முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பன்றி காய்ச்சலை விரட்ட இந்த 5 உணவு பொருட்கள் போதும்...

பன்றி காய்ச்சலை விரட்ட இந்த 5 உணவு பொருட்கள் போதும்...

பன்றி காய்ச்சல்

பன்றி காய்ச்சல்

கர்ப்பிணிகள், ஆஸ்துமா, எம்பிஸிமா, நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்க்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள் அல்லது இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களிடம் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது கட்டாயம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2020ம் ஆண்டு கொரோனா உருவத்தில் நுழைந்த காய்ச்சல் பீதி தற்போது குரங்கு காய்ச்சல், தக்காளி காய்ச்சல் என புதிது புதிதாக தோன்றி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், தொற்று நோயில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?

பன்றி காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) என்பது சுவாச நோய்த்தொற்று ஆகும். இது பன்றிகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா என்ற வைரஸ் மூலமாக பரவக்கூடிய சுவாசம் சம்பந்தப்பட்ட நோயாகும். இது பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு விரைவில் தொற்றக்கூடியது. அதன் பின்னர் ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகின்றன. தற்போது பன்றிக்காய்ச்சல் நோய்க்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் இருப்பதால் மரண விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

பன்றி காய்ச்சல் அறிகுறிகள்:

காய்ச்சல், தலைவலி, இருமல், பலவீனம், உடல் வலி, சுவாசிப்பதில் பிரச்சனை, குளிராக உணர்வது, தொண்டை வலி ஆகியவை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் காணப்படும் பொதுவான அறிகுறிகள் ஆகும். நீர் கோர்த்தது போன்ற அல்லது வீங்கிய கண்கள், குமட்டல், சளித் தொந்தரவு ஆகியவையும் சில அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு நோயாளிகளிடம் தென்படலாம்.

கர்ப்பிணிகள், ஆஸ்துமா, எம்பிஸிமா, நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்க்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள் அல்லது இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களிடம் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது கட்டாயம்.

இந்நிலையில் பன்றி காய்ச்சலில் இருந்து தப்பிக்க உதவும் சில வீட்டுக்குறிப்புகள் பற்றி அறிந்துகொள்வோம்.

1. பூண்டு:

பூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள் உடலில் ஆக்ஸினேற்ற பண்புகளை அதிகரிப்பதோடு, பன்றிக்காய்ச்சல் தொடர்பான வைரஸையும் கண்டறிய உதவுகிறது. பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது, எனவே இது பன்றி காய்ச்சலுக்கு எதிரான சிகிச்சையில் பயனுள்ளதாகும். காலையில் வெறும் வயிற்றில் 2 பூண்டு விழுதுகளை விழுங்கி, வெது வெதுப்பான நீரை அருத்தவும்.

பருவமழையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 அற்புதமான மூலிகைகள்...

2. துளசி:

துளசி ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. துளசி இலைகளை மென்று சாப்பிடுவது தொண்டை மற்றும் நுரையீரலில் உள்ள தொற்றுக்களை அகற்ற உதவுகிறது. மேலும் பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்க்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிற்து.

3. நீரேற்றம்:

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வியர்வை போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் உடலில் அதிக அளவில் நீரிழப்பு ஏற்படுகிறது.எனவே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். மேலும் போதுமான அளவு நீர் அருந்துவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

பருவகால நோய்களை தடுக்க வேம்பு டீ தயாரிப்பது எப்படி..? நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க...

4. மஞ்சள் பால்:

மஞ்சள் பால் என்பது, காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் பரிட்சயமான வீட்டு வைத்தியம். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸினேற்ற பண்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே பன்றி காய்ச்சலின் பிரதான பிரச்சனைகளான சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க, வெது வெதுப்பான ஒரு கிளாஸ் பாலில், சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குடிப்பது நல்ல பலன் தரும்.

5. நெல்லிக்காய்:

‘ஏழைகளின் ஆப்பிள்’ என அழைக்கப்படும் நெல்லிக்கனியானது நோய் எதிர்ப்பு சக்தி பிரபலமானது. குறிப்பாக இந்தியாவில் விளையக்கூடிய நெல்லிக்காய்களில் பல்வேறு வகையான நோயை எதிர்த்து போராடக்கூடிய பண்புகள் நிறைந்துள்ளன. பன்றி காய்ச்சலை விரட்ட நெல்லிக்காயை அப்படியோவோ அல்லது சாறு எடுத்தோ உட்கொள்ளலாம்.

First published:

Tags: Swine flu symptoms