தேங்காய் எண்ணெய்யில் இத்தனை நன்மைகளா? நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தேங்காய் எண்ணெய் முடி கொட்டுவதில் இருந்தும் முடி சேதமடைவதிலிருந்தும் பாதுகாக்கும்.

தேங்காய் எண்ணெய் முடி கொட்டுவதில் இருந்தும் முடி சேதமடைவதிலிருந்தும் பாதுகாக்கும்.

  • Share this:
உடல் எடை குறைப்பு, டயட் பிளான்கள், வறண்ட சருமத்தில் இருந்து பாதுகாப்பது மற்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை தேங்காய் எண்ணெய் கொண்டுள்ளது. ’சூப்பர்ஃபுட்’ என்று அழைக்கப்படும் தேங்காய் எண்ணெய் குறித்த நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய் என்பது நீங்கள் காணக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். அதனாலேயே இது 'சூப்பர் ஃபுட்' என்று அழைக்கப்படுகிறது. உங்கள் உணவில் தேங்காய் எண்ணெய்யை அடிக்கடி சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தில் பல நல்ல தாக்கங்களை ஏற்படுத்தும்.

தேங்காய் எண்ணெய் உங்கள் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெய்யை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவது குறைவு என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. உடல் பருமனாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யில் உள்ள உணவு கொழுப்புகள் உங்கள் எடையை குறைக்கலாம். தேங்காய் எண்ணெய்யில் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் நல்ல கொழுப்புகள் உள்ளன. இது மற்ற வகை உணவுக் கொழுப்புகளை விட உடலில் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

Must Read | சியா விதைகளா? சப்ஜா விதைகளா?- உடல் எடையை எது விரைவாக குறைக்க உதவும்?

தேங்காய் எண்ணெய் முடி கொட்டுவதில் இருந்தும் முடி சேதமடைவதிலிருந்தும் பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் ஒரு சன்ஸ்கிரீனாக செயல்பட்டு சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களில் சுமார் 20 சதவிகிதத்தை தடுத்து நம்மை காக்கிறது. மேலும் பலர், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த காஸ்மெட்டிக் நோக்கங்களுக்காக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தி, தோல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கும். தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு உள்ளடக்கம் இருக்கின்ற போதிலும், கொலஸ்ட்ரால் அளவை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது. உண்மையில், தேங்காய் எண்ணெய்யில் இயற்கையான நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இது உடலில் HDL எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், LDL எனும் கெட்ட கொழுப்பிலிருந்து விடுபட உதவுகிறது.
Published by:Archana R
First published: