இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

பொதுவாக, சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு உடலில் இரத்த சர்க்கரை அதிகரிக்கும்.

பொதுவாக, சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு உடலில் இரத்த சர்க்கரை அதிகரிக்கும்.

  • Share this:
நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் மிகவும் பிஸியாக இருக்கிறோம். பொதுவாக, சரியான உடற்பயிற்சிகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. இது நம் ஆரோக்கியத்தை நேரடியாகவே பாதிக்கிறது. நீங்கள் இதை தொடர்புபடுத்த முடிந்தால், பின்வரும் விஷயங்களை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

நீங்கள் தொடர்ந்து ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தபடியே சில உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளலாம். அல்லது இரவு உணவிற்குப் பிறகு நிதானமான நடைப்பயிற்சி செய்யலாம். இரவு உணவிற்குப் பிறகான நடைபயிற்சி, படுக்கை நேரத்திற்கும் இரவு உணவிற்கும் இடையிலான நேர இடைவெளியை அதிகரிக்கிறது; இது மிகவும் அவசியம். இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வதன் அதிக ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

செரிமானத்தை மேம்படுத்தும்:

இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி உங்கள் உடலை அதிக கேஸ்ட்ரிக் என்ஸைம்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கம், மலச்சிக்கலை குறைக்கிறது. மேலும், வயிறு தொடர்பான வேறு எந்த பிரச்சனையிலிருந்தும் தளர்வு அளிக்கிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்:

மெட்டபாலிசத்தை அதிகரிக்க எளிதான வழிகளில் ஒன்று, இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக படுத்துக்கொள்வதற்குப் பதிலாக நடைப்பயிற்சி செல்வது. இது நீங்கள் உறங்கும்போது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் உடலை நல்ல நிலையில் வைத்திருக்கும்.

Must Read | ஒரே மாஸ்க்கை துவைக்காமல் அடிக்கடி பயன்படுத்துறீங்களா? இதை கவனிங்க..!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

இரவு உணவிற்கு பிறகான நடைபயிற்சி, உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது, இதனால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். இதனையடுத்து, உங்கள் உள் உறுப்புகள் சிறப்பாக வேலை செய்யும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பல்வேறு நோய் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது, இதில் கொரோனா போன்ற கடுமையான நோய்களும் அடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்:

பொதுவாக, சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு உடலில் இரத்த சர்க்கரை அதிகரிக்கும். இருப்பினும், இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால், குளுக்கோஸ் உடலால் பயன்படுத்தப்படுகிறது. இது இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Published by:Archana R
First published: