• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கழிவறையில் கூடுதலாக நேரம் செலவிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? - பட்டியலிடும் நிபுணர்கள்

கழிவறையில் கூடுதலாக நேரம் செலவிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? - பட்டியலிடும் நிபுணர்கள்

Toilet

Toilet

டாய்லெட்டில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது மூல நோய் ஏற்பட காரணமாக அமையும். ஒரு நபர் தனது நேரத்தை டாய்லெட்டில் எவ்வளவு நேரம் செலவிடுகிறாரோ, அவ்வளவு நேரம் ரத்தம் இந்த மலக்குடல் நரம்புகளில் குவிந்து மூல நோயை ஏற்படுத்தும்

  • Share this:
சமீப காலமாக டாய்லெட்டில் உட்கார்ந்து வழக்கத்தை விட அதிக நேரத்தை செலவிடும் பழக்கம் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மொபைலை நோண்ட வேறு இடமே இல்லாதது போல டாய்லெட்டில் உட்கார்ந்தபடி மொபைலை பயன்படுத்தி கேம்களை விளையாடுவது, புத்தகங்களை படிப்பது, இன்ஸ்டா பயன்படுத்துவது, மெயில் பார்ப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகளில் ஈடுபட்டு அதிக நேரம் செலவழிக்கின்றனர். இது உடலுக்கு தீமை விளைவிக்கும் பழக்கம் என்றும். கடுமையான உடல்நல கோளாறுகள் ஏற்பட இந்த தேவையற்ற பழக்கம் காரணமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

10 நிமிடங்களுக்கு மேல் டாய்லெட்டில் செலவிட கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உண்மையில்10 நிமிடங்களுக்கும் குறைவாக டாய்லெட்டில் நேரம் செலவழிக்கும் பழக்கம் சிறந்தது என்றும் குறிப்பிடுகின்றனர்.

கிருமிகள்..

மொபைலின் மேற்பரப்பு ஒரு டாய்லெட்டை விட அதிக கிருமிகளை கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதை கழிப்பறைக்கு எடுத்து சென்று பயன்படுத்துவதால் மொபைல் ஃபோன் இன்னும் பல மடங்கு கிருமிகளை பெறுகிறது. ஆறில் 1 ஃபோனில், குறிப்பிட்ட நபருக்கே தெரியாமல், அதன் மேற்பரப்பில் மலப் பொருட்களின் தடயங்கள் இருப்பதை சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியது.

Also read:  நடிகர் சூர்யா பட பாணியில் ஒரு உண்மை சம்பவம் - ஒரு துயர வாழ்க்கை..

மற்றொரு முக்கிய காரணம்..

அதே போல டாய்லெட்டில் செலவழிக்கும் நேரத்தை குறைக்க வேண்டியதற்கான மற்றொரு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. டாய்லெட்டில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது மூல நோய் ஏற்பட காரணமாக அமையும். ஒரு நபர் தனது நேரத்தை டாய்லெட்டில் எவ்வளவு நேரம் செலவிடுகிறாரோ, அவ்வளவு நேரம் ரத்தம் இந்த மலக்குடல் நரம்புகளில் குவிந்து மூல நோயை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்து கொண்டிருப்பது ஆசனவாயில் வலி, வீக்கம் அல்லது ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சராசரியாக 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் செலவிடுவது ஆசனவாயை சுற்றி இருக்கும் ரத்த நாளங்களையும் வீங்க செய்வதாக குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள்.

குடல் பிரச்சனை:

சிலர் இயல்பாகவே மலம் கழிக்க அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். அப்படி என்றால் மலம் கழிக்கும் போது தங்களை கஷ்டப்படுத்தி கொள்ளும் வகையில் மலக்குடலில் உள்ள நரம்புகளை அழுத்தும் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டும். டாய்லெட்டில் நீண்ட நேரம் செலவு செய்வது பற்றி கூறும் நிபுணர்கள் இங்கு ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்துவதில் பிரச்சனை இல்லை.

Also read:  செக்ஸ் மட்டுமே தேவை, உன்னை காயப்படுத்த விரும்பவில்லை - பாலியல் கொடூரன்

மாறாக நீண்ட நேரம் கழிப்பறையில் உட்கார ஸ்மார்ட் போன்களை ஒரு காரணமாக பயன்படுத்துவதில் தான் உண்மையான பிரச்சனை என்று குறிப்பிடுகிறார்கள். மலம் கழிக்க வேண்டும் என்ற உண்மையான உந்துதல் இருக்கும் வரை மட்டுமே நீங்கள் கழிப்பறையில் உட்கார வேண்டும். 2 நிமிடங்களுக்கு மேல் அந்த உந்துதல் இல்லை என்றால் உடனே எழுந்து விட வேண்டும். சிரமப்பட்டு முக்கி மலத்தை வெளியேற்ற நினைக்க வேண்டாம். மாறாக சிறிது நேரம் கழித்து மீண்டும் மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டால் மீண்டும் டாய்லெட்டிற்கு செல்லலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: