மார்பக புற்றுநோய் என்பது தற்போதைய காலகட்டத்தில் ஒரு தீவிரமான உடல்நலக் கவலையாகும். இது அதிக எண்ணிக்கையிலான பெண்களையும் சில சமயங்களில் ஆண்களையும் பாதிக்கிறது. புற்றுநோய் மருத்துவமனைகளின் ஆய்வின் படி, இந்தியாவில் சராசரியாக 28 பெண்களில் ஒருவர் தங்கள் உடலில் புற்றுநோயை வளர்க்கும் அபாயத்தில் உள்ளனர் என்று கூறுகின்றன. எனவே, உங்கள் மார்பக ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்காக தனிப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படக்கூடிய பல தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன. பாலினம், தவறான மரபணுக்கள், புற்றுநோயின் குடும்ப வரலாறு, வயது, மார்பகப் புற்றுநோயின் தனிப்பட்ட வரலாறு ஆகியவை மாற்ற முடியாதவை என்றாலும், மாற்றக்கூடியவை கண்டிப்பாக தடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படலாம். உங்கள் வாழ்க்கை முறையில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் மேம்படுத்தக்கூடிய மாற்றியமைக்கக்கூடிய மற்றும் புற்று நோய்களை எளிதாக தடுக்க முடியும். அவற்றை குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.
4 முக்கிய உணவு வகைகள்:
காலே (Kale): அதிக உட்டச்சத்து ததும்பும் காய்கறிகளுள் ஒன்று காலே. பச்சை இலை காய்கறிகளில் கரோட்டினாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
பெர்ரி: பெர்ரிக்களில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பரவலுக்கு எதிராக நம் உடலை பாதுகாக்கின்றன.
Must Read | உடல் எடை குறைப்பு: கட்டுக்கதைகளும்… உண்மைகளும்…
சால்மன்: சால்மன் போன்ற கொழுப்புள்ள மீன்களில், ஒமேகா-3 கொழுப்புகள், செலினியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம்மை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.
ப்ரோக்லி: ப்ரோக்லி உள்ளிட்ட காய்கறிகளில் குளுக்கோசினோலேட் கலவைகள் உள்ளன. அவை அதிக ஆன்டிகேன்சர் திறன்களைக் கொண்டுள்ளதால் ப்ரோக்லி உடலிற்கு அதிக நன்மை பயக்கும்.
எனவே, இந்த உணவுகளை அடிக்கடி நம் அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டால் புற்றுநோயை எளிதில் தடுத்துவிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breast Care, Healthy Life, Women Care