Home /News /lifestyle /

குளிர்காலத்தில் தலைவலி ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன வழி?

குளிர்காலத்தில் தலைவலி ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன வழி?

வழக்கமான உணவு, தூக்கம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவை குளிர்கால தலைவலியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வழக்கமான உணவு, தூக்கம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவை குளிர்கால தலைவலியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வழக்கமான உணவு, தூக்கம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவை குளிர்கால தலைவலியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆண்டு இறுதியில் துவங்கும் குளிர்காலம் காய்ச்சல், சுவாச பிரச்சனைகள், வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. சில பொதுவான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு குளிர்காலம் கடினமாக இருக்கும். குளிர் சீசனில் பலருக்கு வரும் எதிர்பாராத பிரச்சனைகளில் ஒன்று குளிர்கால தலைவலி (winter headache). குளிர்காலத்தில் தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கோல்டு ஸ்டிமியூலஸ் (cold-stimulus) தலைவலி. இது ஐஸ்கிரீம் தலைவலி (ice-cream headache) அல்லது மூளை உறை தலைவலி (brain-freeze headache) என்றும் அறியப்படுகிறது.

இது போன்ற தலைவலியை தவிர்க்க குளிர் சீசனில் நல்ல ஜில் காற்று வெளிப்படும் போது தலையை நனறாக கவர் செய்து கொள்ள வேண்டும் என்று நம் பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நேரங்களில் நீரிழப்பு, உணவுமுறை போன்ற மற்ற காரணிகளும், காற்றழுத்தத்தின் அதிகரிப்பு மற்றும் சூரிய ஒளியின் கால அளவு குறைவதால் ஏற்படும் வெப்பநிலையில் சரிவு உள்ளிட்டவை கூட இது போன்ற தலைவலியை மோசமாக்கும். இதற்கு குளிர் வறண்ட காற்று, நீரிழப்பு, தூக்க நடைமுறைகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் மோனோசோடியம் குளுட்டமேட் கொண்ட சூப்கள் உள்ளிட்ட உணவுகளை நாடுவது சில நேரங்களில் குளிர்கால தலைவலிக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

அதே போல குளிர்காலத்தில் மோசமாகி, குறிப்பிட்ட புள்ளிகள் மற்றும் பருவத்தில் ஏற்படுவது (டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில்) க்ளஸ்ட்டர் தலைவலி எனப்படுகிறது. குளிர்காலத்தில் காற்றோட்டம் இல்லாமல் ஜன்னல்களை மூடியே வைத்திருப்பதாலும் தலைவலி ஏற்படலாம். பகலில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் சிலருக்கு ஸ்ட்ரஸ் தலைவலி உருவாகும். பகல் நேரத்தில் வெளிச்சம் குறிவைத்து சிலருக்கு மனநிலையில் சோகத்தைத் தூண்டி இந்த தலைவலி ஏற்படுகிறது.

குளிர்காலத்தில் தலைவலியை தவிர்க்க செய்ய வேண்டியவை:

ஆரோக்கியமான உணவு, உடலை சீரான வெப்பநிலையில் வைத்து கொள்வது, நல்ல நிம்மதியான உறக்கம், அதிகப்படியான காஃபின் நுகர்வை தவிர்ப்பது, உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்வது உள்ளிட்டவற்றின் மூலம் இத்தகைய தலைவலிகளை தடுக்கலாம். வழக்கமான உணவு, தூக்கம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவை குளிர்கால தலைவலியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதையும் படிங்க | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!

  •  உங்கள் வீடுகளை நன்கு காற்றோட்டமாக வைத்திருங்கள் மற்றும் வெளியேற்ற விசிறிகளை (exhaust fan) பயன்படுத்தவும்.

  • இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவதோடு, ஆரோக்கியமான சிற்றுண்டிகளை அவ்வப்போது எடுத்து கொள்ளவும்.

  • அதிகப்படியான காஃபின், டீ, ஆல்கஹால் அல்லது புகையிலை பயன்பாட்டை தவிர்க்கவும்.

  • மீன் மற்றும் முட்டை போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை நன்றாக சாப்பிடுங்கள்.

  • ஒற்றைத் தலைவலியை தூண்டும் மோனோசோடியம் குளுட்டமேட் கலந்த சூப்களை தவிர்க்கவும்.

  • தினசரி 30 நிமிட மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் குளிர்கால தலைவலியை தடுக்க உதவும்.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Headache

அடுத்த செய்தி