ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை பாதிப்புகளா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை பாதிப்புகளா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மக்களின் அதிக புழக்கத்தில் உள்ள பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா? அல்லது பாதிப்பை ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு தோசை மாவு முதல் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்குத் தேவையான ஸ்நாக்ஸ்கள் என அத்தனையும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளாகத் தான் நமக்கு கிடைக்கிறது. அதிலும் மக்களைக் கவரும் வகையில் வண்ணமயமான பேக்குகளுடன் சந்தையில் விற்கப்படுவதால் மக்கள் அதிகளவில் வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் ஆய்வு நடத்தியது.

குறிப்பாக ஆரோக்கியமான உணவுகள் என்றும் சில உணவுகள் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், பேக்கிங் செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவுகள் மக்களுக்கு பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உடல் பருமன் மற்றும் உடலில் தேவையற்ற கொழுப்பைத் தான் நமக்கு அளித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் நடத்திய ஆய்வின் படி, 93 சதவீத மக்கள் பேக்கிங் செய்யப்பட்ட உணவைத் தவறாமல் சாப்பிடுவதாகவும், 53 சதவீத பேர் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பேக் செய்யப்பட்ட உணவு அல்லது பானங்களை உட்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடைமுறையினால் தான் உடல் எடைக்குறைப்பிற்கென்று என்ன மெனக்கெட்டாலும் தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது.

Read More : குதிகால் வெடிப்பினால் அவஸ்தைப்படுகிறீர்களா..? இந்த 4 விஷயங்களை செய்தால் போதும்...

 எனவே இந்நேரத்தில் மக்களின் அதிக புழக்கத்தில் உள்ள பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா? அல்லது பாதிப்பை ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.

பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? டிடாக்ஸ் ஜூஸில் கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலவைத் தான் உள்ளது. இதனால் எவ்வித நன்மையும் நமக்கு ஏற்படுவதில்லை.
பேங்கிங் செய்யப்பட்ட  உணவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் குறைத்து நமது உடலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நீங்கள் எந்தவித பேங்கிங் செய்யப்பட்ட உணவுகளை நீங்கள் வாங்கினாலும் முதலில் நீங்கள் லேபிளில் உள்ள தகவல்களைச் சரிபார்ப்பது அவசியம்.
வநீங்கள் வாங்கும் பொருளில் எத்தனை சதவீதம் கலோரிகள் உள்ளது? என்னென்ன பொருள்கள்? எந்த சதவிகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது? என்பது குறித்த தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள் : நீங்கள் உங்களது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பல பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதில் எவ்வித பலனும் உங்களுக்குக் கிடைக்காது என்கிறது ஆய்வுகள்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.
சர்க்கரை நிறைந்த அதிக திண்பண்டங்களை சாப்பிடுவதைத் தவிர்த்து வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மட்டும் உங்களது டயட் ப்ளாணில் சேர்த்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Food