கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு முதுகு வலி ஏற்படும். கர்ப்பத்தின் ஐந்து முதல் ஏழாம் மாதங்களில் இந்த வலியானது மிகவும் பரவலாக காணப்படுகிறது. பொதுவாக கீழ் முதுகு மற்றும் தொடைகள், கால்கள் வரை பரவுகிறது. அன்றாடம் வேலை செய்பவர்களுக்கு இந்த வலியானது இன்னும் மோசமடையக்கூடும், இதனால் தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்களில் கிட்டத்தட்ட 50-75 சதவீதம் பேர் இந்த வலியை அனுபவிக்கின்றனர். விரிவடையும் கருப்பையின் விளைவாகவும், இடுப்பு மற்றும் இடுப்பு முதுகெலும்புகளில் உறுதியற்ற தன்மை காரணமாகவும் முதுகுவலி ஏற்படுகிறது. இந்த வலி கூர்மையாகவும், கீழ் முதுகெலும்பில் அதிக அழுத்தத்தையும் ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி மிகவும் இயல்பானது, ஏனெனில் கருப்பையின் விரிவடைவதால் இடுப்பு எலும்பில் ஏற்படும் மாற்றங்கள் வலியை ஏற்படுத்தும்.
முக்கிய காரணங்கள்:
எடையில் ஏற்படும் மாற்றங்கள்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு 10-15 கிலோ எடை அதிகரிக்கிறது. மேலும் குழந்தை பிறகும் தேதி நெருங்கும்போது, உடல் படிப்படியாக குழந்தையின் எடையை உங்கள் கீழ் இடுப்பு பகுதிக்கு மாற்றுகிறது. இதனால் முதுகு வலி மேலும் அதிகரிக்கும்.
ஹார்மோன் மாற்றங்கள்: கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ரிலாக்சின் எனப்படும் ஹார்மோனை வெளியிடுகிறது. இது உடலில் தசைகளை தளர்த்துகிறது. இது உடலை மென்மையாக்குவதால் குழந்தை வளர எளிதாக இருக்கும். ரிலாக்ஸின் ஹார்மோன் முதுகெலும்பையும் தளர்த்துகிறது, இது முதுகு பகுதியில் உறுதியற்ற தன்மை மற்றும் வலியை ஏற்படுத்தும்.
மன அழுத்தம்: மன அழுத்தமும் முதுகில் தசை இறுக்கத்திற்கு வழிவகுக்கும். இது முதுகு வலிக்கு வழிவகுக்கும். எனவே யோகா , பாடல் கேட்பது, செடி வளர்ப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். முதுகுவலி பெரும்பாலும் மன அழுத்தம் காரணமாக ஏற்பட்டால், அதைப் பற்றி கவுன்சலிங் பெறுவது நல்லது. மேலும் நீங்கள் ஓய்வெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க அவை உங்களுக்கு வழிகாட்டுகிறது.
வீட்டு வைத்தியம்:
உங்கள் வலியைக் குறைக்க வீட்டில் இருந்தே நீங்கள் செய்யும் சில விஷயங்கள் உங்களுக்கு உதவும். வீட்டில் இருக்கும் போது சரியாக அமர்வது, நடைப்பயிற்சி போன்றவை அவசியம். போதுமான நேரம் ஓய்வு எடுப்பது உங்கள் வலியை குறைக்க உதவும். கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது போன்றவை கர்ப்பகாலத்தில் அவசியம்.
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலை வலுப்படுத்தும் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். கர்ப்பகாலத்தில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் உள்ளன. எனவே உங்கள் மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம். இது உங்கள் முதுகெலும்பில் உள்ளஅழுத்தத்தை எளிதில் குறைத்து வலியை நீக்கும். இதனால் நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும். தினமும் நடைப்பயிற்சி செய்வதும் நல்லது.
வாட்டர் பேக் சிகிச்சை:
உங்கள் முதுகில் ஒரு சூடான / குளிந்த நீர் அடங்கிய பேக் கொண்டு ஒத்தனம் கொடுப்பது முதுகு வலியை குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை நீங்கள் இந்த சிகிச்சையை கர்ப்ப காலத்தில் உங்கள் அடிவயிற்றில் இதனை பயன்படுத்த கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உட்காருவதில் கவனம் தேவை:
அன்றாட நடவடிக்கைகளை செய்யும்போது நீங்கள் நடப்பது, உட்காரும் முறை உங்கள் முதுகுவலியைக் குறைக்க உதவும். நேராக உட்கார்ந்திருப்பதை தவிர, தலையணைகளை முதுகு பக்கத்தில் வைத்து அமர்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்காமல் சற்று எழுந்து நடப்பது நல்லது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கர்ப்பகால பெல்ட்:
கர்ப்பகால பெல்ட் தற்போது அனைத்து மருந்தகங்களில் கிடைக்கிறது. அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். மகப்பேறு பெல்ட் என்பது ஒரு உள்ளாடை போன்றது, இது இடுப்பு மற்றும் கீழ் முதுகிற்கு ஒரு சப்போர்ட்டை கொடுக்கிறது. எனவே உங்களுக்கு கடுமையான வலி ஏற்பட்டால் இதனை பயன்படுத்தலாம்.
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு அழகான நேரம். இந்த நேரத்தை மிகவும் மறக்கமுடியாததாக மாற்ற நீங்கள் மேற்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lifestyle, Pregnancy, Pregnancy care, Pregnancy stretches