• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வாரத்திற்கு 5 முறை இதை சாப்பிட்டால் ஆயுள் கூடுமாம்.. ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..

வாரத்திற்கு 5 முறை இதை சாப்பிட்டால் ஆயுள் கூடுமாம்.. ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..

காட்சி படம்

காட்சி படம்

வால்நட்டை வாரத்திற்கு 5 முறை சாப்பிட்டால் இறப்பு அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
வாழ்க்கை என்றாலே போர்க்களம் என்று பெரியவர்கள் கூறி கேட்டிருப்போம். ஏனென்றால் அடுத்த நிமிடம் நடப்பத்தை நம்மால் கணிக்க முடியாது.நாம் வாழும் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ செல்வம் தேவையில்லை, ஆரோக்கியமே போதும் என்று அனைவருக்கும் உணர்த்தியது 2020 ஆம் ஆண்டு.

இந்த கொரோனா காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது மிக மிக அவசியம். அந்த வகையில் ஒருவர் நீண்ட நாட்கள் வாழ்வதற்கான ரகசியத்தை ஹார்வர்ட் தலைமையிலான ஆய்வு கூறியுள்ளது.ஆம். வாரத்திற்கு 5 முறை வால்நட் சாப்பிடுவது மூலம் இறப்பு அபாயத்தை குறைப்பதற்கும், ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது என்று கண்டறிந்துள்ளது.

வால்நட் உட்கொள்ளாதவர்களுடன், வாரத்திற்கு ஐந்து வால்நட்  எடுத்துக்கொள்பவர்களை ஒப்பிடும் போது இறக்கும் அபாயம் 14 சதவிகிதம், இருதய நோய்களால் இறக்கும் அபாயம் 25 சதவிகிதம் மற்றும் சுமார் 1.3 வருட ஆயுட்கால அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியில் கண்டறிப்பட்டுள்ளது.

Also read : 50 வயதை தாண்டியவர்கள் தொடவே கூடாத 4 உணவுகள்!



ஒரு துணை உணவை உட்கொள்பவர்கள் கூட,வால்நட்டை எடுத்துக்கொள்வது 12 சதவிகிதம் இறப்பு ஆபத்து மற்றும் 26 சதவிகிதம் இருதய நோய்களால் இறக்கும் ஆபத்தை குறைக்கும் எனவும் கண்டறிப்பட்டுள்ளது.

 

Also read : இரவு சாப்பிட்ட உடனே தூங்க போய்டுவீங்களா ? அப்ப இதை கட்டாயம் படிங்க..

இந்த ஆய்வுக்காக, கடந்த 1986-ம் ஆண்டு சுமார் 67,014 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் சேர்ந்தபோது ஒப்பீட்டுளவில் ஆரோக்கியமாக இருந்தனர், தற்போது சமார் 20 ஆண்டுகள் ( 1998-2018 ) இதே உணவு முறையை பின்பற்றி வருகின்றனர்.இவர்களிடம் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் உணவு உட்கொள்ளல் மதிப்பீடு செய்யப்பட்டது,இந்த ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களின் ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளல் குறித்து ஆய்வு வெளியிடப்பட்டது.அவர்கள் வால்நட் மற்றும் வேர்க்கடலை வகைகளையும் உட்கொண்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் வால்நட்  உட்கொண்ட பங்கேற்பாளர்கள், வால்நட் உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு மற்றும் இருதய நோயகளால் இறக்கும் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: