• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனாவிலிருந்து மீண்டவரா நீங்கள்? அப்ப கட்டாயம் இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..

கொரோனாவிலிருந்து மீண்டவரா நீங்கள்? அப்ப கட்டாயம் இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..

கொரோனா

கொரோனா

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு சில அடிப்படை உடற் பயிற்சிகளில் ஈடுபடுவது நன்மை தரும்.

  • Share this:
கொரோனாவில் மீண்ட பிறகு ஒருவர் மிக பலவீனமாக உணரலாம். எனவே இதுபோன்ற நேரத்தில் உங்கள் உடல் குணமடைய நேரம் ஒதுக்க வேண்டும் என்று வல்லுநர்கள் பலர் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு சில அடிப்படை பயிற்சிகளில் ஈடுபடுவது நன்மை தரும். ஆனால் எந்த பயிற்சி செய்ய வேண்டும், அதை எங்கு, எப்படி தொடங்குவது என்பது பற்றி தெரியவில்லையா? பிலேட்ஸ் பயிற்சியாளர் யாஸ்மின் கராச்சிவாலா என்பர் இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் பல பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவரது உடற்பயிற்சியின் தொகுப்பு உடல் விறைப்புத்தன்மையைக் குறைக்கவும், நுரையீரல் திறனை அதிகரிக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. இது கொரோனா பாதித்து மீண்டவர்களில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும். இந்த பயிற்சிகள் தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "நான் இந்த பயிற்சிகளை மிக மெதுவாக குறைந்த தீவிரத்துடன் செய்ய ஆரம்பித்தேன். என் உடல் நிலையை கருத்தில் கொண்டு என்னால் எந்த அளவு வசதியாகச் செய்ய முடியுமோ அவ்வளவு ரெப்ஸை மட்டுமே செய்தேன். இதன் மூலம் நல்ல ரெஸ்பான்ஸ் எனக்கு கிடைத்தது. இது கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு நாம் அனைவரும் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், ”என்று அவர் எழுதியுள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு ஒருவர் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள் இதோ..


 

Also Read : காலை உணவை 8 மணிக்கு மேல் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்து - ஆய்வு

* அபிடோமினல் பிரீதிங் டயபிராக்மாடிக் (Abdominal Breathing Diaphragmatic)

* பக்கவாட்டு நுரையீரல் சுவாசம் (Lateral Lung Breathing)

* சைட் பெண்ட்- ஒற்றை நுரையீரல் சுவாசம் (Side Bend – Single Lung Breathing)

* கேட் அண்ட் கவ் - முதுகெலும்பு அணிதிரட்டல் (Cat and Cow – Spine Mobilisation)

* ட்விஸ்ட் அண்ட் ஹோல்டு - மூச்சுடன் முதுகெலும்பு சுழற்சி (Twist and Hold - Spinal Rotation with Breath)

* மினி ஸ்வான் - தொராசிக் நீட்டிப்பு (Mini Swan – Thoracic Extension)

* இடுப்பு நெகிழ்வு நீட்சி - நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதால் இறுக்கத்தை விடுவித்தல் (Hip Flexor Stretch - Releasing tightness due to sitting all day)

* பட்டாம்பூச்சி நீட்சி - இடுப்பு, குளுட்ஸ், இடுப்பு மற்றும் உள் தொடையை நீட்டவும் (Butterfly Stretch – Stretch Hips, Glutes, Groin and Inner Thigh)

Also read :சாதம் சாப்பிட்ட பிறகு சோர்வாக இருப்பது ஏன்? தடுக்க இரண்டே வழிகள்!

இருப்பினும், கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்ட போது, அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "உங்கள் அறிகுறிகள் லேசாக இல்லாவிட்டால் அல்லது நீங்கள் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றால், தயவுசெய்து இந்த பயிற்சிகளில் எதையாவது செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்" என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவர் எப்போது இதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்?

கொரோனா நம் உடலில் நுரையீரலை முதன்மையாக பாதிக்கிறது என்பதால், நோயாளிகளின் சுவாச திறன் (நுரையீரல் திறன்) குறைகிறது. மேலும் அதன் உண்மையான திறனை மீண்டும் பெற பொதுவாக ஒரு மாதம் ஆகும். எனவே கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு உடல் ஆரோக்கியத்திற்கான பராமரிப்பு மிகவும் முக்கியமானது. இந்த சமயங்களில் நீட்சி, யோகா போன்ற நெகிழ்வுத்தன்மை பயிற்சிகள் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுதல், எடை தூக்குதல் மற்றும் எதிர்ப்பு பட்டைகளுடன் வேலை செய்வது போன்ற வலிமை பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் ஒரு புதிய உடற்பயிற்சியை செய்யத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிக அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: