத்து பவுடராக்கி பாலில் கலந்தோ அல்லது அப்படியேவும் சாப்பிடலாம். இந்த முட்டை ஓடு பவுடரை நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்து வைக்கக் கூடாது. முட்டை ஓடு மட்டுமல்ல..பொதுவாகவே ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதால் ஆரோக்கியமற்றதாக மாறி ஃபுட் பாய்சனாக மாறும். எனவே மூன்று நாட்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பவுடரை சேமித்து வைக்கலாம். முடிந்தால் தினமும் தேவைக்கு மட்டும் பவுடராக்கி கலந்து குடிப்பது நல்லது. இல்லையெனில் உறைந்த நிலையில் வேண்டுமானால் இரு வாரத்திற்கு வைக்கலாம் “ என்கிறார் பிரீத்தி

பால் அலர்ஜி இருப்போருக்கு கால்சியம் தட்டுப்பாடு இருக்கலாம். அவர்கள் 2 ஸ்பூன் முட்டை ஓடு பவுடரை ஏதாவதொரு வழியில் உட்கொள்ளலாம்.

பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளிலும் கால்சியம் சத்து இருக்கும். எனவே அதற்கு ஏற்ப இந்த முட்டை ஓடு பவுடரை உட்கொள்ள வேண்டும். அதேபோல் உணவில் போதுமான கால்சியம் எடுத்துக்கொள்ளாத குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அரை ஸ்பூன் முட்டை ஓடுப் பவுடரை பாலில் கலந்து கொடுக்கலாம். பெரியவர்களுக்கு 2 ஸ்பூன் போதுமானது என்கிறார் பிரீத்தி.

சிலருக்கு ஷெல் அதாவது ஓடு அலர்ஜி இருக்கலாம். குழந்தைகளுக்கு முட்டை ஓடு கலந்து கொஞ்சமாக கொடுத்துப் பாருங்கள். தோலில் அரிப்பு, அலர்ஜி என எதுவும் தென்படவில்லை எனில் கொடுக்கலாம். இதேபோல் பெரியவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தாராளமாக சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம்.



ஆனால் அளவில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வேலை அதிக அளவிலான பவுடரைக் கலந்து கால்சியம் சத்து அதிகரித்துவிட்டால், வயிறுக் கோளாறு, வயிறு இறுகிப் பிடித்தல், வயிற்று மந்தம் போன்ற பிரச்னைகள் வரும். சிலருக்கு அலர்ஜியாகவும் வெளிப்படும்.

அதேபோல் முட்டை ஓட்டின் உள்ளே இருக்கும் சவ்வுத் தோலைக் கூட கொடுக்கலாம். அதிலும் அதிக அளவிலான கால்சியம் சத்து நிறைந்தது. அதை மூன்று நிமிடங்கள் வேக வைத்து உரித்து சேகரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது. ஒரு முட்டையின் சவ்வு போதுமானதாக இருக்காது. ஐந்து ஆறு முட்டைக்கு மேல் உள்ள சவ்வுகளை சேகரித்து சாப்பிட்டால்தான் கால்சியம் சத்து கிடைக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ப்ரீத்தி.

பார்க்க :

உடல் உறுப்புகளை தானம் கொடுப்பது எப்படி ? 






லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...